09 May 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

8 May 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! எந்த தந்தையை அரைக்கல்பமாக நினைவு செய்தீர்களோ, இப்போது அவருடைய கட்டளை கிடைக்கிறது என்றால் அதைப் பின்பற்றுங்கள். இதனால் உங்களுக்கு உயர்கிற (ஏறும்) கலை ஆகிவிடும்.

கேள்வி: -

குழந்தைகள் நீங்கள் தங்களுக்காக இயற்கைச் சிகிச்சையைத் தாங்களாகவே செய்துக் கொள்ள வேண்டும். எப்படி?

பதில்:-

ஒரு தந்தையின் நினைவில் இருப்பது மற்றும் யக்ஞத்திற்கு அன்போடு சேவை செய்வது – இதன் மூலம் இயற்கைச் சிகிச்சை ஆகி விடும். ஏனென்றால் நினைவின் மூலம் ஆத்மா நோயற்றதாக ஆகின்றது மற்றும் சேவையினால் அளவற்ற குஷி ஏற்படுகிறது. ஆகையால் யார் நினைவு மற்றும் சேவையில் சதா ஈடுபட்டு இருக்கின்றனரோ, அவர்களுக்கு இயற்கைச் சிகிச்சை நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

நீங்கள் இரவைத் தூங்கியே கழித்து விட்டீர்கள்

ஓம் சாந்தி. குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். மாலைகளை உருட்டி உருட்டியே சுற்றிச் சுற்றியே யுகம் கழிந்து விட்டது. எத்தனை யுகங்கள்? இரண்டு யுகங்கள் சத்யுக திரேதாவிலோ யாரும் மாலையைச் சுழற்றுவதில்லை. யாருடைய புத்தியிலுமே இது இல்லை, அதாவது நாம் உயரே செல்கிறோம், பிறகு கீழே வருகிறோம். இப்போது நமக்கு உயர்கின்ற கலை நடைபெறு கிறது. நமக்கு என்றால் பாரதத்திற்கு. எவ்வளவு பாரதவாசிகளுக்கு உயர்கின்ற கலை மற்றும் இறங்குகிற கலை ஏற்படுகிறதோ, அந்த அளவு வேறு யாருக்கும் கிடையாது. பாரதம் தான் உயர்ந்ததாகவும் தாழ்ந்ததாகவும் ஆகின்றது. பாரதம் தான் நிர்விகாரி, பாரதம் தான் விகாரி. மற்ற கண்டங்கள் அல்லது தர்மங்களோடு இவ்வளவு தொடர்பு கிடையாது. மற்றவர்கள் ஒன்றும் சொர்க்கத்திற்கு வருவதில்லை. பாரதவாசிகளுக்குத் தான் சித்திரங்கள் (நினைவு சின்னங்கள்) உள்ளன. நிச்சயமாக இராஜ்யம் செய்திருந்தனர். ஆக, பாபா புரிய வைக்கிறார், இப்போது உங்களுக்கு உயர்கின்ற கலை. யாருடைய கையைப் பிடித்துக் கொண்டிருக் கிறீர்களோ, அவர் உங்களை உடன் அழைத்துச் செல்வார். பாரதவாசிகளாகிய நமக்குத் தான் உயர்கின்ற கலை. முக்தியில் சென்று விட்டு பிறகு ஜீவன் முக்தியில் வருவோம். அரைக் கல்பம் தேவி தேவதா தர்மத்தின் இராஜ்யம் நடைபெறுகின்றது. 