10 January 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

9 January 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! ஸ்ரீமத்படி நீங்கள் அனைவருக்கும் ஆன்மீக உபசரிப்பை செய்தல் வேண்டும், குஷியின் சத்துணவை உண்ணுவதோடு பிறரையும் உண்ண வைக்க வேண்டும். இதுவே உண்மையான உபசரிப்பு

கேள்வி: -

ஞானத்தில் ஆன்மிக ரத்தினங்களை (சக்தி) நிரப்புவதற்கான விதி யாது? அதனால் என்னென்ன பயன்?

பதில்:-

யாருக்காவது ஞானத்தைக் கூறும் போது அவர்களை ஆத்மா என உணர்ந்து ஞானம் தாருங்கள். இதன் மூலம் ஆன்மீகத்தின் ரத்தினங்கள் நிரம்பி விடும். இந்த புதிய பழக்கத்தின் மூலம் எவருக்கேனும் ஞானம் கூறினால் அவர்களுக்கு உடனே அம்பு தைத்துவிடும். சரீர உணர்வும் முடிந்து போகும். பிறகு மாயாவின் புயல் அல்லது தீய எண்ணங்களும் எழாது குற்றப்பார்வை (விகாரப்பார்வை) யும் இருக்காது.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

ஓம் சாந்தி : ஞானத்தின் மூன்றாம் கண்ணை வழங்கக் கூடியவர் ஆன்மீகத் தந்தை, ஆன்மிகக் குழந்தை களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறார். ஞானத்தின் மூன்றாம் கண்ணை பாபாவைத் தவிர வேறு எவரும் தர முடியாது. தற்போது குழந்தைகள், உங்களுக்கு ஞானத்தின் மூன்றாம் கண் கிடைத்துள்ளது. இப்பழைய உலகம் மாறப்போகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அவ்வாறு மாற்றக் கூடியவர் யார்? எப்படி மாற்றுகிறார்? என்பதை பாவம், மனிதர்கள் அறிவதில்லை. ஏனெனில், அவர்களுக்கு ஞானத்தின் மூன்றாம் கண் இல்லை. இப்பொழுது குழந்தைகள் உங்களுக்கு ஞானத்தின் மூன்றாம் கண் கிடைத்துள்ளது. அதன் மூலம் சிருஷ்டி யின் ஆதி, மத்யம், இறுதியை நீங்கள் அறிவீர்கள். இது ஞானத்தின் சாக்ரீன் (இனிப்பு) சாக்ரீனின் ஒரு துளி கூட எவ்வளவு இனிமையாக இருக்கும்! ஞானத்தின் ஒரே ஒரு வார்த்தை மன்மனாபவ இந்த வார்த்தை அனைத் தையும் விட மிக இனிமையானது. தன்னை ஆத்மா என உணர்ந்து, பாபாவை நினைவு செய். பாபா சாந்தி தாமம், சுகதாமத்தின் வழியைக் காண் பித்துக் கொண்டிருக்கிறார். பாபா வந்திருக்கிறார், குழந்தைகளுக்கு சொர்க்கத்தின் ஆஸ்தியை வழங்குவதற்காக ஆக, குழந்தைகளுக்கு எவ்வளவு குஷி இருக்க வேண்டும்? குஷியைப் போன்றதொரு சத்துணவு வேறெதுவும் இல்லை எனக் கூறவும் செய்கிறார்கள். யார் எப்பொழுது குஷி, ஆனந்தத்தில் திளைத்திருக்கிறார்களோ, அவர்களுக்கு அது சத்துணவாகிறது. 21 பிறவி களுக்கு, ஆனந்தத்தில் மூழ்கி இருப்பதற்கு இது மிகவும் முக்கிய சத்துணவாகும். இந்த சத்துணவை (குஷி) பிறருக்கு ஊட்டிக் கொண்டேயிருங்கள். இம்மாதிரி பிறருக்கு சிறப்பான விருந்து உபசாரம் செய்ய வேண்டும். இம்மாதிரி விருந்தோம்பலை எந்த மனிதரும் பிற மனிதர்களுக்குச் செய்ய முடியாது.

