10 August 2021 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
9 August 2021
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! உங்களை பாவங்கள் நிறைந்த இந்த உலகத்திலிருந்து வெளியேற்றி அமைதியின் உலகத்திற்கு அழைத்துச் செல்வதற்காக தந்தை வந்துள்ளார். தந்தையின் மூலம் உங்களுக்கு சுகம் அமைதி எனும் இரண்டு பரிசுகள் கிடைக்கின்றன.
கேள்வி: -
முழு உலகில் உண்மையிலும் உண்மையான (நன்ஸ்) கன்னியா ஸ்திரீகள் நீங்கள், உண்மையான நன்ஸ் என யாரை சொல்லலாம்?
பதில்:-
யாருடைய புத்தியில் ஒருவருடைய நினைவு இருக்குமோ அவர்கள் உண்மையான கன்னியர் (நன்ஸ்) ஆவார்கள் அதாவது நன் பட் ஒன் (ஒருவரைத் தவிர வேறு யாருமில்லை). அவர்கள் தங்களை நன்ஸ் என சொல்லிக் கொள்ளலாம், ஆனால் அவர்களுடைய புத்தியில் ஒரு கிறிஸ்து மட்டுமல்ல, கிறிஸ்துவைக் கூட இறைவனின் குழந்தை என சொல்வார்கள், எனவே அவர்களுடைய புத்தியில் இருவர் இருக்கின்றனர் மற்றும் உங்களின் புத்தியில் ஒரு தந்தை இருக்கிறார், ஆகையால் நீங்கள் தான் உண்மையிலும் உண்மையான நன்ஸ் ஆக இருக்கிறீர்கள். தூய்மையாய் இருக்க வேண்டும் என்பது தந்தையின் கட்டளையாகும்.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
இந்த பாவம் நிறைந்த உலகிலிருந்து. .
ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். யார் கேட்டது? ஆத்மாக்கள். ஆத்மாவை பரமாத்மா என சொல்ல முடியாது. மனிதர் களை பகவான் என சொல்ல முடியாது. நல்லது, இப்போது நீங்கள் பிராமணர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் இப்போது தேவதைகள் என சொல்லப் படுவதில்லை. பிரம்மாவையும் கூட தேவதா என சொல்லப்பட முடியாது. பிரம்மா தேவதாய நமஹ. . . விஷ்ணு தேவதாய நமஹ. . . என்றென்னவோ சொல்கின்றனர், ஆனால் பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது. விஷ்ணு தேவதா எனப்படுகிறார், பிரம்மாவை தேவதா என சொல்ல முடியாது ஏனென்றால் அவர் பிராமணர்களின் தந்தை. பிராமணர்களை தேவதைகள் என சொல்லப்பட முடியாது. இப்போது இந்த விஷயங்களை மனிதர்கள் யாரும் மனிதர் களுக்குப் புரிய வைக்க முடியாது, பகவான் தான் புரிய வைக்கிறார். மனிதர்கள் குருட்டு நம்பிக்கையால் என்ன தோன்றுகிறதோ அதனை சொல்லி விடுகின்றனர். ஆன்மீகத் தந்தை குழந்தைகளாகிய நம்மை கற்பித்துக் கொண்டிருக்கிறார் என இப்போது குழந்தை களாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தன்னை ஆத்மா என புரிந்துக் கொள்ள வேண்டும். நான் ஆத்மா இந்த சரீரத்தை எடுக்கிறேன். நான் ஆத்மா 84 பிறவிகளை எடுத்திருக்கிறேன். எப்படி எப்படி கர்மங்கள் செய்கின்றனரோ அப்படிப்பட்ட சரீரம் கிடைக்கிறது. சரீரத்திலிருந்து ஆத்மா பிரிந்து சென்று விட்டால் பிறகு (அவருடைய) சரீரத்தின் மீது அன்பு இருக்காது. ஆத்மாவின் மீது அன்பு இருக்கும். ஆத்மாவிடம் கூட அது சரீரத்தில் இருக்கும்போது தான் அன்பு இருக்கும். பித்ருக்களை