10 March 2022 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
9 March 2022
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! எந்த பகவானை முழு உலகமுமே நினைவு செய்கிறதோ, அவர் உங்கள் முன்னால் அமர்ந்துள்ளார். நீங்கள் அப்படிப்பட்ட தந்தையிடமிருந்து முழு ஆஸ்தியை பெற்றுக் கொள்ளுங்கள். மறக்காதீர்கள்.
கேள்வி: -
தந்தையின் ஸ்ரீமத் படி யதார்த்த ரீதியில் செல்வதற்கான சக்தி எந்தக் குழந்தைகளுக்கு உள்ளது?
பதில்:-
யார் தங்களுடைய உண்மையிலும் உண்மையான கணக்கை பாபாவிடம் சொல்லி ஒவ்வோர் அடியிலும் பாபாவிடம் அறிவுரை பெற்றுக் கொள்கிறார்களோ, அவர் களுக்கு அந்த சக்தி உள்ளது. பாபாவிடமிருந்து அறிவுரை பெற்றுக் கொண்டால் அதன் படி நடப்பதற்கான சக்தியும் கிடைத்து விடுகிறது. பாபா குழந்தைகளுக்கு ஸ்ரீமத் கொடுக் கிறார் குழந்தைகளே, அந்த ஸ்தூலமான வருமானத்திற்குப் பின்னால் போய், இந்த வருமானத்தை இழந்து விடாதீர்கள். ஏனென்றால் அந்த ஒன்றுக்கும் உதவாத வருமானம் முழுவதும் அழிந்து விடப் போகிறது. ஒவ்வொரு விசயத்திலும் ஸ்ரீமத் பெற்று மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். கவன மாகச் செல்ல வேண்டும். தனது சொந்த வழிமுறையை நடத்தக் கூடாது.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
ஆகாய சிம்மாசனத்தை விட்டு இறங்கி வாருங்கள்
ஓம் சாந்தி. இப்போது குழந்தைகள் முன்பாக அமர்ந்துள்ளனர். யாருக்கு முன்பாக? எல்லையற்ற தந்தை மற்றும் தாதாவின் முன்பாக இவர் மிக அதிசயமானவர். எல்லையற்ற தந்தை பரமபிதா பரமாத்மா மற்றும் பிறகு எல்லையற்ற தாதா பிரஜாபிதா பிரம்மா, இருவரும் முன்னால் அமர்ந்துள்ளனர். யாருக்கு முன்னால்? குழந்தைகளுக்கு முன்பாக. ஆக, ஈஸ்வரிய குடும்பம் அமர்ந்துள்ளதாக ஆகிறது. மேலும் எல்லையற்ற தந்தை அமர்ந்து குழந்தை களுக்குப் படிப்பு (ஞானம்) சொல்லித் தந்து கொண்டிருக்கிறார் அல்லது சகஜ இராஜயோகம் கற்பித்துக் கொண்டி ருக்கிறார். இது புத்தியில் இருக்குமானால் குஷியின் அளவும் அதிகரிக்கும். பாடலும் இது போல் பாடுகின்றனர் பாபா வாருங்கள், இச்சமயம் அதிக துக்கம் உள்ளது. அழைப்புக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் இங்கே உங்கள் முன்னால் அமர்ந்துள்ளார். நீங்கள் அறிவீர்கள், எல்லையற்ற தந்தை இந்த தாதா மூலம் நமக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறார். குழந்தைகளிலும் கூட நம்பர்வார் புருஷார்த் தத்தின் அனுசாரம் புத்தியில் நிச்சயம் உள்ளது. வக்கீலுக்குப் படிக்கின்றனர் என்றால் நிச்சயமாக புத்தியில் இருக்கும் இல்லையா இவர் நமக்கு வக்கீலுக்கான படிப்பை சொல்லித் தருகிறார். இன்ன சர்ஜன் நமக்கு சர்ஜரி சொல்லித் தருகிறார். இது அதிசயமான விஷயமாக உள்ளது, அதாவது அவ்வப்பொழுது சொல்கின்றனர் எங்களுக்கு பக்கா நிச்சயம் உள்ளது, எல்லையற்ற தந்தை