13 May 2021 TAMIL Murli Today – Brahma Kumaris
12 May 2021
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Malayalam. Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! நீங்கள் பிரம்மா வாய் வழி பிராமணர்களாக இருக்கிறீர்கள், உங்களுக்குத்தான் தந்தையின் மூலம் ஞானத்தின் மூன்றாம் கண் கிடைத்துள்ளது, நீங்கள் இப்போது ஈஸ்வரிய மடியில் (பாதுகாப்பில்) இருக்கிறீர்கள்.
கேள்வி: -
வேறு எந்த தர்மமும் இருக்காத பிளவுபடாத (அத்வைத) இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வதற்கான ஆதாரம் என்ன?
பதில்:-
யோகபலம். புஜபலத்தின் மூலம் ஒருபோதும் பிளவு இல்லாத இராஜ்யத்தை ஸ்தாபானை செய்ய முடியாது. கிறிஸ்தவர்கள் ஒன்று பட்டுவிட்டால் முழு உலகின் மீது இராஜ்யம் செய்ய முடியும் அளவுக்கு அவர்களிடம் சக்தி உள்ளது. ஆனால் அது சட்டத்தில் இல்லை. உலகில் ஒரு இராஜ்யத்தின் ஸ்தாபனை செய்யும் வேலை ஒரு தந்தையுடையதே ஆகும்.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
ஆகாய சிம்மாசனத்தை விட்டு வாருங்கள். .
ஓம் சாந்தி. குழந்தைகளுக்கு ஓம் சாந்தி என்பதன் அர்த்தம் பல முறை புரிய வைக்கப் பட்டுள்ளது. ஓம் என்றால் நான் யார்? நான் ஆத்மா. இந்த சரீரம் என்னுடைய கர்மேந்திரியங்கள் ஆகும். நான் ஆத்மா பரந்தாமத்தில் வசிக்கக் கூடியவன். ஓ! தூர தேசத்தில் வசிப்பவரே, வாருங்கள் என பாரதவாசிகள் கூக்குரலிடு கின்றனர். ஏனென்றால் பாரதத்தில் தர்மத்திற்கு நிந்தனையும் துக்கமும் ஏற்பட்டுள்ளது. நீங்கள் மீண்டும் வந்து கீதையின் உபதேசத்தை செய்யுங்கள். சிவபாபா வாருங்கள் என கீதை (ஞானம்) குறித்துதான் கூறுகின்றனர், ஏனென்றால் அவர் அனைவருக்கும் தந்தை ஆவார். பாரதவாசிகளின் மீது மாயை இராவணனின் நிழல் விழுந்து விட்டுள்ளது, அதனால் அனைவரும் துக்கம் நிறைந்தவராகி தூய்மையற்றவராகியுள்ளனர் என சொல்கின்றனர். கூக்குரலிடுகின்றனர் – ரூபத்தை மாற்றி வாருங்கள் அதாவது மனித ரூபத்தில் வாருங்கள். ஆகவே, மனித ரூபத்தில் வருகிறேன். என்னுடைய வருகை தெய்வீகமானது, அலௌகிகமானதாகும். நான் கர்ப்பத்தில் வருவதில்லை, நான் வருவதே சாதாரண முதியவரின் உடலில் ஆகும் இப்படி தந்தை கூறுகிறார்.