மனிதர்கள் அழைக்கின்றனர், அவர்களுடைய சரீரம் அழிந்து விட்டது என்றாலும் கூட அவருடைய ஆத்மாவை நினைவு செய்கின்றனர், ஆகையால் பிராமணர்களுக்குள் வரவழைக்கின்றனர். இன்னாருடைய ஆத்மாவே வாருங்கள், வந்து இந்த உணவைச் சாப்பிடுங்கள் என அழைக்கின்றனர். இது ஆத்மாவின் மீது மோகம் இருப்பது போல ஆகிறது. ஆனால் முன்னர் சரீரத்தின் மீது மோகம் இருந்தது, அந்த சரீரம் நினைவுக்கு வந்து கொண்டிருந்தது. நாம் ஆத்மாவை அழைக்கிறோம் என புரிந்துக் கொள்வதில்லை. ஆத்மா தான் அனைத்தும் செய்கிறது. ஆத்மாவில் நல்ல மற்றும் கெட்ட சம்ஸ்காரங்கள் இருக்கின்றன. முதன் முதலாக தேக அபிமானம் இருக்கும், பிறகு அதற்குப் பின்னால் மற்ற விகாரங்கள் வருகின்றன. அனைத்தையும் சேர்த்து விகாரிகள் என சொல்லப்படுகின்றனர். யாருக்குள் இந்த விகாரங்கள் இல்லையோ அவர்கள் நிர்விகாரிகள் (விகாரமற்றவர்கள்) என சொல்லப்படுகின்றனர். பாரதத்தில் தேவி தேவதைகள் இருந்தபோது அவர்களுக்குள் தெய்வீக குணங்கள் இருந்தன என்பதை புரிந்துக் கொள்கிறீர்கள். இந்த லட்சுமி நாராயணரின் தர்மமே தேவி தேவதா தர்மம் ஆகும். இது கிறிஸ்தவ தர்மத்தில் ஆண் அல்லது பெண் என அனை வருமே கிறிஸ்தவர்கள் என்பது போல ஆகும். இவர்களும் தேவி தேவதைகள் என சொல்லப் படுகின்றனர். ராஜா, ராணி, பிரஜைகள் என அனைவருமே தேவி தேவதா தர்மத்தவர்கள் ஆவர். இது மிகவும் உயர்வான சுகத்தைக் கொடுக்கக் கூடிய தர்மம் ஆகும். குழந்தைகள் பாடலையும் கேட்டீர்கள், பாபா எனக்கு சுகம்-அமைதி கிடைக்கக்கூடிய இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என ஆத்மா சொன்னது. அது சுகதாமம் மற்றும் சாந்திதாமம் ஆகும். இங்கே மிகவும் அமைதியற்ற நிலை உள்ளது. சத்யுகத்தில் அமைதியற்ற நிலை இருக்காது. பாபாவைத் தவிர யாரும் அமைதியின் உலகத்திற்கு அழைத்துச் செல்ல முடியாது என ஆத்மாவுக்குத் தெரியும். தந்தை சொல்கிறார் – முக்தி மற்றும் ஜீவன் முக்தி எனும் இந்த இரண்டு பரிசுகளை ஒவ்வொரு கல்பத்திலும் கொண்டு வருகிறேன். ஆனால் நீங்கள் மறந்து விடுகிறீர்கள், நாடகத்தின்படி மறக்கத்தான் வேண்டி யுள்ளது. அனைவரும் மறந்து விடும்போது நான் வருவேன். இப்போது நீங்கள் பிராமணர்களாக ஆகியுள்ளீர்கள், நாம் 84 பிறவிகள் எடுத்திருக்கிறோம் என்ற நிச்சயம் உங்களுக்கு இருக்கிறது. யார் முழுமையான ஞானம் எடுக்கவிலையோ அவர்கள் முதலில் புதிய உலகில் கூட வர மாட்டார்கள். திரேதா அல்லது திரேதாவின் இறுதியில் வருவார்கள். அனைத்தும் முயற்சியில் அடங்கியுள்ளது. சத்யுகத்தில் சுகம் இருந்தது, இந்த லட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது. நல்லது, இவர்களின் முந்தைய பிறவியில் யாராக இருந்தனர் என்பது யாருக்கும் தெரியாது. முந்தைய பிறவியில் இவர்கள் பிராமணர்களாக இருந்தனர். அதற்கும் முன்பு சூத்திரர்களாக இருந்தனர். வர்ணங்கள் குறித்து நீங்கள் நல்ல விதமாகப் புரிய வைக்க முடியும்.