21 தலைமுறைகளுக்கு உயர் கின்றனர். பிறகு இறங்கும் கலை ஆகி விடுகின்றது. சொல்கின்றனர், உங்களுக்கு உயர்கின்ற கலை என்றால் அதனால் அனைவருக்கும் நன்மை. இப்போது அனைவருக்கும் நன்மை ஏற்படுகின்றது இல்லையா? ஆனால் உயர்கின்ற கலை மற்றும் இறங்கும் கலையில் நீங்கள் வருகிறீர்கள். இச்சமயம் பாரதம் எவ்வளவு கடன் வாங்குகிறதோ, அவ்வளவு வேறு யாரும் பெறுவதில்லை. குழந்தைகளுக்குத் தெரியும் நம்முடைய பாரதம் தங்கக்குருவியாக இருந்தது. மிகப் பெரும் செல்வந்தர்களாக இருந்தனர். இப்போது பாரதத்தின் இறங்கும் கலை முடிவடை கின்றது. வித்வான் முதலானவர்களோ, கலியுகத்தின் ஆயுள் இன்னும் 40000 ஆண்டுகள் நடை பெற வேண்டும் எனப் புரிந்து கொண்டுள்ளனர். முற்றிலும் அஞ்ஞான இருளில் உள்ளனர். மிகவும் யுக்தியுடன் தான் புரிய வைக்க வேண்டும். இல்லையென்றால் பக்தர்கள் கோபப் படுவார்கள். முதல் முதலிலோ இரண்டு தந்தையரின் அறிமுகம் கொடுக்க வேண்டும். பகவான் சொல்கிறார், கீதை அனைவருக்கும் தாய் தந்தை ஆகும். ஆஸ்தி கீதையின் மூலம் கிடைக்கிறது. மற்ற அனைத்தும் அதன் குழந்தைகள். குழந்தைகளிடம் ஆஸ்தி கிடைக்காது. குழந்தைகளாகிய உங்களுக்கு கீதையிடமிருந்து ஆஸ்தி கிடைத்துக் கொண்டிருக்கிறது. கீதை என்ற தாய்க்கு பிறகு தந்தையும் உள்ளார். பைபிள் முதலிய எதையும் தாய் எனச் சொல்ல மாட்டார்கள். ஆக, முதல் முதலில் கேட்க வேண்டியது, பரமபிதா பரமாத்மாவோடு உங்களுக்கு என்ன சம்மந்தம்? அனைவருக்கும் தந்தை ஒருவர் இல்லையா? ஆத்மாக்கள் அனைவரும் சதோதர சகோதரர்கள் அல்லவா? ஒரு தந்தையின் குழந்தைகள். தந்தை மனித சிருஷ்டியைப் படைக்கிறார், பிரஜாபிதா பிரம்மாவின் மூலம். ஆகவே பிறகு நீங்கள் உங்களுக்குள் சகோதர சகோதரிகள் ஆகிறீர்கள். ஆக, நிச்சயமாகப் தூய்மையாக இருந்திருப்பீர்கள். பதீத பாவனர் பாபா தான் வந்து உங்களை யுக்தியுடன் தூய்மையாக்குகிறார். குழந்தைகள் அறிவார்கள், தூய்மை யாக ஆகிவிட்டோமென்றால் தூய்மையான உலகின் எஜமானர் ஆவோம். மிகப் பெரிய வருமானமாகும். 21 பிறவிகளின் ராஜ பதவி பெறுவதற்காக தூய்மை ஆக மாட்டோம் என்று சொல்லக்கூடிய மூர்க்கர்கள் யாராவது இருப்பார்களா? மேலும் பிறகு ஸ்ரீமத் கூட கிடைக்கிறது. எந்தத் தந்தையை அரைக்கல்பமாக நினைவு செய்தீர்களோ, அவருடைய கட்டளையை நீங்கள் ஏற்று நடக்க மாட்டீர்களா? அவரது கட்டளைப்படி நடக்கவில்லை என்றால் நீங்கள் பாவாத்மா ஆகி விடுவீர்கள். இந்த உலகமே பாவாத்மாக்களுடையது. இராம இராஜ்யம் புண்ணியாத்மாக் களின் உலகமாக இருந்தது. இப்போது இராவண இராஜ்யம் பாவாத்மாக்களின் உலகம். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு உயர்கின்ற கலை. நீஙகள் உலகத்தின் எஜமானர்களாக ஆகின்றீர்கள். எப்படி குப்தமாக அமர்ந்திருக்கிறீர்கள்! பாபாவை மட்டும் நினைவு செய்ய வேண்டும். மாலை முதலியவற்றைச் சுழற்றுவதற்கான எந்த ஒரு விஷயமும் கிடையாது. பாபாவை நினைவு செய்து கொண்டே நீங்கள் காரியங்களைச் செய்யுங்கள். பாபா, உங்களுடைய யக்ஞத்தின் சேவை