குழந்தைகள் நீங்கள், ஸ்ரீமத்படி அனைவருக்கும் ஆன்மிக விருந்தோம்பலைச் செய்கிறீர்கள். உண்மை யிலும் உண்மையான குஷியின் தானமும் இதுதான்! அதாவது பாபாவின் அறிமுகத்தைப் பிறருக்கு வழங்குவது. இனிமையான குழந்தைகள் அறிவார்கள், எல்லையற்ற தந்தையின் மூலம் நமக்கு ஜீவன் முக்தியின் சத்துணவு கிடைக்கிறது. சத்யுகத்தில் பாரத தேசம் ஜீவன் முக்த் நிலையில் இருந்தது. தூய்மையாக இருந்தது.. பாபா மிகவும் உயர்ந்த சத்துணவை அளிக்கிறார். எனவே தான் மகிமை உள்ளது, அதீந்திரிய சுகம் பற்றிக் கேட்க வேண்டுமெனில், கோப, கோபியர்களிடம் கேளுங்கள்! இந்த ஞானம் மற்றும் யோகத்தின் எவ்வளவு அற்புதமான சத்துணவு ! அதுவும் இந்த சத்துணவு பற்றி ஒரே ஒரு சர்ஜனிடம் மட்டுமே உள்ளது. பிறருக்கு இந்த சத்துணவு தெரியவே தெரியாது. பாபா கூறுகிறார். இனிமையான குழந்தைகளே ! உங்களுக்காக உள்ளங்கையில் பரிசை எடுத்து வந்துள்ளேன். முக்தி – ஜீவன் முக்தியின் இந்த பரிசு என்னிடம் மட்டுமே உள்ளது. ஒவ்வொரு கல்பத்திலும் நானே வந்து தருகிறேன். பிறகு இராவணன் பறித்துக் கொள்கிறான். ஆக, குழந்தைகள் உங்களுக்கு எவ்வளவு குஷி அளவு கடந்திருக்க வேண்டும். நமக்கு ஒரே ஒரு தந்தை என்பதை, டீச்சர், உண்மையிலும் உண்மையான சத்குரு, அவர் நம்மை கூடவே அழைத்துச் செல்கிறார். மிகவும் அன்பான தந்தையிடமிருந்து உலக இராஜ பதவி கிடைக்கிறது. இது சாதாரண விசயமா என்ன ! எனவே எப்போதும் முகம் மலர்ச்சியுடனிருக்க வேண்டும். காட்- ஸ்டூடண்ட் லைப் இஸ் தி பெஸ்ட் (இறை மாணவ வாழ்க்கையே மிகச் சிறந்தது) இது தற்போதைய காலத்தின் மகிமையாகும். பிறகு புதிய உலகத்திலும் நீங்கள் எப்பொழுதும் குஷியில் கொண்டாடிக் கொண்டிருப்பீர்கள். உண்மையான குஷி எப்பொழுது கொண்டாடப்படும் என உலகிற்குத் தெரியாது. மனிதர்களுக்கு சத்யுகத்தின் ஞானமே இருப்பதில்லை. எனவே இங்கேயே கொண்டாடிக் கொண்டிருக் கின்றனர். ஆனால் இந்த பழைய தமோபிரதான் உலகில் குஷி எங்கிருந்து வரும்? இங்கேயோ ஐயோ ! ஐயோ ! என்று கூச்ச-ட்டுக் கொண்டிருக்கின்றனர். எவ்வளவு துக்கமான உலகம் இது !

பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு எளிய வழியைக் கூறுகிறார்? இல்லற வாழ்க்கையில் இருந்து கொண்டே தாமரை மலர் போன்று வாழுங்கள் ! தொழில் – வியாபாரம் செய்து கொண்டே என்னை நினைவு செய்யுங்கள் எப்படி மணவாளன்- மணவாட்டி வாழ்கின்றனர் ! அதுபோல ஒருவர் மற்றொருவரை நினைவு செய்து கொண்டேயிருக்கின்றனர். அவர் இவரது மனம் கவர்ந்தவர், இவர் அவரது மனம் கவர்ந்தவர். ஆனால் இங்கே இந்த விசயங்கள் இல்லை. இங்கேயோ நீங்கள் அனைவரும் ஒரே ஒரு மணவாளனின் பல பிறவி களுக்கான மணவாட்டிகள். ஆனால் பாபா ஒருபோதும் உஙகளது மணவாட்டிகள் ஆகமாட்டார். நீங்கள் அந்த உள்ளம் கவர்ந்தவரைச் சந்திப்பதற்காக நினைவு செய்து வந்துள்ளீர்கள். எப்போது துக்கம் அதிகமாகிறதோ அப்போது அதிகமாக நினைவு செய்கின்றனர். துக்கத்தில் அனைவரும் நினைவு செய்கின்றனர், சுகத்தின் போது எவரும் நினைவு செய்வதில்லை., என பாடப்படுகிறது. இச்சமயத்தில் பாபாவும் சர்வசக்திவானாக இருக்கிறார். நாளுக்கு நாள் மாயாவும் சர்வ சக்திவான், தமோ பிரதானமாகிக் கொண்டிருக்கிறது. எனவே இப்போது பாபா கூறுகிறார். இனிமையான குழந்தைகளே ! ஆத்ம அபிமானியாகுங்கள் ! தன்னை ஆத்மா என எண்ணி தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். கூடவே தெய்வீக குணங்களையும் பின்பற்ற வேண்டும். அப்போது இவர்கள் மாதிரி (லக்ஷ்மி, நாராயண்) ஆகி விடுவீர்கள். இப்பாடத்தில் முக்கிய விசயமே நினைவு தான்! உயர்ந்ததிலும் உயர்ந்த பாபாவை மிகவும் அன்புடன், சினேகத்துடன் நினைவு செய்ய வேண்டும். அந்த உயர்ந்ததிலும் உயர்ந்த பாபா தான் புதிய உலகைப் படைப்பவர் – பாபா கூறுகிறார் : உங்களை உலக எஜமானர் ஆக்குவதற்காகவே நான் வந்துள்ளேன். எனவே இப்போது என்னை நினைவு செய்தால், உங்களது பல பிறவிகளின் பாவங்கள் அழிந்து போகும். பதீத பாவன் என்று பாபா கூறுகிறார், நீங்கள் மிகவும் அழுக்காகி (பதீத்) விட்டீர்கள். எனவே என்னை இப்போது நினைவு செய்தால், நீங்கள் தூய்மையாகி தூய்மையான உலகின் எஜமானர் ஆவீர்கள். பதீத் பாவனர் பாபாவைத்தான் அழைக்கிறார்கள் இல்லையா? தற்போது பாபா வந்துள்ளார். எனவே நிச்சயம் தூய்மை ஆக வேண்டும் ! பாபா துக்கத்தை அழித்து, சுகத்தை அளிப்பவர். நிச்சயமாக சத்யுகத்தில் பாவன உலகமிருந்தது. அனைவரும் சுகமாக இருந்தார்கள். தற்போது பாபா மீண்டும் கூறுகிறார். குழந்தைகளே ! சாந்திதாம், சுகதாமத்தை நினைவு செய்து கொண்டேயிருங்கள். தற்போது நடப்பது சங்கமயுகம். படகோட்டி இக்கரையிலிருந்து உங்களை அக்கரைக்கு எடுத்துச் செல்கிறார். படகு ஒன்றல்ல முழு உலகமும் ஒரு பெரிய கப்பல் போல ! அனைவரையும் அக்கரைக்கு அழைத்துச் செல்கிறார்.

இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு குஷி இருக்க வேண்டும். உங்களுக்கோ எப்பொழுதும் குஷியே குஷிதான் ! எல்லையற்ற தந்தை உங்களுக்கு கற்பித்துக் கொண்டிருக் கிறார். ஆஹா ! இதை ஒரு போதும் கேட்டதில்லை, படித்ததுமில்லை. பகவானின் மஹாவாக்கியம்: ஆன்மிகக் குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகம் கற்பித்துக் கொண்டி ருக்கிறேன். முழுமையாகக் கற்றுக் கொள்ள வேண்டும். தாரணை (நடைமுறையில் பின்பற்ற) வேண்டும் படிப்பில் நம்பர் பிரகாரம் என்பது இருக்கத்தான் செய்கிறது நான் படிப்பில் சிறந்து விளங்குகிறேனா எனத் தன்னையே கேட்க வேண்டும். அல்லது நடுநிலையில் அல்லது, கடைசி நிலையிலிருக்கிறேனா? நான் உயர்பதவி அடைவதற்கு தகுதி உடையவனாக இருக்கிறேனா? ஆன்மிக சேவை செய்கிறேனா? ஏனெனில், பாபா கூறுகிறார் : குழந்தைகளே சேவை செய்யக் கூடியவர்களாக இருங்கள்! பின் பற்றுங்கள் ! நான் வந்திருப்பதே சேவை செய்வதற்காகத்தான். தினமும் சேவை செய்கிறேன். அதற்காகத்தானே இந்த ரதத்தை (பிரம்மா) எடுத்துள்ளேன். இவரது ரதம் சுகவீனம் ஆகிவிட்டால் கூட, இவருள் வந்து, முரளி எழுதுகிறேன். வாயால் பேச முடியாவிட்டாலும், எழுதுகிறேன். முரளி குழந்தைகளுக்கு அனுப்பத் தவறிவிடக் கூடாது. ஆக நானும் சேவையிலேயே இருக்கிறேன் அல்லவா ! இது ஆன்மிக சேவை நீங்களும் பாபா சேவையில் மூழ்கி விடுங்கள். ஈஸ்வரிய தந்தையின் சேவையில் ! தந்தையே உங்களை உலகத்தின் எஜமானர் ஆக்குவதற்காக வந்துள்ளார். யார் நல்ல புருஷார்த்தம் செய்கிறாரோ அவர்களே மகாவீர் என அழைக்கப் படுகின்றனர். பாபாவின் வழிப்படி நடக்கும் மகாவீர் யார்? என பார்க்கப்படுகின்றனர் ! பாபாவின் கட்டளை: தன்னை ஆத்மா என உணர்ந்து சகோதர, சகோதரன் என்று பாருங்கள். இந்த சரீரத்தை மறந்து விடுங்கள். பாபாவும் சரீரத்தைப் பார்ப்ப தில்லை. பாபா கூறுகிறார் : நான் ஆத்மாக்களையே காண்கிறேன். ஆத்மா சரீரம் இல்லாது பேச முடியாது என்வே ஞானம் நான் கூட இந்த சரீரத்தில் வந்துள்ளேன். கடனாக எடுத்துள்ளேன். சரீரம் இருந்தால் தான் ஆத்மா படிக்க முடியும். பாபா அமருமிடம் (இருபுருவங் களுக்கு மத்தியில்) இதுவாகும்! இது அகால தக்த் (பீடம்,) ஆத்மா அகால மூரத் ஆத்மா ஒருபோதும் சிறியதாகவும், பெரியதாகவும் ஆவதில்லை. சரீரமே சிறிது பெரிதாகிறது. ஆத்மாக்கள் அனைவருக்கும் இருப்பிடம் புருவ மத்தியில் (பிருகுட்டி) தான்! சரீரமோ அனைவருக்கும் வித விதமானது. சிலரது அகால தக்த் ஆண்களுடையது, சிலரது அகால தக்த் (பெண் களுடையது) சிலருடையது குழந்தைகளின் நெற்றியில், தந்தை குழந்தைகளுக்கு ஆன்மிக டிரில் கற்றுக் கொடுக்கிறார். எவருடனாவது பேசும்போது முதலில் தன்னை