நாம் 21 பிறவிகளுக்கு அமைதியை அடைவோம் என இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பாபா நமக்கு அதற்கான வழியை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நாம் இப்போது தூய்மை யற்றவர்களாக இருக்கிறோம். ஆகையால் அமைதியற்றவர்களாக, துக்கம் மிக்கவர்களாக இருக் கிறோம். எங்கே அமைதி இருக்குமோ அதனை சுகம்-சாந்தி என்போம். ஆக இப்போது குழந்தை களாகிய உங்கள் புத்தியில் முதல்-இடை- கடைசியின் ஞானம் உள்ளது. சத்யுகத்தில் பாரதம் எவ்வளவு சுகம் மிக்கதாக இருந்தது, துக்கமோ, அமைதி யின்மையோ பெயரளவிலும் இருக்க வில்லை என புரிந்து கொள்கிறீர்கள். இப்போது நீங்கள் சொர்க்கத்திற்குச் செல்வதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். இப்போது நீங்கள் ஈஸ்வரிய சம்பிரதாயத்தவர்களாக ஆகியுள்ளீர்கள், அவர்கள் அசுர சம்பிரதாயத்தவர்கள். பாவாத்மா என சொல்கின்றனர் அல்லவா. ஆத்மாக்கள் பல, பரமாத்மா ஒருவர் ஆவார். அனைவரும் சகோதரர்கள், அனைவருமே பரமாத்மாவாக ஆக முடியாது. இந்த சிறிய விஷயம் கூட மனிதர்களின் புத்தியில் இல்லை. இந்த முழு உலகமுமே எல்லைக்கப் பாற்பட்ட தீவாக உள்ளது. அவை சிறிய சிறிய தீவுகளாக இருக்கின்றன. இந்த எல்லைக்கப்பாற்பட்ட தீவில் இராவணனின் இராஜ்யம் உள்ளது. இந்த விஷயங்களை மனிதர்கள் புரிந்து கொள்வ தில்லை. அவர்கள் வெறும் கதைகளை சொல்லிக் கொண்டிருந்தனர். கதையை ஞானம் என்று சொல்வதில்லை. அதன் மூலம் மனிதர்கள் சத்கதியை அடைய முடியாது. ஞானத்தின் மூலம் சத்கதி கிடைக்கிறது. ஞானத்தைக் கொடுப்பவர் ஒரு தந்தை, வேறு யாரும் கிடையாது. பகவான் தான் வந்து பக்தர்களை காப்பாற்றுகிறார். மனிதர்கள் மனிதர்களை பாதுகாக்க முடியாது. சிவபாபா அனைத்து குழந்தை களுக்கும் ஆஸ்தி கொடுக்கிறார். அவர் தந்தையாகவும், ஆசிரியாராகவும், சத்குருவாகவும் இருக்கிறார். வக்கீல், நீதிபதியாகவும் இருக்கிறார், ஏனென்றால் தண்டனையில் இருந்து விடுவிக்கக் கூடியவராக இருக்கிறார். சத்யுகத்தில் யாரும் சிறைச் சாலைக்குச் செல்ல மாட்டார்கள். தந்தை அனைவரையும் சிறையிலிருந்து விடுவிக்கிறார். குழந்தைகளின் அனைத்திலும் உயர்ந்த மனவிருப் பங்கள் அனைத்தும் நிறைவேறுகின்றன. இராவணனின் மூலம் அசுத்தமான விருப்பங்கள் நிறை வேறுகின்றன. தந்தையின் மூலம் சுத்தமான விருப்பங்கள் நிறைவேறுகின்றன. சுத்தமான விருப்பங்கள் நிறைவேறுவதன் மூலம் நீங்கள் சதா சுகம் நிறைந்தவர்களாக ஆகி விடுகிறீர்கள். அசுத்த மான விருப்பம் என்றால் தூய்மையற்ற விகாரமிக்கவராக ஆவது. தூய்மையாய் இருப்பவர்கள் பிரம்மச்சாரிகள் எனப்படு கின்றனர். நீங்களும் கூட தூய்மையாய் இருக்க வேண்டும். தூய்மை அடைந்து தூய்மையான உலகின் எஜமானாக ஆக வேண்டும். தூய்மையற்றவரிலிருந்து தூய்மை யானவர்களாக ஒரு தந்தைதான் ஆக்குகிறார். சாது – சன்னியாசிகள் விகாரத்தின் மூலம் பிறக்கின்றனர், தேவதைகள் குறித்து அப்படி