நிராகார் நமக்குக் படிப்பிக்கிறார், இராஜயோகம் கற்பிக்கிறார். அவ்வப்போது எங்காவது வெளியில் தூரமாகச் சென்று விட்டால் நிச்சயம் விட்டுப் போகிறது. இது அதிசயம் இல்லையா? எந்த பகவானை முழு உலகமுமே நினைவு செய்கிறதோ, அவரே குழந்தைகள் முன் அமர்ந்து சொல்கிறார் குழந்தைகளே, இப்போது நல்லபடியாக பாபாவிடம் ஆஸ்தி பெறுவதற்கான புருஷார்த்தம் செய்யுங்கள். புரிந்து கொண்டும் இருக்கிறீர்கள், பிறகு ஒரு விநாடியில் மறந்து போகிறீர்கள். நீங்கள் எல்லையற்ற தந்தைக்கு முன்பாக அமர்ந்திருக்கிறீர்கள். மேலும் ஒவ்வோரடியிலும் ஸ்ரீமத் படி நடக்க வேண்டியுள்ளது. ஆனால் யாரைப் பற்றிய செய்தி முழுவதும் பாபாவுக்குத் தெரிந்திருக்கிறதோ, அவர்கள் தான் அவ்வாறு நடப்பார்கள். குழந்தைகளின் இருப்பிடம், செயல் (நடைமுறை செயல்பாடு) முதலிய அனைத்து செய்திகளும் பாபாவிடம் வந்தாக வேண்டும். அப்போது பாபா விற்க்கும் தெரிய வரும். மேலும் அவ்வப்பொழுது அறிவுரை தந்து கொண்டே இருப்பார். ஒவ்வோரு அடியிலும் ஸ்ரீமத் பெற்றுக் கொள்ள வேண்டும். இது காட் ஃபாதர்லி யுனிவர்சிட்டி. இதில் நன்றாகப் படிக்க வேண்டும். இன்று படிக்கின்றனர். பிறகு ஏதேனும் வேலை வந்தால் படிப்பைத் தவற விட்டு விடுகிறார்கள் என்று இருக்கக் கூடாது. அந்த வேலைகள் எல்லாம் ஒரு பைசா பெறாதவை. இந்த உலகத்தில் மனிதர்கள் என்னென்ன வருமானம் சேமிக்கிறார் களோ, அது நிரந்தரமாக இருக்கப் போவதில்லை. அனைத்தும் அழிந்துவிடப் போகின்றன. தந்தை குழந்தைகளுக்காகச் சேமிக்கிறார். நம் குழந்தைகள், பேரக் குழந்தைகள் அனுபவிப் பார்கள் என நினைக்கிறார். பிறகு குழந்தை எப்போது தந்தையாக ஆகிறானோ, அப்போது அவன் தன்னுடைய குழந்தைகளுக்காக முயற்சி செய்வான். இப்போதோ விநாசம் முன்னாலேயே நின்று கொண்டுள்ளது.
எப்போது தந்தைக்கு தன் குழந்தைகள் பற்றிய கணக்கு வழக்கு தெரிய வருகிறதோ, அப்போது அறிவுரை தருவார். ஒவ்வோரடியிலும் கேட்க வேண்டி உள்ளது. ஏதேனும் விகர்மம் ஆகி விடும் என்பதல்ல. இது எல்லையற்ற வீடு. எல்லைக்குட் பட்ட வீட்டில் லௌகிக் தந்தை புரிய வைப்பது போல் எல்லையற்ற தந்தை புரிய வைக்கிறார். நாம் பிராமணர்கள் என்பதை குழந்தைகள் அனைவரும் அறிவார்கள். யாரிடமாவது கேளுங்கள் பகவான் உங்களுக்கு என்ன உறவு வேண்டும்? அப்போது அவர் அனைவருக்கும் தந்தை எனச் சொல்வார்கள். பிறகு கேளுங் கள், அவர் எங்கே வசிக்கிறார்? அப்போது அவர் சர்வ வியாபி எனச் சொல்லி விடுவார்கள். எல்லையற்ற தந்தை பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. குழந்தைகள் நீங்கள் இப்போது தந்தை பற்றி மிகச் சரியாக தெரிந்து கொண்டிருக் கிறீர்கள் என்பதால் நீங்கள் தெய்விக வழி முறைப் படி நடக்க வேண்டும். பாபா வந்திருக்கிறார், தேவிதேவதை ஆக்குவதற்காக. ஒவ்வோர் அடியிலும் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். பண்டாக்கள் (வழிகாட்டிகள்) யாத்திரையில் அழைத்துச் செல்கின்றனர் என்றால் எச்சரிக்கை