ஸ்தூலமாகவும், சூட்சுமமாகவும் இரண்டையும் நாங்கள் எப்படி ஒன்றாகச் செய்கிறோம்! பாபா கட்டளை இட்டிருக்கிறார், இது போல் நினைவு செய்யுங்கள். இயற்கைச் சிகிச்சை செய்விக்கின்றனர் இல்லையா? உங்களுக்கு ஆத்மா குணமாவதன் மூலம் சரீரமும் குணமாகி விடும். பாபாவின் நினைவினால் மட்டுமே நீங்கள் தூய்மை இல்லாம-ருந்து தூய்மையாக ஆகின்றீர்கள். தூய்மையாகவும் ஆகுங்கள் மற்றும் யக்ஞ சேவையையும் செய்து கொண்டே இருங்கள். சேவை செய்வதன் மூலம் மிகுந்த குஷி இருக்கும். நாம் இவ்வளவு சமயம் பாபாவின் நினைவில் இருந்து தன்னை நோயற்றவராக ஆக்கினோம் அல்லது பாரதத்திற்கு சாந்தியின் தானம் கொடுத்தோம். பாரதத்திற்கு நீங்கள் ஸ்ரீமத்படி சாந்தி மற்றும் சுகத்தின் தானம் கொடுக்கின்றீர்கள். உலகத்தில் ஆசிரமங்களோ அநேகம் உள்ளன. ஆனால் அங்கே (சாரம்) ஒன்றுமே இல்லை. அவர்களுக்கு இது தெரியாது, 21 தலைமுறைகளுக்கு சொர்க்கத்தின் இராஜ்யம் எப்படிக் கிடைக்கின்றது என்று.

நீங்கள் இப்போது இராஜயோகத்தை கற்றுக் கொள்கின்றீர்கள். அந்த மனிதர்களும் சொல்லிக் கொண்டே இருக்கின்றனர்.. காட் ஃபாதர் வந்து விட்டார் என்று. நிச்சயமாக எங்கோ இருக்கிறார். அதுவும் அவசியம் நடைபெறும் இல்லையா? விநாசத்திற்காக வெடிகுண்டு களும் தயாராக உள்ளன. நிச்சயமாக பாபா தான் சொர்க்கத்தின் ஸ்தாபனை, நரகத்தின் விநாசம் செய்வித் திருப்பார். இதுவோ நரகம் அல்லவா? எத்தனை யுத்தங்கள் முதலியவை நடைபெறுகின்றன. மிகுந்த பயம் உள்ளது. குழந்தைகளை எப்படி நடத்திச் செல்கின்றனர்! எவ்வளவு தொந்தரவுகள் நடைபெறுகின்றன! இப்போது நீங்கள் அறிவீர்கள், இந்த உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. கலியுகம் மாறி பிறகு சத்யுகமாக ஆகிக் கொண்டிருக்கிறது. நாம் சத்யுகத்தின் ஸ்தாபனையில் பாபாவின் உதவியாளராக இருக்கிறோம். பிராமணர்கள் தான் உதவியாளராக உள்ளனர். பிரஜாபிதா பிரம்மா மூலமாக பிராமணர்கள் பிறவி எடுக்கின்றனர். அவர்கள் விகாரத்தில் பிறப்பவர்கள். நீங்கள் பிரம்மா வாயின் மூலம் ஞானம் கேட்டு, தூய்மை யான பிறவி எடுப்பவர்கள். அவர்கள் பிரம்மாவின் குழந்தைகள் ஆக முடியாது. நீங்கள் தத்தெடுக்கப் படுகிறீர்கள். பிராமணர்கள் நீங்கள் பிரம்மாவின் குழந்தைகள். பிரஜாபிதா பிரம்மாவோ சங்கம யுகத்தில் தான் இருக்க முடியும். பிராமணர்கள் தான் பிறகு தேவி தேவதைகளாக ஆகின்றனர். நீங்கள் அந்த பிராமணர்களுக்கும் கூடப் புரிய வைக்க முடியும். நீங்கள் விகார வம்சாவளியினர் என்று. பிராமா தேவதாய நமஹ எனச் சொல்கிறீர்கள். பிராமணர் களுக்கும் நமஸ்தே, தேவதைகளுக்கும் நமஸ்தே சொல்கின்றனர். ஆனால் பிராமணர்களுக்கு இப்போது தான் நமஸ்தே செய்ய