சொல்வதில்லை. அங்கே விகாரங்கள் இருப்பதே இல்லை. அது தூய்மையான உலகம் ஆகும். லட்சுமி நாராயணர் முழுமையான விகாரமற்றவர்களாக இருந்தனர், பாரதம் தூய்மையாக இருந்தது. இதனை இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். சத்யுகத்தில் தூய்மை இருந்தபோது அமைதியும் செல்வ வளமும் இருந்தது, அனைவரும் சுகம் மிக்கவர் களாக இருந்தனர். இராவண இராஜ்யம் தொடங்கிய போது கீழே இறங்கியபடி வந்தனர். இப்போது எதற்கும் பயனற்றவர்களாகி இருக்கின்றனர். முற்றிலுமாக சோழிகளாக (மதிப்பற்றவர் களாக) ஆகி விட்டனர். இப்போது மீண்டும் வைரத்திற்குச் சமமாக தந்தையின் மூலம் ஆகிறீர்கள். தமது தர்மத்தைப் பற்றியே யாருக்கும் தெரியவில்லை. பாவங்கள் செய்தபடி இருக்கின்றனர். அங்கே பாவத்தின் பெயரே கிடையாது. நீங்கள் தேவி தேவதா தர்மத்தின் பெயர் பெற்றவர்கள், தேவதைகளின் அளவற்ற சித்திரங்கள் உள்ளன. மற்ற தர்மங்களில் பார்த்தால் ஒரே படம்தான் இருக்கும், கிறிஸ்தவர் களிடம் ஒரே கிறிஸ்துவின் படம் மட்டும்தான் இருக்கும். பௌத்த தர்மத்தவர்களிடம் ஒரு புத்தருடையது மட்டும் இருக்கும். கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவைத்தான் நினைவு செய்கின்றனர். அவர்கள் நன்ஸ் என சொல்லப்படுகின்றனர். நன்ஸ் என்றால் ஒரு கிறிஸ்துவைத் தவிர யாரு மில்லை. ஆகையால் நன் பட் கிறைஸ்ட் (கிறிஸ்து), என சொல் கின்றனர், பிரம்மச்சாரிகளாக இருக்கின்றனர். நீங்களும் கூட நன்ஸ் ஆக உள்ளீர்கள். நீங்கள் தம்முடைய இல்லற விஷயங்களில் இருந்தபடி நன்ஸ் ஆகிறீர்கள். ஒரு தந்தையை மட்டுமே நினைவு செய்கிறீர்கள். ஒருவரைத் தவிர யாருமில்லை, ஒரு சிவபாபா வைத் தவிர வேறு யாருமில்லை. இருந்தாலும் அவர்களுடைய புத்தியில் இருவர் வந்து விடுகின்றனர். கிறிஸ்துவைப் பற்றியும் கூட அவர் கடவுளின் குழந்தையாக இருந்தார் என புரிந்து கொள்வார்கள். ஆனால் அவர்களுக்கு இறைவனைப் பற்றிய ஞானம் இல்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு அந்த ஞானம் இருக்கிறது. முழு உலகிலும் இறைவனைப் பற்றிய ஞானம் உள்ளவர்கள் யாருமில்லை. பரமாத்மா எங்கே இருக்கிறார், எப்போது வருகிறார், அவருடைய நடிப்பு என்ன நடக்கிறது, இது எதுவும் தெரியாது. பகவான் அனைத்தும் அறிந்தவர் என சொல்கின்றனர். அவர் நம்முடைய மனதின் அனைத்து விஷயங்களையும் அறிந்தவர் என புரிந்து கொள் கின்றனர்.தந்தை சொல்கிறார் – எனக்குத் தெரியாது, ஒவ்வொரு வருடைய மனதிலும் என்ன இருக்கிறது என தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு என்ன இருக்கிறது. நான் வருவதே தூய்மையற்றவர்களை தூய்மை யாக்குவதற்காகும். யாராவது தூய்மையாக இல்லாதிருந்தால், பொய் சொல்கின்றனர் என்றால் தனக்குத் தானே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர் தேவதை களின் சபையில் அசுரர்கள் சென்று அமர்ந்தனர் என பாடப்பட்டுள்ளது. அங்கே