நான் கல்பம் தோறும் என்னுடைய நிராகார ரூபத்தை மாற்றிக் கொண்டு வருகிறேன் என குழந்தை களாகிய நீங்கள் அறிவீர்கள். பரமபிதா பரமாத்மாதான் ஞானக்கடல் ஆவார். ஒருபோதும் கிருஷ்ணரை சொல்வதில்லை. நான் இந்த சாதாரண உடலில் வந்து உங்களுக்கு மீண்டும் சகஜ இராஜ யோகத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். உலகம் பதிதமாக (தூய்மையற்றதாய்) ஆகும் போது நான் வரவேண்டியிருக்கிறது. கலியுகத் திலிருந்து சத்யுகத்தை உருவாக்குவதற்காக நான் வருகிறேன். பிரம்மா, விஷ்ணு, சங்கரரின் படமும் இருக்கிறது. பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை, சங்கரனின் மூலம் வினாசம், பிறகு விஷ்ணுவின் மூலம் பாலனை. இந்த லட்சுமி நாராயணர் விஷ்ணுவின் இரண்டு ரூபங்கள் ஆவர். இதனை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பாபா மீண்டும் ரூபத்தை மாற்றிக் கொண்டு வந்துள்ளார். அவர் நம்முடைய சுப்ரீம் (பரம) தந்தையும் ஆவார், சுப்ரீம் ஆசிரியரும் ஆவார், சுப்ரீம் குருவும் ஆவார் மற்றபடி வேறு குருமார்கள் சுப்ரீம் என சொல்லப் படுவதில்லை. இவரோ தந்தை, ஆசிரியர், குரு ஆகிய மூவருமாக இருக்கிறார். லௌகிக தந்தை குழந்தைகளை பாலனை செய்து பின் அவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார். யாரோ ஒரு சிலர் அபூர்வமாக தந்தையே ஆசிரியராகவும் இருப்பார்கள். இப்படி யாரும் சொல்ல முடியாது. அனைத்து ஆத்மாக்களும் என்னை அழைக்கின்றனர், இறை தந்தை என சொல்கின்றனர் எனும்போது அவர் ஆத்மாவின் தந்தை ஆகிவிட்டார். இந்த பாடலும் பக்தி மார்க்கத்தினுடையது ஆகும். சத்யுகத்திலோ கூக்குரலிட்டு அழைப்பதற்கு மாயை இருப்பதே இல்லை. அங்கோ சுகமே சுகமாக இருக்கும். 5 ஆயிரம் வருடங்களின் சக்கரம் என நீங்கள் அறிவீர்கள். அரைக் கல்பம் சத்ய, திரேதா யுகம் பகலாகவும், அரைக்கல்பம் துவாபர-கலியுகம் இரவாகவும் இருக்கும். நீங்கள் பிரம்மாவின் வாய் வழி வம்சாவளி பிராமணர்களாக இருக்கிறீர்கள். பிரம்மாவின் அல்லது பிராமணர்களாகிய உங்களுடையதுதான் இரவு-பகல் என பாடப்படுகிறது. பகல் மற்றும் இரவின் ஞானமும் கூட குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளது. லட்சுமி நராயாணருக்கு இந்த ஞானம் இல்லை. இப்போது நீங்கள் சங்கமத்தில் இருக்கிறீர்கள், இப்போது பக்தி மார்க்கம் முடிந்து பகல் உதயமாகிறது. இந்த ஞானம் இப்போது உங்களுக்கு தந்தை மூலம் கிடைத்துள்ளது. கலியுகத்திலோ அல்லது சத்யுகத்திலோ இந்த ஞானம் யாரிடமும் இருக்காது, ஆகையால் பிரம்மாவின் பகல், பிரம்மாவின் இரவு என பாடப்படுகிறது. நீங்கள் இப்போது சூரிய-சந்திர வம்சத்தின் இராஜ்யத்தை அடைய முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். பின் அரைக் கல்பத்திற்குப் பிறகு இராஜ்யத்தை இழக்கிறீர்கள். இந்த ஞானம் பிராமணர்களாகிய உங்களைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. நீங்கள் தேவதைகள் ஆகி விடுவீர்கள், பிறகு இந்த ஞானம் இருக்காது. இப்போது இரவாக இருக்கிறது. சிவராத்திரியும் பாடப்படுகிறது. கிருஷ்ணருடைய தையும் ராத்திரி என்கின்றனர், ஆனால் அதனுடைய அர்த்தத்தைப் புரிந்துக் கொள்வதில்லை. சிவனின் ஜெயந்தி அதாவது சிவனின் அவதாரம் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட தந்தையின் (அவதார) நாளை (சிவ ஜெயந்தியை) குறைந்தது ஒரு மாதமாவது கொண்டாட வேண்டும். யார் முழு சிருஷ்டியை தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக்குகிறாரோ அவருடைய நினைவாக விடுமுறை கூட கொடுப்பதில்லை. நான் அனைவரையும் விடுவிக்கிறேன், வழிகாட்டியாகி அனைவரையும் அழைத்துச் செல்கிறேன் என தந்தை சொல்கிறார்.