ஆத்மா என உணருங்கள். நான் ஆத்மா அந்த குறிப்பிட்ட சகோதரருடன் பேசிக் கொண்டிருக்கிறேன். சிவபாபாவை நினைவு செய்யுங்கள். என பாபாவின் செய்தியைக் கொடுக்கிறோம். நினைவின் மூலமே துரு நீங்குகிறது. தங்கத்தில் மற்றொரு உலோகத்தைக் கலக்கும் போது அதன் மதிப்பு குறைந்து போகின்றது. ஆத்மாக்களாகிய உங்கள் மீதும் துரு ஏறும் போது மதிப்பிழந்து போய் விட்டீர்கள். இப்போது மீண்டும் தூய்மை அடைய வேண்டும். ஆத்மாக்கள், உங்களுக்கு தற்போது ஞானத்தின் மூன்றாம் கண் கிடைத்துள்ளது. அந்த கண் மூலம் தங்கள் சகோதரர் களைக் (பிற ஆத்மாக்களை) காணுங்கள். சகோதரன்-சகோதரனைப் பார்க்கும் போது கர்மேந்திரியங்கள் ஒருபோதும் சஞ்சலம் ஆவதில்லை. இராஜ்ய பாக்கியத்தை அடைய வேண்டும். உலகின் எஜமானர் (விஷ்வ மாலிக்) ஆக வேண்டு மெனில், இந்த முயற்சி செய்யுங்கள். சகோதரன் – சகோதரனாக உணர்ந்து அனவைருக்கும் ஞானம் தாருங்கள். பிறகு இந்த பழக்கம் உறுதியாகிவிடும். உண்மையிலும் உண்மையான சகோதரர்கள் நீங்கள் அனைவரும் மேலிருந்து வந்துள்ளீர்கள். பாபாவும் மே-ருந்து வந்துள்ளார், பாபா குழந்தை களுடன் சேர்ந்து சேவை செய்து கொண்டிருக்கிறார். சேவை செய்வதற்கு பாபா தைரியம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தைரியமான குழந்தைகள் …. அவர்களுக்கு உதவும் தந்தை, ஆக இந்த பயிற்சி செய்ய வேண்டும். நான் ஆத்மா எனது சகோதரனுக்குக் கற்பிக்கிறேன். ஆத்மா தான் படிக்கிறது இல்லையா? இது ஆன்மிக ஞானம் (ஸ்பிரிச்சுவல் நாலேட்ஜ்) என அழைக்கப்படுகிறது. இது ஆத்மீகத் தந்தையிடமிருந்து மட்டுமே கிடைக்கிறது. சங்கமயுகத்தில் தான் வந்து, இந்த ஞானத்தைத் தருகிறார்- தன்னை ஆத்மா என உணருங்கள். நீங்கள் தனியாக (சரீரமில்லாது) வந்தீர்கள். இங்கு சரீரத்தை எடுத்து நீங்கள் 84 பிறவிகளை எடுத்தீர்கள். இப்போது மீண்டும் திரும்பிச் செல்ல வேண்டும், எனவே தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு, சகோதர, சகோதரன் பார்வையுடன் பார்க்க வேண்டும். இந்த முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகள் நீங்கள், தங்களது முயற்சியை செய்ய வேண்டும். மற்றவர்களைப் பற்றி நமக் கென்ன சிந்தனை! தானம் உதவியை முத-ல் நம் வீட்டில் ஆரம்பிக்க வேண்டும். (சாரிட்டி பிகின்ஸ் அட் ஹோம்) அதாவது முத-ல் தன்னை ஆத்மா என உணர்ந்து, பிறகு சகோதரர் களுக்குப் புரிய வையுங்கள். அப்போது நன்கு அம்பு தைக்கும். இந்த ஞான ரத்தினத்தை நிரப்ப வேண்டும். முயற்சி செய்தால் தான் உயர்ந்த பதவி அடைய முடியும். பலனை அளிப்பதற் காகவே பாபா வந்துள்ளார். ஆக, அவசியம் முயற்சி செய்து தானே ஆக வேண்டும். கொஞ்சம் பொருத்துக் கொள்ளவும் வேண்டும்.