அமிர்தம் கொடுக்கப் பட்டுக் கொண்டிருந்தது, யாரோ விகாரத்தில் சென்றுவிட்டு பிறகு அதனை மறைத்து வந்து அமர்கின்றனர் என்றால் அவர்கள் அசுரர்கள்தானே. தனது பதவியை தானே கீழானதாக ஆக்கிக் கொள் கின்றனர். ஒவ்வொருவரும் தம்முடைய முயற்சியை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நமக்கே சத்ய நாசத்தைத்தான் செய்து கொள்கின்றனர். பலரும் மறைத்து வந்து உட்கார்ந்து விடுகின்றனர். நாங்கள் விகாரத்தில் செல்வதே இல்லை என சொல்கின்றனர், ஆனால் விகாரத்தில் சென்றபடி இருப்பார்கள். இது தம்மைத் தாமே ஏமாற்றுவதாகும். தனக்கே சத்ய நாசத்தைச் செய்து கொள் கின்றனர். பரமபிதா பரமாத்மாவின் வலது கரமாக விளங்கும் தர்மராஜாவிடம் சென்று பொய் சொன்னார்கள் என்றால் தானே தண்டனைக்கு ஆளாகின்றனர். நிறைய செண்டர்களில் கூட இப்படிப் பட்டவர்கள் பலர் இருக்கின்றனர். பாபா முதல் முறை யாக டில்லி சென்றபோது ஒருவர் தினம் தோறும் வந்து கொண்டிருந்தார், அவர் விகாரத்தில் சென்றபடி இருந்தார். தூய்மையாக இருக்க முடியாவிட்டால் ஏன் வருகிறீர்கள் என கேட்கப் பட்டது. வராவிட்டால் நிர்விகாரியாக எப்படி ஆவேன் என்றார். தூய்மை நல்லதாக இருக்கிறது, ஆனால் அப்படி இருக்கவும் முடியவில்லை. கடைசியில் எப்படியாவது சுதாரித்துக் கொள்வேன். வராமல் இருந்து விட்டேன் என்றால் படகு மூழ்கி விடும். வேறு எந்த வழியும் இல்லை ஆகையால் நான் இங்கே வரவேண்டி யிருக்கிறது.
நீங்கள் வாயுமண்டலத்தை கெடுக்கிறீர்கள் என தந்தை புரிய வைக்கிறார், எதுவரை இப்படி வந்து கொண்டிருப்பீர்கள். தூய்மையாய் இருப்பவர்களுக்கு தூய்மையற்றவர்கள் மீது வெறுப்பு ஏற்படுகிறது. பாபா இவர்கள் கையால் சமைக்கும் உணவும் கூட நன்றாக இருப்ப தில்லை என சொல்கின்றனர். தந்தை யுக்தியும் சொல்லிக் கொடுத்திருக்கிறார், உண்பதில், அருந்துவதில் பிரச்சினை ஏற்படுகிறது, அதற்காக வேலையை விட்டு விடுவோம் என்பதல்ல, யுக்தியுடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது. யாருக்காவது புரிய வைத்தால் தூய்மையாக எப்படி இருப்பது, இதை ஒரு போதும் கேள்விப்பட்டதே இல்லை, என கோபித்துக் கொள்கின்றனர். சன்னியாசிகள் கூட தூய்மையாக இருக்க முடிவதில்லை. வீடு வாசலை விட்டுப் போனால் அப்போது தூய்மையாக இருக்க முடிகிறது. ஆனால் இங்கே பதித பாவன பரமபிதா பரமாத்மா கற்பிக்கிறார் என யாருக்கும் தெரியாது. ஏற்றுக் கொள்வதில்லை, ஆகையால் எதிர்க்கின்றனர். சிவபாபா பிரம்மாவின் உடலில் வருகிறார் என எந்த சாஸ்திரத்திலாவது காட்டுங்கள் பார்ப்போம். நான் ஒரு சாதாரண முதியவரின் உடலில் வருகிறேன், அவருக்கு தனது பிறவிகள் பற்றித் தெரியாது என்பது கீதையில் எழுதப்பட்டுள்ளது. இது எழுதப் பட்டுள்ளது, பிறகு பரமபிதா எப்படி மனிதரின் உடலில் வருவார் என ஏன் கேட்கிறீர்கள்? தூய்மையற்ற உடலில்தான் வந்து வழி காட்டுவார் அல்லவா. முன்னர் கூட