இப்போது நீங்கள் இராஜயோகம் கற்பதற்கான முயற்சி செய்கிறீர்கள். தந்தை உங்களுக்கு ஞானத்தின் மூன்றாம் கண்ணைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆத்மாவின் ரூபம் என்ன என்பதும் கூட யாருக்கும் தெரியாது. ஆத்மாக்களாகிய நீங்கள் கட்டை விரல் அளவும் கிடையாது, அகண்ட ஜோதியும் அல்ல என தந்தை சொல்கிறார். நீங்கள் புள்ளி வடிவ நட்சத்திரமாக இருக்கிறீர்கள். நானும் கூட ஆத்மா, புள்ளி வடிவில் இருக்கிறேன், ஆனால் நான் மறுபிறவிகளில் வருவதில்லை. என்னுடைய மகிமையே தனிப்பட்டதாகும், நான் சுப்ரீம் ஆக (நிராகாரமாக) இருப்பதால் பிறப்பு இறப்பின் சக்கரத்தில் வருவதில்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் சரீரத்தில் வருகிறீர்கள். அப்போது 84 பிறவிகள் எடுக்கிறீர்கள், நான் இந்த சரீரத்தில் (பிரம்மாவின் சரீரத்தில்) பிரவேசம் செய்கிறேன். இதனை கடனாக எடுத்துள்ளேன். நீங்களும் ஆத்மாக்கள் என தந்தை புரிய வைக்கிறார். ஆனால் நீங்கள் தம்மை ஆத்மா என புரிந்து கொள்வதில்லை, ஆத்மாதான் தந்தையை நினைவு செய்கிறது. துக்கத்தில் எப்போதும் நினைவு செய்கின்றனர், ஓ பகவானே, ஓ இரக்க மனமுடைய பாபா இரக்கம் காட்டுங்கள். இரக்கத்தை வேண்டுகிறீர்கள், ஏனென்றால் அந்த தந்தையே ஞானம் நிறைந்தவர், ஆனந்தம் நிறைந்தவர், தூய்மை நிறைந்தவர் ஆவார். ஞானத்திலும் நிறைந்தவராக இருக்கிறார். ஞானக்கடல் ஆவார். மனிதர்களுக்கு இந்த மகிமையைக் கொடுக்க முடியாது. முழு உலகின் மீதும் ஆசீர்வாதம் செய்வது தந்தையின் காரியமேயாகும். அவர் படைப்பவர், மற்றவர்கள் படைப்பு ஆவர். படைப்பவர் படைப்பை படைக்கிறார். முதலில் மனைவியை தத்தெடுக்கிறார், பிறகு அவர் மூலம் படைப்பை படைக்கிறார், பின் அவர்களின் பாலனையும் செய்கிறார், வினாசம் செய்வதில்லை. இந்த எல்லைக்கப்பாற்பட்ட தந்தை வந்து ஸ்தாபனை, பாலனை, வினாசத்தை செய்விக்கிறார். ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் பாலனை செய்விக்கிறார். சத்யுகத்தின் தொடக்கத்தில் சட்டென இராஜ்யத்தின் ஸ்தாபனை ஆகிவிடுகிறது, மற்ற தர்மத்தினரோ தத்தமது தர்மத்தை ஸ்தாபனை செய்கின்றனர், பிறகு லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் வளர்ச்சி அடைந்து விடும்போது இராஜ்யம் ஏற்படுகிறது. இப்போது நீங்கள் இராஜ்யத்தின் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள். யோக பலத்தின் மூலம் நீங்கள் முழு உலகின் எஜமான் ஆகிறீர்கள், தோள் பலத்தின் மூலம் யாரும் ஒருபோதும் உலகின் மீது இராஜ்யம் செய்ய முடியாது. பாபா புரிய வைத்துள்ளார் – கிறிஸ்தவர்களிடம் அந்த அளவு சக்தி உள்ளது, அவர்கள் ஒன்று பட்டு விட்டால் முழு உலகையும் ஆள முடியும். ஆனால் புஜ வலிமையின் மூலம் உலக இராஜ்யத்தை அடைவது என்பது சட்டத்தில் இல்லை. நாடகத்தில் புஜ (உடல்) வலிமை மிக்கவர் உலகின் எஜமான் ஆகக்கூடிய இந்த சட்ட விதி கிடையாது.