முடியும். இவர்கள் (சங்கமயுக) பிராமணர்கள், உடல் மனம் செல்வத்தால் பாபாவின் ஸ்ரீமத்படி நடக்கின்றனர். அந்த பிராமணர்கள் சரீர சம்மந்தமான யாத்திரையில் அழைத்துச் செல்கின்றனர். இந்த உங்களுடைய யாத்திரை, ஆன்மிக யாத்திரை யாகும். உங்கள் யாத்திரை எவ்வளவு இனிமையானது! அந்த சரீர சம்மந்தமான யாத்திரைகளோ ஏராளம். குருமார்களும் ஏராளமாக உள்ளனர். அனைவரையும் குரு எனச் சொல்லி விடுகின்றனர். இப்போது குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், நாம் இனிய சிவபாபாவின் வழிப்படி நடந்து அவரிடமிருந்து ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறோம், பிரம்மாவின் மூலமாக. ஆஸ்தியை சிவபாபாவிடமிருந்து அடைகிறோம். நீங்கள் இங்கே வருகிறீர்கள் என்றால் உடனே கேட்கிறேன் யாரிடம் வந்திருக்கிறீர்கள்? புத்தியில் உள்ளது, இது சிவபாபாவின் கடனாகப் பெறப்பட்ட ரதம். நாம் அவரிடம் செல்கிறோம். திருமண நிச்சயதார்த்தம் பிராமணர்கள் செய்விக் கின்றனர். ஆனால் தொடர்பு மணமகள், மணமகனுக்கிடையில் நிகழுமேயல்லாமல் நிச்சயதார்த்தம் செய்விக்கிற பிராமணர்களோடு அல்ல. மனைவி, கணவனை நினைவு செய்வாளா அல்லது திருமணம் செய்து வைப்பவரை நினைவு செய்வாளா? உங்களுக்கும் நாயகன் சிவபாபா. பிறகு யாரோ ஒரு தேகதாரியையும் ஏன் நினைவு செய்கிறீர்கள்? சிவனையே நினைவு செய்ய வேண்டும். இந்த லாக்கெட் (பேட்ஜ்) முதலியவற்றையும் பாபா செய்வித்திருக்கிறார், புரிய வைப்பதற்காக. பாபா தாமே (பிரம்மா) தரகராகி நிச்சயதார்த்தம் செய்விக்கிறார். ஆக, தரகரை நினைவு செய்யக் கூடாது. நாயகிகளின் யோகம் (நினைவு) நாயகனோடு தான். மம்மா பாபா வந்து குழந்தைகளாகிய உங்கள் மூலமாக முரளி சொல்கின்றனர். பாபா சொல்கிறார், இது போல் அநேகக் குழந்தைகள் உள்ளனர். அவர்களின் புருவமத்தியில் அமர்ந்து நான் முரளி நடத்துகிறேன் நன்மை செய்வதற்காக. சிலருக்கு சாட்சாத்காரம் செய்விப்பதற்காக, முரளி சொல்வதற்காக, சிலருக்கு நன்மை செய்வதற்காக வருகிறேன். பிராமணிகளிடம் இவ்வளவு சக்தி இல்லை. எனக்குத் தெரியும், இவர்களை இந்த பிராமணிகளால் உயர்த்த முடியாது என்றால் நான் அந்த மாதிரி அம்பினை எய்கிறேன், அவர்கள் அந்த பிராமணிகளை விடவும் முன்னேறிச் செல்லட்டும் என்பதற்காக. பிராமணிகள் நினைக்கின்றனர், இவர்களுக்கு நான் தான் புரிய வைத்தேன் என்று. தேக அபிமானத்தில் வந்து விடுகின்றனர். உண்மையில் இந்த அகங்காரமும் வரக்கூடாது. அனைத்தையும் செய்பவர் சிவபாபா. இங்கோ உங்களுக்குச் சொல்கிறார், பாபாவை நினைவு செய்யுங்கள். தொடர்பு சிவபாபாவோடு இருக்க வேண்டும். இவரோ இடையில் தரகராக உள்ளார். இவருக்கு அதற்கான பலன் கிடைத்துவிடுகிறது. என்றாலும் இது