வந்திருக்கிறார் மேலும் என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என சொல்லியிருக்கிறார். அவர்தான் பரந்தாமத்தில் வசிக்கிறார், மற்றும் என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என சொல்கிறார். என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என சொல்வதற்கு கிருஷ்ணரின் உடல் மூலவதனத்தில் இருக்காது. ஒரு பரமபிதா பரமாத்மாதான் சாதாரண உடலில் பிரவேசம் செய்து குழந்தைகளாகிய உங்களுக்கு சொல்கிறார் – என்னை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால் இந்த யோக அக்கினியின் மூலம் உங்களின் பாவங்கள் அழிந்து போகும், ஆகையால் தான் என்னை பதித பாவனர் என சொல்கின்றனர். பதித பாவனர் கண்டிப்பாக ஆத்மாக்களுடையவராக இருப்பார் அல்லவா. ஆத்மா தான் தூய்மை இழக்கிறது
தந்தை சொல்கிறார் – நீங்கள் தூய்மையான ஆத்மாவாக 16 கலைகளும் நிரம்பியவராக இருந்தீர்கள். இப்போது கலைகளே இல்லை, முற்றிலும் தூய்மையற்றவர்களாக ஆகியுள்ளீர் கள். நான் கல்பம் தோறும் வந்து உங்களுக்குப் புரிய வைக்கிறேன். காமச்சிதையில் அமர்ந்து கருப்பாக ஆகியுள்ள உங்களை ஞானச்சிதையில் அமர்த்தி தூய்மையாக்குகிறேன். பாரதத்தில் தூய்மையான இல்லறம் இருந்தது, இப்போது தூய்மையற்ற இல்லற மார்க்கமாக உள்ளது. யாருக்கும் அமைதி இல்லை. இருவருமே (கணவன்-மனைவி) ஞானச்சிதையில் அமருங்கள் என இப்போது தந்தை சொல்கிறார். அனைத்து ஆத்மாக்களுக்கும் தமது கர்மங்களுக்குத் தகுந்தாற்போல் சரீரம் கிடைக்கிறது. அடுத்த பிறவியிலும் அவர்களே கணவன்-மனைவியாக ஒருவரோடு ஒருவர் சந்திப்பார்கள் என்பதல்ல. இல்லை, அந்த அளவு பந்தயத்தில் ஓட முடியாது. இது படிப்பின் விஷயம் அல்லவா. அஞ்ஞான காலத்தில் நடக்கலாம், பரஸ்பரம் மிகுந்த அன்பு இருந்தது என்றால் அவர்களின் மன விருப்பம் நிறைவேறக் கூடும், அதுவோ தூய்மையில்லாத விகார மார்க்கமாகும். கணவருடன் சேர்ந்து மனைவியும் சிதையில் அமர்கிறார். அடுத்த பிறவியிலும் சென்று அவரை சந்திக்கிறார். ஆனால் அடுத்த பிறவியில் அவர்களுக்கு எதுவும் தெரியாது. நீங்களும் கூட பாபாவுடன் சேர்ந்து ஞானச் சிதையில் அமர்கிறீர்கள். இந்த சீச்சீ (அசுத்தமான) சரீரத்தை விட்டு சென்று விடுவீர்கள். உங்களுக்கு இப்போது தெரியும், அவர்களுக்கு நாம் முந்தைய பிறவியில் இப்படி துணையாக இருந்தோம் என தெரியாது. உங்களுக்கும் கூட பிறகு அங்கே இந்த விஷயங்கள் நினைவில் இருக்காது. இப்போது உங்களுடைய புத்தியில் லட்சியம் குறிக்கோள் உள்ளது. மம்மா, பாபா இருவரும் லட்சுமி, நாராயணராக ஆகப் போகிறார்கள். விஷ்ணு தேவதா ஆவார். பிரஜாபிதா பிரம்மாவை தேவதா என சொல்ல முடியாது. பிரம்மாவே தேவதா ஆகிறார். பிரம்மாவிலிருந்து விஷ்ணு, விஷ்ணுவிலிருந்து பிரம்மாவாக எப்படி ஆகிறார் என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். அமைதி சொர்க்கத்தில் மட்டுமே இருக்கும் என