தந்தை புரிய வைக்கிறார் – உலகின் இராஜ்யம் யோகபலத்தின் வாயிலாக என் மூலம் தான் கிடைக்கும். அங்கே எந்த பிரிவினையும் கிடையாது. பூமி, ஆகாயம் என அனைத்தும் உங்களுடையதாக இருக்கும். அது பிரிவு இல்லாத ஒரே (அத்வைத) இராஜ்யம் எனப்படுகிறது. இங்கே பல இராஜ்யங்கள் உள்ளன. 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு நான் இந்த இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன் என தந்தை புரிய வைக்கிறார். கிருஷ்ணரின் ஆத்மா இப்போது கற்றுக் கொண்டிருக்கிறது. கிருஷ்ணர் முதல் நம்பர் இளவரசனாக இருந்தார். அவர் இந்த சமயத்தில் 84 பிறவிகளின் இறுதியில் வந்து பிரம்மா ஆகியுள்ளார். சிருஷ்டியின் சக்கரம் எப்படி சுழல்கிறது என குழந்தைகளுக்குப் புரிய வைத்துள்ளார். பல தர்மங்கள் கண்டிப்பாக வினாசம் ஆக வேண்டியுள்ளது. ஒரு தர்மத்தின் ஸ்தாபனை ஆகி விடும். பாரதம்தான் 100% செல்வம் நிறைந்ததாக, தர்மத்தில் உயர்ந்ததாக இருந்தது. தேவதைகளின் கர்மங்களும் உயர்வானவையாக இருந்தன. அவர்களின் மகிமையாகத்தான் அனைத்து குணங் களிலும் நிறைந்தவர். . . என பாடப்பட்டுள்ளது. முதன் முதலில் தூய்மையாய் இருந்தனர், இப்போது தூய்மையற்றவராக ஆகியுள்ளனர் பிறகு தந்தை வந்து கணவன்-மனைவி இருவரையும் தூய்மை யாக்குகிறார். ரக்ஷா பந்தன் (ராக்கி) பண்டிகையை ஏன் இவ்வளவு விமரிசையாகக் கொண்டாடு கின்றனர் என்பது யாருக்கும் தெரியாது. தந்தைதான் வந்து இந்த இறுதிப் பிறவியில் நீங்கள் இருசாராரும் தூய்மையாய் இருங்கள் என வாக்குறுதி வாங்கினார். சன்னியாசிகளின் தர்மமே தனியானதாகும். ஞானம், பக்தி மற்றும் வைராக்கியம் – இது உங்களுக்காகவே ஆகும். நீங்கள் கவனித்திருக்கலாம் – கிறிஸ்தவ பாதிரியார்கள் நடக்கும்போது கண்கள் ஒரே பக்கமாக பார்த்தபடி இருக்கும், வேறு எங்கும் பார்ப்பதில்லை. கன்னியா ஸ்திரீகள் இருப்பார்கள் அல்லவா. அவர்கள் கிறிஸ்துவை நினைவு செய்கின்றனர். கிறிஸ்து இறைவனின் குழந்தை என சொல்கின்றனர். வெள்ளை ஆடை உடுத்தியவருடன் உங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. நீங்களோ ஆத்மாக்கள். ஒருவரைத் தவிர வேறு யாரும் இல்லை. ஒருவரைத்தான் நினைவு செய்ய வேண்டும். உண்மையான கன்னியாஸ்திரீகள் நீங்கள்தான் ஆவீர்கள். உங்களுக்கு ஆஸ்தி அந்த பாபாவிடமிருந்து கிடைக்க வேண்டும், அவரை நினைவு செய்தீர்கள் என்றால் அப்போதுதான் பாவ கர்மங்கள் அழியும், ஆகையால் தந்தையின் கட்டளை – என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். ஆத்மா பற்றிய நிச்சயம் இல்லாததால் கன்யாஸ்திரீகள் பிறகு கிறிஸ்துவை நினைவு செய்கின்றனர். இறைவன் யார் என்பது தெரியாது. முதன் முதலாக வரக்கூடிய பாரதவாசிகளுக்கே தெரியாது. லட்சுமி நாராயணருக்கு இந்த சிருஷ்டியின் ஞானம் இல்லை, அவர்கள் திரிகாலதரிசிகளும் அல்ல. பிராமணர் களாகிய நீங்கள் திரிகாலதரிசிகளாக ஆகிறீர்கள். சோழிகளாய் இருந்த உங்களை மாற்றி தந்தை வைரத்தைப் போல் ஆக்குகிறார். இப்போது நீங்கள் ஈஸ்வரிய மடியில் இருக்கிறீர்கள். உங்களுடைய