செய்து கொண்டே செல்வார்கள். கவனமாகச் செல்லுங்கள் என்று சொல்வார்கள். தீர்த்த ஸ்தலங்கள் முதலியவற்றை ஏற்றுக் கொள்வதில்லை எனச் சொல்பவர்களும் அநேகர் உள்ளனர். தீர்த்தம் என்றால் பக்தி. தீர்த்தத்தை ஏற்றுக் கொள்ள வில்லை என்றால் பக்தியையே ஏற்றுக் கொள்ளவில்லை என்றாகிறது. பக்தி மார்க்கம் அரைக் கல்பம் நடைபெறுகின்றது. பகவானைத் தேடிக் கொண்டே இருக்கின்றனர். அதிக பாவனை வைக்கின்றனர். சிவனுக்கு முன்னால் அநேகர் செல்கின்றனர். பகவானின் காட்சி கிடைக்க வேண்டும் என விரும்புகின்றனர். இது பாவனை ஆகும். பிறகு சாட்சாத்காரம் ஆகி விட்டால் மிகுந்த குஷி அடைந்து விடுகின்றனர். நமக்கு பகவான் கிடைத்து விட்டார், கிருஷ்ணர் கிடைத்து விட்டார், அனுமான் கிடைத்து விட்டார் என நினைக்கின்றனர். அவ்வளவு தான் இப்போது நமக்கு முக்தி கிடைத்தாயிற்று என நினைக்கின்றனர். ஆனால் முக்தியோ யாருக்கும் கிடைப்பதில்லை.
இப்போது பாபா நன்கு விளங்கும்படியாக அமர்ந்து புரிய வைக்கிறார், இனிமையான குழந்தைகளே, இப்போது முதலில் அனைவருக்கும் பாபாவின் அறிமுகம் கொடுங்கள். இச்சமயம் அனைவரும் ஒன்றுமில்லாத ஏழைகளாக உள்ளனர். நீங்களும் ஏழைகளாகத் தான் இருந்தீர்கள். இப்போது பாபா மூலம் நீங்கள் அனைத்தையும் புரிந்து கொண்டே செல்கிறீர்கள். நாங்கள் கீழானவர்கள், பாவிகள் எனச் சொல்கின்றனர் இல்லையா? சரி, அத்தகைய கீழானவராக யார் ஆக்கினார்? யாருக்குமே தெரியாது. யாரும் தன்னை மூர்க்கர் எனப் புரிந்து கொள்ள வில்லை. இந்த டிராமா அனாதியாக உருவாக்கப் பட்டது. அனைவரும் இழிவானவர்களாக ஆகத்தான் வேண்டும். தரம் குறைந்தவர்களாக ஆகியே தீர வேண்டும். ஆக, இந்த சிந்தனை செய்ய வேண்டும். நாம் பகவானின் குடும்பத்தினர். பகவான் நமக்குத் தந்தை என்றால் நிச்சயமாக நாம் உலகத்தின் அதிபதியாக இருக்க வேண்டும். பிறகு நமக்கு ஏன் இந்த துர்கதி ஏற்பட்டுள்ளது? இது யாருடைய புத்தியிலும் வருவதில்லை. ஒரு பக்கம் சொல்கின்றனர், பகவான் சர்வவியாபி இன்னொரு பக்கம் கேட்கின்றனர், சாந்தி எப்படி ஸ்தாபனை ஆகும் என்று குழப்பத்தில் உள்ளனர். மகாநாடுகள் நடத்திக் கொண்டே உள்ளனர். புரிய வைத்தாலும் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் கடைசியில் புரிந்து கொள்வார்கள். குழந்தைகள் நீங்கள் யோகத்தில் அமர்ந்து கர்மாதீத் ஆக வேண்டும். நீங்கள் தான் சம்பூர்ண நிர்விகாரியாக இருந்தீர்கள். மீண்டும் ஆக வேண்டும். மற்ற இத்தனை தர்மங்களும் சத்யுகத்தில் இருக்கப் போவதில்லை. சத்யுகத் தில் யார் இருந்தனரோ அவர்கள் நீண்ட காலமாகப் பிரிந்து விட்டனர். அவர்களைப் பற்றித் தான் தேடிக் கண்டெடுக்கப் பட்டவர்கள் எனச் சொல்லப் படுகின்றது. ஆத்மாவும் பரமாத்மாவும் நீண்ட காலமாகப் பிரிந்து இருந்தனர். எந்த ஆத்மாக்கள்? முதல் முதலாகப் பரந்தாமத்தில் இருந்து இங்கே தங்களின் பாகத்தை