இப்போது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். யாராவது இறந்து விட்டால் சொர்க்கத் திற்குச் சென்று விட்டார் அதாவது அமைதிக்குச் சென்று விட்டார் என சொல்கின்றனர். அசாந்தியில் தூய்மையற்றவராக இருக்கின்றனர். எனினும் தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்தால் பாவகர்மங்கள் அழியும் என தந்தை சொல்கிறார். மற்றவை விரிவாகப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். தந்தை ஞானம் நிறைந்தவர் என்பதால் உங்களையும் தன்னைப் போலவே ஞானம் நிறைந்தவர்களாக ஆக்குவார். நினைவின் யாத்திரையின் மூலம் நீங்கள் சதோபிரதானமாக ஆகிறீர்கள், இது ஆத்மாக்களின் ஓட்டப் பந்தயம் ஆகும். யார் அதிகமாக நினைவு செய்வார் களோ அவர்கள் விரைவாக ஆவார்கள். இது யோகம் மற்றும் படிப்பின் ஓட்டப் பந்தயம் ஆகும். பள்ளிக் கூடத்திலும் ஓட்டப் பந்தயம் நடக்கிறது அல்லவா. நிறைய மாணவர்கள் இருப்பார்கள், அவர்களில் யார் முதலாவதாக வருகின்றனரோ அவர்களுக்கு கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) கிடைக்கிறது. ஒரே படிப்பு லட்சக்கணக்கானவர்களுக்கான, கோடிக் கணக்கானவர் களுக்கான தாக இருந்தால் பள்ளிகள் கூட அவ்வளவு இருக்குமல்லவா. இப்போது நீங்கள் இந்தப் படிப்பை படிக்க வேண்டும். அனைவருக்கும் வழி காட்டுங்கள். பார்வை அற்றவர்களுக்கு ஊன்றுகோலாகுங்கள். வீடுதோறும் செய்தியைக் கொண்டு சேர்க்க வேண்டும். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1. இப்போது அசுத்தமான ஆசைகளை தியாகம் செய்து சுத்தமான விருப்பங்களை வைக்க வேண்டும். தூய்மையடைந்து தூய்மையான உலகின் எஜமானர் ஆக வேண்டும். . . என்பதே அனைத்திலும் சுத்தமான விருப்பம் ஆகும். எந்த தப்பையும் மறைத்து தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. தர்மராஜா தந்தையிடம் எப்போதும் உண்மையானவராக இருக்க வேண்டும்.
2. ஞானச் சிதையில் அமர்ந்து இந்த படிப்பில் ஓட்டப் பந்தயம் (போட்டி) செய்து எதிர்கால புதிய உலகில் உயர்பதவியை அடைய வேண்டும். யோக அக்கினியின் மூலம் பாவகர்மங்களின் கணக்கை பஸ்மம் செய்ய வேண்டும்.
வரதானம்:-
சத்தியத்தின் அதிகாரத்தின் சொரூபமான குழந்தைகளின் பாடலாவது – உண்மை இருந்தால் நடனமாடுவார்கள். (உண்மை இருக்குமிடத்தில் குஷி இருக்கும்) சத்தியத்தின் படகு ஆடலாம் அசை யலாம், ஆனால் மூழ்கி போக முடியாது. உங்களை கூட ஒருவர் எவ்வளவு தான் அசைக்க முயற்சி செய்தாலும் சரி, ஆனால் நீங்கள் சத்தியத்தின் உயர்வுடைமை காரணமாக இன்னுமே குஷி என்ற ஊஞ்சலில் ஊஞ்சலாடுகிறீர்கள். அவர்கள் உங்களை அசைப்பதில்லை. ஆனால் ஊஞ்சலை ஆட்டு கிறார்கள். இது அசைத்து விடுவது கிடையாது. ஆனால் ஊஞ்சல் ஆட்டுவது ஆகும். எனவே, நீங்கள் ஊஞ்சலாட்டுங்கள், மேலும் நாங்கள் தந்தையுடன் கூட ஊஞ்சலாடுகிறோம் என்று அவர்களுக்கு நன்றி செலுத்துங்கள்.
சுலோகன்:-
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!