இந்த கடைசி பிறவி மிகவும் மதிப்பு மிக்கதாகும். குறிப்பாக பாரதத்திற்கும், பொதுவாக முழு உலகிற்கும் நீங்கள் ஆன்மீகச் சேவை செய்கிறீர்கள். மற்றபடி அவர்கள் ஸ்தூலமான சமூக சேவகர்கள், நீங்கள் ஆன்மீக சேவகர்கள். உங்களுக்கு கற்றுத் தருபவர் பரம ஆத்மா ஆவார். தந்தையை நினைவு செய்யுங்கள் என அனைத்து ஆத்மாக்களுக்கும் கூறுங்கள். தந்தைதான் பதித பாவனர் (தூய்மையற்றவரை தூய்மையாக்குபவர்) எனப்படுகிறார். நீங்கள் கீழே இறங்குவதற்கு 84 பிறவிகள் பிடிக்கின்றன, ஏறுவதற்கு ஒரு வினாடி பிடிக்கிறது. உங்களுடையது இந்த மரணலோகத்தின் கடைசி பிறவியாகும். மரணலோகம் ஒழிக, அமரலோகம் வாழ்க என ஆகவுள்ளது. இது அமர கதை எனப்படுகிறது. அமரரான பாபா வந்து அமர ஆத்மாக்களான உங்களை அமரயுகத்திற்கு அழைத்துச் செல்வதற்காக அமரகதை சொல்கிறார். தந்தை சொல்கிறார் – நல்லது, மற்ற விஷயங்களை மறந்து போகிறீர்கள் என்றால் தன்னை ஆத்மா என நிச்சயப் படுத்திக் கொண்டு ஒரு தந்தையான என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். புத்தியின் தொடர்பை என்னுடன் ஈடுபடுத்தினீர்கள் என்றால் உங்களுடைய பாவங்கள் பஸ்மமாகி நீங்கள் புண்ணிய ஆத்மா ஆகிவிடுவீர்கள். நீங்கள் மனிதரிலிருந்து தேவதை ஆகிறீர்கள், இது புதிய விஷயம் அல்ல. 5 ஆயிரம் வருடங்கள் கழித்து தந்தை வந்து உங்களுக்கு ஆஸ்தி கொடுக்கிறார், இராவணன் பிறகு சாபம் கொடுக்கிறார் – இது விளையாட்டாகும். பாரதத்தின் கதைதான் ஆகும். இந்த விஷயங் களை தந்தைதான் புரிய வைக்கிறார், எந்த வேத சாஸ்திரங்களிலும் கிடையாது ஆகையால் இறைத் தந்தைதான் ஞானம் நிறைந்தவர், அமைதி நிறைந்தவர், ஆனந்தம் நிறைந்தவர் என சொல்லப் படுகிறார். உங்களையும் தனக்குச் சமமாக ஆக்குகிறார். நீங்களும் பூஜைக்குரியவர்களாக இருந்தீர்கள் பிறகு பூஜாரி ஆகிறீர்கள். நீங்களே பூஜைக்குரியவர்கள், நீங்களே பூஜாரிகள். இது பகவானைக் குறிப்பதல்ல. பாரதவாசிகளாகிய உங்களுடைய விசயம் ஆகும், நீங்கள் முதலில் ஒரு சிவன் மீது மட்டுமே பக்தி செய்து கொண்டிருந்தீர்கள். கலப்படமற்ற பக்தி செய்தீர்கள், பிறகு தேவதைகளின் பூஜை செய்யத் தொடங்கினீர்கள், பிறகு கீழே இறங்கியபடி வந்தீர்கள். இப்போது மீண்டும் நீங்கள் தேவி தேவதைகளாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள், குறைவாகப் படிப்பவர்கள் பிரஜையில் சென்று விடுவார்கள். நல்ல விதமாக படித்து படிக்க வைப்பவர்கள் இராஜ்யத்தில் வருவார்கள். அளவற்ற பிரஜைகள் உருவாகுவார்கள். ஒரு மகாராஜாவுக்கு லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பிரஜைகள் இருப்பார்கள். நீங்கள் முயற்சி செய்வதே கல்பத்திற்கு முன்பு போல. மாலையில் வருபவர்கள் யார் யார் என்பது முயற்சியிலிருந்து தெரிந்து விடும். பிரஜைகளிலும் சிலர் ஏழைகளாகவும், சிலர் செல்வந்தர்களாகவும் ஆவார்கள். பக்தி மார்க்கத்தில் ஈஸ்வரனின் பெயரால் தானம் செய்கின்றனர். ஈஸ்வரனிடம் (செல்வம்) இல்லையா என்ன? அல்லது கிருஷ்ணார்ப்பணம் என சொல்கின்றனர். ஆனால் உண்மையில் ஈஸ்வர