நடிப்பதற்காக வந்தவர்கள். முதல்முதலில் வருபவர்கள் தங்கள் பாகத்தை நடிப்பதற்காக வரும் தேவிதேவதா தர்மத்தின் ஆத்மாக்கள். அவர்களைத் தான் தங்களின் தர்மத்தில் கொண்டுவர வேண்டியதிருக்கும். பாபா சொல்கிறார் அவர்களுக் காகத் தான் வர வேண்டி யுள்ளது. அதோடு கூடவே அனைவருக்காகவும் அவசியம் வர வேண்டும். ஏனென்றால் அனைவருக்கும் முக்தி அளிக்கிறார். இப்போது தேவதா தர்மம் இல்லை. அதனுடைய கன்றைத் தான் இப்போது நட (ஸ்தாபிக்க) வேண்டும். ஒவ்வொரு வரும் வெவ்வேறு தர்மங்களுக்குச் சென்று விட்டுள்ளனர். அவர்கள் தான் வெளி வருகின்றனர். இந்த தர்மத்தின் ஸ்தாபனை எவ்வளவு அற்புதமானது! அதனால் தான் சொல்கின்றனர் பிரபு! உங்களுடைய ஸ்ரீமத் கதி சத்கதியின் எவ்வளவு அற்புதமானது, அதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை எப்படி நடைபெறுகின்றது? இவ்வளவு காலம் தூய்மை இழந்து, தேக அபிமானியாக ஆகி விட்டவர் கள் மறுபடி ஆத்ம அபிமானி ஆவதில் தான் முயற்சி உள்ளது. அடிக்கடி மறந்து போகின்றனர். பாபா சொல்கிறார், அமரும் போதும் எழுந்திருக்கும் போதும் என்னை நினைவு செய்யுங்கள். விகர்மங்களின் சுமை உங்கள் மீது அதிகம் உள்ளது. சுகமும் நீங்கள் அதிகம் பார்த்திருக்கிறீர்கள், துக்கமும் அதிகம் பார்த்திருக் கிறீர்கள். இப்போது மீண்டும் துக்கத் திலிருந்து உங்களை சுகத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறேன். ஆகவே ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். மேலும் மற்றவர்களுக்கும் நினைவு படுத்துகின்றனர். சிருஷ்டிச் சக்கரத்தின் இரகசியத்தைப் புரிய வைப்பது மிகவும் சுலபமாகும். அவர்கள் தான் திரிகாலதரிசி எனச் சொல்லப் படுகின்றனர்.
பாபா புரிய வைத்துள்ளார் சொல்லுங்கள், நீங்கள் பகவானுடைய குழந்தைகள் தான் இல்லையா? பகவான் சொர்க்கத்தைப் படைப்பவர் என்றால் அவசியம் சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்க வேண்டும். இந்த விஷயத்தை நீங்கள் தான் அறிவீர்கள். மேலும் நீங்கள் தான் கேட்க முடியும். சொல்கின்றனர், ஈஸ்வரன் படைத்தார் என்றால் நீங்கள் ஈஸ்வரனின் வாரிசாக வேண்டும் இல்லையா? ஈஸ்வரனாகிய தந்தை சொர்க்கத்தைப் படைப்பவர். பிறகு நீங்கள் நரகத்தில் ஏன் இருக்கிறீர்கள்? இதையோ நீங்கள் அறிவீர்கள், முதலில் நாம் சொர்க்கத்தில் இருந்தோம். இராவணன் நம்மை நரகத்தில் தள்ளி விட்டான். இராவணன் என்பது என்ன பொருள் என்பது பற்றியும் யாருக்கும் தெரியாது. நீங்கள் நினைவு படுத்த முடியும் பாரதம் தான் புராதன சொர்க்கமாக இருந்தது. மேலும் பாரதவாசிகள் சொர்க்கத்தின் எஜமானர்களாக இருந்தனர். இப்போது தான் பாரதம் நரகமாக ஆகி விட்டுள்ளது. இராம ராஜ்யம் மற்றும் இராவண ராஜ்யம் பாதிபாதி. இது தான் விளையாட்டு. பிறகு அவற்றிற்கு இடையில் என்ன நடைபெறுகிறது என்பதையும் விளக்கமாக அமர்ந்து புரிய வைக்கிறார். நிச்சய