முதியவரின் அனுபவமுள்ள சரீரம் இல்லையா? இது மாறாது. டிராமாவில் விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்பத்தில் வேறொருவரின் உடலில் வருவார் என்பது கிடையாது. யார் கடைசியில் இருக்கிறாரோ, அவர் தான் பிறகு முதலில் செல்ல வேண்டும். மரத்தில் பாருங்கள், கடைசியில் நின்று கொண்டிருக்கிறார் இல்லையா? இப்போது நீங்கள் சங்கமயுகத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். பாபா இந்தப் பிரஜாபிதா பிரம்மாவுக்குள் பிரவேசமாகி யிருக்கிறார். ஜெகதம்பா என்பவர் காமதேனு மற்றும் கபிள்தேவ் என்றும் கொல்கின்றனர். கப்பிள் என்றால் ஜோடி. பாப் தாதா மாத் பிதா, இது கப்பிள், ஜோடி ஆகிறது இல்லையா? மாதா விடம் ஆஸ்தி கிடைப்பதில்லை. இருந்தாலும் ஆஸ்தி சிவபாபாவிடமிருந்து கிடைக்கிறது. ஆகவே அவரை நினைவு செய்ய வேண்டும். நான் வந்துள்ளேன், இவர் மூலமாக உங்களை அழைத்துச் செல்வதற்காக. பிரம்மாவும் சிவபாபாவை நினைவு செய்கிறார். சங்கருக்கு முன்னாலும் கூட சிவபாபாவின் சித்திரத்தை வைக்கின்றனர். இவை அனைத்தும் மகிமைக் காக. இச்சமயமோ சிவபாபா வந்து தம்முடைய குழந்தையாக ஆக்குகிறார். பிறகு நீங்கள் தந்தையைப் பூஜிக்க மாட்டீர்கள். தந்தை வந்து குழந்தைகளை மணமுள்ள மலர்களாக ஆக்குகிறார். சாக்கடையில் இருந்து வெளியில் கொண்டு வருகிறார். பிறகு உறுதிமொழியும் தருகின்றனர், நாங்கள் இனி ஒரு போதும் தூய்மையை இழக்க மாட்டோம். பாபா சொல்கிறார், (என்) மடியில் இடம் பெற்று விட்டுப் பிறகு முகத்தைக் கருப்பாக்கிக் கொள்ளக் கூடாது. கருப்பாக்கிக் கொண்டால் குலத்துக்குக் களங்கம் செய்தவராவீர்கள். தோல்வியடைவதால் ஆசிரியரின் பெயரைக் கெடுத்தவராவீர்கள். மாயாவிடம் தோல்வியடைந்தால் பதவி கீழானதாக ஆகி விடும். மற்ற சந்நியாசிகள் யாரும் இந்த விஷயங்களைக் கற்பிப்பதில்லை. சிலர் சொல்வார்கள், மாதத்தில் ஒரு முறை விகாரத்தில் செல்லுங்கள் என்று. சிலர் சொல்கின்றனர், 6 மாதத்தில் ஒரு முறை விகாரத்தில் செல்லுங்கள் என்று. சிலரோ மிகவும் அஜாமில் போன்ற பாவிகளாக உள்ளனர். (பிரம்மா) பாபாவோ அநேக குருக்களை அமர்த்திக் கொண்டிருக்கிறார். அவர்கள் ஒரு போதும் தூய்மையாக இருங்கள் என்று சொன்னதில்லை. நாமே இருக்க முடிவ தில்லை எனப்புரிந்து கொண்டுள்ளனர். புத்திசாலி யார் இருக்கிறார்களோ, உடனே சொல்வார் கள், நீங்களே இருக்க முடியவில்லை, எங்களை எப்படி இருக்கச் சொல்கிறீர்கள்? இருப்பினும் கேட்கின்றனர், ஜனகரைப் போல் ஒரு விநாடியில் ஜீவன் முக்திக்கான வழி சொல்லுங்கள் என்று. பிறகு குருமார் சொல்கின்றனர், பிரம்மத்தை நினைவு செய்வீர்களானால் நீங்கள் நிர்வாண்தாமத்திற்குச் சென்று