அர்ப்பணம், மனிதர்கள் செய்வதற்கான பலன் அடுத்த பிறவியில் கிடைக்கிறது. ஒரு பிறவிக்கு கிடைக்கிறது. இப்போது தந்தை சொல்கிறார் – நான் உங்களுக்கு 21 பிறவிகளின் ஆஸ்தியைக் கொடுப்பதற்காக வருகிறேன். என் பெயரால் நேரடியாக நீங்கள் எது செய்தாலும் 21 பிறவிகளுக்கு அதற்கான பிராப்தி கிடைத்து விடும். மறைமுகமாக செய்தால் அதனுடைய பலன் ஒரு பிறவிக்கு, அல்ப காலத்தின் சுகம் கிடைத்து விடும். உங்களுடைய இவையனைத்தும் மண்ணோடு மண்ணாகப் போகிறது, ஆகையால் உள்ளதை நல்ல பலனுள்ளதாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். நீங்கள் இந்த ஆன்மீக மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்தை திறந்தபடி செல்லுங்கள், இங்கிருந்து அனைவரும் எப்போதும் ஆரோக்கியமிக்கவராகவும், செல்வம் மிக்கவராகவும் ஆவார்கள், இதன் மூலம் நிறைய வருமானம் ஏற்படும். நினைவின் மூலம் ஆரோக்கியம் மற்றும் சக்கரத்தை அறிவதன் மூலம் செல்வம் கிடைக்கும். ஆகவே வீடுகள்தோறும் இப்படிப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவமனையை திறந்தபடி இருங்கள். பெரிய மனிதராக இருந்தால் பெரியதாக தொடங்குங்கள், அங்கே நிறைய பேர் வர முடியும். பெயர்ப் பலகையில் எழுதி வையுங்கள். இயற்கை வைத்தியம் செய்பவர்கள் எழுதிப் போடுவது போல. தந்தை முழு உலகின் இயற்கையை மாற்றி தூய்மைப்படுத்தி விடுகிறார். இந்த சமயம் அனைவரும் தூய்மையற்றவராக உள்ளனர். முழு உலகையும் எப்போதும் ஆரோக்கியம் மிக்கவராகவும், செல்வம் மிக்கவராகவும் ஆக்குபவர் தந்தை, அவர் இப்போது குழந்தைகளாகிய உங்களை படிப்பித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் மிகவும் இனிமையான குழந்தைகள். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1. தனது இந்த மதிப்பு மிக்க வாழ்க்கையை ஆன்மீகச் சேவையில் ஈடுபடுத்த வேண்டும். குறிப்பாக பாரதம், பொதுவாக முழு உலகிற்கும் சேவை செய்ய வேண்டும்.
2. தனது அனைத்தையும் நற்பலனுள்ளதாக ஆக்கிக் கொள்வதற்காக நேரடியாக ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும். ஆன்மீக மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்தை திறக்க வேண்டும்.
வரதானம்:-
யாருக்கு எண்ணத்திலும் கூட தேக உணர்வு இல்லையோ, அவர்களை தான் சம்பூரண சமர்ப்பணம் என்று சொல்லப்படுகிறது. தனது தேகத்தின் உணர்வை கூட அர்ப்பணம் செய்து விடுவது, நான் இன்னாராக இருக்கிறேன் – இந்த எண்ணத்தை கூட அர்ப்பணம் செய்து சம்பூரண சமர்ப்பணம் ஆகக்கூடியவர்கள் அனைத்து குணங்களிலும் நிரம்பியவர் ஆகிறார்கள். அவர்களிடத்தில் எந்தவித குணத்திலும் குறை இருக்காது. யார் அனைத்தையும் சமர்ப்பணம் செய்து அனைத்து குணங்களில் நிரம்பியவர் மற்றும் (சம்பூரணம்) முழுமையாக ஆகக்கூடிய இலட்சியத்தை வைக்கிறார்களோ, எனவே அப்படிப்பட்ட முயற்சியாளர்களை பாப்தாதா சதா வெற்றியாளர் ஆகுக என்ற ஆசீர்வாதம் கொடுக்கிறார்.
சுலோகன்:-
மன்மனாபவ என்ற நிலையில் நிலைத்திருக்க முடியும்
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!