புத்தி உள்ளவர்களாக குழந்தைகள் சிலர் உள்ளனர். அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர், நாம் பாபா விற்க்கு முன்பாக அமர்ந்துள்ளோம். பாபா திரிநேத்திரியாக, திரிகாலதரிசியாக, திரிமூர்த்தியாக, பிரம்மா விஷ்ணு சங்கரையும் படைப்பவராக உள்ளார். திரிமூர்த்தி சிவன் என்பதற்கு பதிலாக திரிமூர்த்தி பிரம்மா என்ற பெயர் வைத்துள்ளனர். இப்போது திரிமூர்த்தியைப் படைப்பவராக பிரம்மா எப்படி இருக்க முடியும்? பாடவும் செய்கின்றனர், பிரம்மா மூலம் ஸ்தாபனை, சங்கர் மூலம் விநாசம் என்றால் படைப்பவர் நிச்சயமாக வேறு யாரோ தான் இருப்பார். இவ்வளவு சின்ன விஷயத்தையும் கூட யாரும் புரிந்து கொள்வ தில்லை. சிவபாபா பிரம்மா மூலம் சொர்க்கத்தின் ஆஸ்தி கொடுப்பார், வேறென்ன கொடுப் பார்? விஷ்ணுபுரியை யார் ஸ்தாபனை செய்கிறார்? பாபா விஷ்ணுபுரியை, அதாவது லட்சுமி நாராயணரின் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். இதுவும் யாருக்கும் தெரியாது. விஷ்ணுவின் சித்திரத்தைத் தனியாக உருவாக்கி அவரை நர நாராயணர் எனச் சொல்கின்றனர். மேலும் லட்சுமிநாரயணரின் சித்திரத்தைத் தனித்தனியாக உருவாக்கி யுள்ளனர். சித்திரங்கள் எப்படி அற்புதமாக உருவாக்கப் பட்டுள்ளன!
குழந்தைகளாகிய நீங்கள் கண்காட்சியில் புரிய வைக்க வேண்டும். கண்காட்சிகள் நடைபெற வேண்டும். மேலும் குழந்தைகள் தங்கள் தொழிலிலேயே ஈடுபட்டிருப்பார் களானால் இவர்கள் பாபாவை அறிந்து கொண்டார்கள் என்று புரிந்து கொள்ள முடியாது. பாபா புரிந்து கொள்கிறார், தாங்களே முழுமையாகப் புரிந்து கொண்டவர்களாக இல்லை அதனால் தான் சேவைக்காக ஓடவில்லை. இல்லை என்றால் சேவைக்காக ஓட வேண்டும். குருடர்களுக்கு ஊன்றுகோல் ஆகவில்லை என்றால் தாங்களே குருடர்கள் என்று தான் பொருள். பாபாவை அறிந்து கொள்ள வில்லை. நீங்கள் சேவைக்காகச் செல்லுங்கள் என்று யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை. தாங்களாகவே முன்வர வேண்டும், பாபா, நாங்கள் சேவைக்காகச் செல்ல முடியும், நீங்கள் அனுமதி கொடுங்கள் எனக் கேட்பார்கள். யார்யார் சேவை செய்ய முடியும் என்று பாபாவுக்குத் தெரியும். பாபா, நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று யாரும் எழுதுவதில்லை. மனிதர்களை சோழியில் இருந்து வைரமாக ஆக்க வேண்டும். 10, 20, 50 ரூபாய் சம்பாதிக்கவில்லை என்றால் என்ன ஆகி விடும்? அநேகருக்கு நன்மை செய்ய வேண்டும். ஆனால் முழுமையான அறிமுகம் இல்லை. கோடியில் யாரோ தான் அறிந்துள்ளனர். நம்மிடமும் சேவைக்குத் தகுதியானவர் களாகக் குறைவான குழந்தைகளே உள்ளனர். அவர்களுக்குத் தந்தி கொடுத்து அழைக்க வேண்டி யுள்ளது. பாபா, நாங்கள் சேவைக்குத் தயாராக உள்ளோம் என்று தாங்களாகவே சொல்வ தில்லை. பாபா பார்க்கிறார் யாருக்கு சேவையில் ஆர்வம் உள்ளது. மிருகங்கள் போல் ஆகிவிட்டுள்ள மனிதர்களை தேவதை ஆக்க வேண்டும்.