எவரேனும் உங்கள் மீது தவறான பேச்சுக்களைப் பேசினால் அமைதியாய் இருங்கள். நீங்கள் அமைதியாகி விட்டால் அவர் என்ன செய்வார் ! சப்தம் என்பது இரு கைகளும் தட்டும் போதுதானே எழுகிறது. ஒருவர் வாயினால் ஒரு கை தட்டினால், அடுத்தவர் அமைதியாய் இருந்து விட்டால் அவரும் அமைதியாகி விடுவார். ஒரு கை மீது இன்னொரு கை தட்டும் போதுதான் ஒலி எழுகிறது. குழந்தைகள் ஒருவருக்குக் கொருவர் நன்மை (கல்யாண்-மங்களம்) செய்ய வேண்டும். குழந்தைகளே ! சதா குஷியில் இருந்திட மன்மனாபவ என புரிய வைக்கிறார். தன்னை ஆத்மா என உணர்ந்து பாபாவை நினைவு செய்யுங்கள். சகோதரர்களின் (ஆத்மாக்கள்) பக்கம் பாருங்கள். சகோதரர்களுக்கும் இந்த ஞானத்தைக் கூறுங்கள். இந்த பழக்கம் ஏற்படுவதன் மூலம் பிறகு ஒருபொழுதும் குற்றப்பார்வை (விகாரப்) ஏமாற்றாது. ஞானத்தின் மூன்றாம் கண் மூலம் மூன்றாம் கண்ணைப் பாருங்கள். பாபா கூட உங்கள் ஆத்மாவையே பார்க்கிறார். எப்போதும் ஆத்மாவையே பார்க்கும் முயற்சி செய்யுங்கள். சரீரத்தைப் பார்க்கவே கூடாது. யோகம் செய்விக்கிறீர்கள் என்றாலும், தன்னை ஆத்மா என உணர்ந்து, சகோதரர்களைப் பார்த்துக் கொண்டிருந்தால், சேவை நன்கு நடக்கும். பாபா கூறுயிருக்கிறார். சகோதரர்களுக்குப் புரிய வையுங்கள். சகோரர்கள் அனைவரும் பாபாவிட மிருந்து ஆஸ்தியை எடுக்கிறார்கள். இந்த ஆன்மிக ஞானம் ஒரே ஒரு முறை பிராமண குழந்தைகளாகிய உங்களுக்குக் கிடைக்கிறது. பிராமணர்களாகி நீங்களே பிறகு தேவதைகளாகப் போகிறீர்கள். இந்த சங்கமயுகத்தை விடக்கூடாது ! இது இல்லையெனில் எப்படி கடந்து செல்வது? அடித்து இழுத்துக் கொண்டு போவோமா என்ன ! இது மிக அற்புதமான சங்கமயுகம். எனவே குழந்தைகள் ஆன்மிகப் பயணத்தில் பயணிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்குத்தான் இது நன்மை. தந்தையின் கல்வியை சகோதரர்களுக்கு கற்றுத் தர வேண்டும். நாம் ஆத்மாக்களாகிய உங்களுக்கு ஞானம் தருகிறேன் என பாபா கூறுகிறார். ஆத்மாக்களையே பார்க்கிறேன். மனிதர் இன்னொரு மனிதரோடு பேசும்போது அவரது வாயைப் பார்ப்பார் இல்லையா? நீங்கள் ஆத்மாவோடு பேசுகிறீர்கள் என்றால், ஆத்மாவைத்தான் பார்க்க வேண்டும். இந்த சரீரத்தின் மூலம் ஞானத்தைக் கொடுக்கலாம் ஆனால், இதில் சரீர உணர்வை நீக்கிவிட வேண்டும். பரமாத்மா பாபா நமக்கு ஞானத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என நீங்கள் ஆத்மாக்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஆத்மாக்களையே பார்க்கிறேன் என பாபாவும் கூறுகிறார். ஆத்மாவும் கூறுகிறது. நாம் பரமாத்மா தந்தையைப் பார்க்கிறோம். அவரிடமிருந்து ஞானத்தைப் பெறுகிறோம். இதுவே ஆன்மிக ஞானத்தின் பரிவர்த்தனை (கொடுக்கல்-வாங்கல்) ஆத்மா ஆத்மாக்களுடன் ! ஆத்மாவில்தான் ஞானம் உள்ளது. ஆத்மாக்களுக்குத் தான் ஞானம் தர வேண்டும். இது ரத்தினங்களைப் (ஞான) போன்றது. உங்கள் ஞானத்தில் இந்த ரத்தினங்கள் (சக்தி) பதிந்திருந்தால், யாருக்காவது புரிய வைக்கும் போது. உடன் அம்பு தைத்து விடும். அம்பு தைக்கிறதா இல்லையா என பயிற்சி செய்து பாருங்கள். இந்த புதிய பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், பிறகு சரீர உணர்வு நீங்கி விடும். மாயாவின் புயல் குறைந்து விடும். தீய சங்கல்பங்கள் (எண்ணங்கள்) வராது. குற்றப்பார்வையும் இருக்காது. ஆத்மாக் களாகிய நாம் 84 பிறவிகள் எடுத்தோம்! தற்போது நாடகம் முடிவடைகிறது ! தற்போது பாபாவின் நினைவி-ருக்க வேண்டும்! நினைவின் மூலம் தமோபிரதானத்திருந்து சதோபிரதானமாகி, சதோபிரதான உலகின் எஜமானர்கள் ஆகிவிடுவோம். எவ்வளவு எளிது ! குழந்தைகளுக்கு இந்த ஞானத்தைக் கொடுப்பதே எனது பாகம் என தந்தை அறிவார். எதுவும் புதிதல்ல! ஒவ்வொரு 5000 ஆண்டு களுக்குப் பிறகும் நாம் வரவேண்டி யுள்ளது. நான் கட்டுப்பட்டிருக்கிறேன். குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறேன். இனிமையான குழந்தைகளே! ஆன்மிக யாத்திரையி-ருங்கள். அப்போது இறுதிநேர எண்ணம் எதிர்கால நிலை (அந்த் மதி சோ கதி) யாகிவிடும். இது இறுதி காலமல்லவா ! மாமேகம் (என்னையே நினை) நினைவு செய்தால், உங்களுக்கு சத்கதி கிடைத்து விடும். நினைவுப் பயணத்தில் மூலம் உங்கள் பாதம் (அஸ்திவாரம்) உறுதியாகி விடும். தேஹி அபிமானியாகும் கல்வி ஒரே ஒரு முறை குழந்தைகளாகிய உங்களுக்குக் கிடைக் கிறது. எவ்வளவு அற்புதமான ஞானம் ! பாபா அற்புதமானவர் , அவரது ஞானமும் அற்புதம் ! எவரும், ஒருபோதும் இதனைக் கூற முடியாது. தற்போது வாபஸ் திரும்பிச் செல்ல வேண்டும் எனவே பாபா கூறுகிறார்: இனிமையான குழந்தைகளே ! இதனைப் பயிற்சி செய்யுங்கள். தன்னை ஆத்மாக்கள் என உணர்ந்து, ஆத்மாக்களுக்கு ஞானம் தாருங்கள், மூன்றாம் கண் மூலம் சகோதரன், சகோதரனைப் பார்கக வேண்டும். இதுவே பெரிய முயற்சி ! நல்லது

இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. ஞானத்தின் மூன்றாம் கண்ணின் மூலம், மூன்றாம் கண்ணைக் (ஆத்மாவை) காணும் அப்பியாசம் செய்ய வேண்டும். எப்போதும் ஆத்மாவையே பார்க்க வேண்டும், சரீரத்தை அல்ல. அப்போது விகார எண்ணம் வராது. தீய சங்கல்பங்கள் முடிந்து போகும். இதற்கான முயற்சி செய்ய வேண்டும்.

2. கை தட்டல் இருகரங்களால் ஒ-க்கிறது. எனவே உங்களைப் பார்த்து எவரேனும் தவறான விசயங்களைப் பேசினால், நீங்கள் அமைதியாய் இருங்கள். நீங்கள் அமைதியாய் இருந்து விட்டால் அடுத்தவரும் அமைதியாகி விடுவார்.

வரதானம்:-

ஒருவேளை பிரம்மா பாபாவிடம் எங்களுக்கு அதிகமான அன்பு இருக்கிறது என்று சொல்கிறீர்கள் என்றால், அன்பினுடைய அடையாளம் – யாரிடம் பாபாவின் அன்பு இருக் கிறதோ, அவரிடம் அன்பு இருக்க வேண்டும். என்ன காரியத்தை செய்தாலும் செய்வதற்கு முன்னால், பேசுவதற்கு முன்னால், எண்ணம் உருவாக்குவதற்கு முன்னால் – இது பிரம்மா பாபாவிற்கு விரும்பமானதா? என்று சோதனை செய்யுங்கள். பிரம்மா பாபாவின் விசேஷத் தன்மையின் சிறப்பம்சம் – என்ன யோசித்தாரோ, அதை செய்தார், என்ன சொன்னாரோ, அதை செய்தார். எதிர்ப்புகள் வந்தாலும் சதா தனது உயர்ந்த நிலையில் நிலைத்திருந்தார். எனவே அன்பினுடைய நடைமுறை நிரூபணம் கொடுப்பது என்றாலே தந்தையை பின்பற்றி நல்ல குழந்தையாக பாபாவிற்கு சமமானவர் ஆக வேண்டும்.

சுலோகன்:-

அன்பில் மூழ்கியிருக்கும் மனநிலையை அனுபவம் செய்யுக்கள் :

பரமாத்மாவின் அன்பு அளவிடமுடியாத, உறுதியானதாக, இருக்கிறது, அது அனைவருக்கும் கிடைக்கும், ஆனால் பரமாத்மாவின் அன்பை அடைவதற்கான விதி – விடுபட்டவர் ஆவது, எந்தளவு விடுபட்டவராக இருக்கிறீர்களோ, அந்தளவு பரமாத்மாவின் அன்பிற்கு அதிகாரம் (உரிமை) இருக்கும். அந்த மாதி விடுபட்டவராகவும் அன்பானவராகவும் இருக்கும் ஆத்மா தான் அன்பில் மூழ்கியிருக்கும் மனநிலையை அனுபவம் செய்ய முடியும்.

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top