குழந்தைகள் நீங்கள் நிரகங்காரி ஆக வேண்டும். தலைமைப் பதவியில் இருப்பவர்களிடம் மிகுந்த பணிவு இருக்க வேண்டும். பாபா எவ்வளவு நிரகங்காரியாக உள்ளார்! ஒரு சில குழந்தைகளிடம் மிகவும் அகங்காரம் உள்ளது. எத்தகைய கர்மம் நான் செய்கிறேனோ, அதைப் பார்த்து மற்றவர்களும் செய்வார்கள். அதற்கான தண்டனை, அவர்களின் நிலை கீழே இறங்கி விடும். பாபா சொல்கிறார், குழந்தைகளே, நீங்கள் அனைத் தையும் உங்கள் கையால் செய்ய வேண்டும். பாபா எப்படி சாதாரண முறையில் கற்றுத் தருகிறார்! மனிதர்களோ, அவர் சர்வசக்திவான், அவரால் என்ன தான் செய்ய முடியாது என நினைக்கின்றனர். ஆனால் பாபா சொல்கிறார் நானோ சேவகன் ஆகி வர வேண்டி உள்ளது. ஞானக்கடலே, பதீதபாவனா வாருங்கள் என்று அழைக்கவும் செய்கின்றனர். சுகத்தின் கடலே வாருங்கள், வந்து தூய்மை இழந்த எங்களைத் தூய்மையாக்குங்கள். பாபா வந்து அந்த மாதிரி சேவை செய்ய வேண்டி உள்ளது. எங்கே வந்து இருக்க வேண்டி உள்ளது! எப்படி எப்படி விக்னங்கள் வருகின்றன! லாக்கா பவனுக்கு நெருப்பு வைத்தனர். அனைத்தும் நடைமுறையில் நடைபெற்றுக் கொண்டுள்ளது. பாபா நடிப்பின் பங்கை முழுவதையும் அறிவார். நமக்குத் தெரியாது. பாபா சொல்கிறார், நான் வர வேண்டி யுள்ளது. பகவான் தாமே சொல்கிறார், நான் நிந்தனை அடைய வேண்டியுள்ளது. அனை வரைக் காட்டிலும் அதிக நிந்தனை நான் தான் பெறுகிறேன். பக்தி மார்க்கத்திலும் நிந்தனை தான் செய்கின்றனர். மூன்றடி நிலம் கூடக் கிடைப்பதில்லை. பிறகும் எவ்வளவு நிரகங்காரத் தோடு பாகத்தை நடித்துக் கொண்டிருக்கிறார்! மம்மா பாபா குழந்தை களுக்குக் கற்பிப்பதற்காக அனைத்தையும் தாங்களே செய் கின்றனர். எவ்வளவு கீழே இறங்க வேண்டி உள்ளது! தூய்மை இல்லாதவர்களை தூய்மைப்படுத்த வேண்டும். அழுக்குத் துணி களைத் துவைக்க வேண்டும். அதனால் சலவை தொழிலாüயாகவும் உள்ளார், நகை செய்பவராக வும் (தட்டான், கொல்லன்) உள்ளார். அனைவருக்கும் ஞானத்தைக் கூறி உண்மையான தங்கமாக ஆக்குகிறார். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப் பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1. தந்தைக்கு சமமாக நிரகங்காரியாக, பணிவுள்ளவராக ஆக வேண்டும். தனது சேவையைத் தன் கைகளாலேயே செய்ய வேண்டும். எந்த ஒரு வி‘யத்திலும் அகங்காரத்தைக் காட்டக் கூடாது.
2. சேவைக்காக சதா தயார் நிலையில் இருக்க வேண்டும். சேவைக்காக தானே முன் வர வேண்டும். சோழி போன்ற மனிதர்களை வைரம் போல் ஆக்குகிற சேவை செய்ய வேண்டும்.
வரதானம்:-
யார் சதா நிரம்பியவராக அல்லது முழுமையானவராக இருக்கிறார்களோ, அவர்கள் திருப்தியாக இருக்கிறார்கள். யார் எவ்வளவு தான் அதிருப்தி அடைய செய்வதற்கான சூழ் நிலைகள் அவர்களுக்கு முன்னால் வந்தாலும் நிரம்பிய, திருப்தியான ஆத்மா அதிருப்தி செய்யக்கூடியவர் களையும் திருப்தியின் குணம் உதவி செய்துவிடும். அப்படிப்பட்ட ஆத்மா தான் கருணை ணமுடையவர் ஆகி சுப பாவணை மற்றும் சுப விருப்பத்தின் மூலம் அவர்களையும் கூட மாற்றம் செய்வதற்கான முயற்சி செய்யும். ஆன்மீகமான இராயல் ஆத்மாவிற்கு இது தான் சிரேஷ்ட காரியமாகும்.
சுலோகன்:-
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!