விடுவீர்கள். யாரும் அங்கே செல்வதில்லை. அனைத்து ஆத்மாக்களின் வசிப்பிடம் மூலவதனம். அங்கே ஆத்மாக்கள் நாம் நட்சத்திரங்களைப் போல் இருக்கிறோம். இங்கே பூஜைக்காக லிங்கத்தைப் பெரியதாகச் செய்கின்றனர். புள்ளிக்குப் பூஜை எப்படி நடைபெறும்? சொல்லவும் செய்கின்றனர், புருவ மத்தியில் ஒரு அழகான நட்சத்திரம் ஜொலிக்கின்றது என்று. ஆக, ஆத்மாவின் தந்தையும் கூட அவ்வாறே இருப்பார் இல்லையா? தந்தைக்கு தேகம் கிடையாது. அந்த நட்சத்திரத்திற்குப் பூஜை எப்படி நடைபெற முடியும்? பாபா பரம ஆத்மா என்று சொல்லப்படுகிறார். அவரோ தந்தை. ஆத்மா எப்படியோ அது போல் தான் பரமாத்மா. அவர் ஒன்றும் பெரிய உருவம் கிடையாது. அவரிடம் இந்த ஞானம் உள்ளது. இந்த எல்லையற்ற மரத்தை வேறு யாரும் அறிந்திருக்கவில்லை. தந்தை தான் ஞானம் நிறைந்தவர். ஞானத்திலும் முழுமை, தூய்மையிலும் முழுமையானவர். அனைவருக்கும் சத்கதி அளிப்பவர். அனைவருக்கும் சுகம் சாந்தி தருபவர். குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு பெரிய ஆஸ்தி கிடைக்கிறது! வேறு யாருக்கும் கிடைக்க முடியாது. மனிதர்களோ எத்தனை குருக்களுக்குப் பூஜை செய்கின்றனர்! ஆக, இதெல்லாம் குருட்டு நம்பிக்கை அல்லவா? என்னவெல்லாம் செய்து கொண்டே இருக்கின்றனர்! அனைவரிடமும் அவமரியாதை செய்யும் வழக்கம் தான் உள்ளது. கிருஷ்ணரை லார்டு (பிரபு) என்றும் சொல் கின்றனர் காட் என்றும் சொல்கின்றனர். காட் கிருஷ்ணா சொர்க்கத்தின் முதல் இளவரசர். லட்சுமி நாராயணர் பற்றியும் சொல்கின்றனர் இவர்கள் இருவரும் காட் காடெஸ். பழைய-பழைய சித்திரங்களை மிக அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர். பழைய பழைய ஸ்டாம்புகள் கூட விற்கின்றன இல்லையா? உண்மையில் அனைத்திலும் பழமையானவர் சிவபாபா தான் இல்லையா? ஆனால் யாருக்கும் தெரியாது. மகிமை அனைத்தும் சிவபாபாவுக்குத் தான். அந்தப் பொருளோ (சிவபாபா) கிடைக்க முடியாதது. பழையதிலும் மிகப் பழைய பொருள் (பரம பொருள்) எது? நம்பர் ஒன் சிவபாபா. நம்முடைய தந்தை யார் அவருடைய பெயர் வடிவம் என்ன என்று யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவருக்குப் பெயர் வடிவம் கிடையாது எனச் சொல்லி விடுகின்றனர். அப்படியானால் யாரைப் பூஜிக்கிறீர்கள்? சிவன் என்ற பெயரோ உள்ளது இல்லையா? தேசமும் உள்ளது, காலமும் உள்ளது. அவர் தாமே சொல்கிறார், நான் சங்கமயுகத்தில் வருகிறேன். ஆத்மா சரீரத்தின் மூலம் பேசுகிறது இல்லையா? இப்போது குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டீர்கள், சாஸ்திரங்களில் எவ்வளவு கட்டுக் கதைகள் எழுதி வைத்துள்ளனர்! அதனால் இறங்கும் கலை ஏற்பட்டுள்ளது. உயரும் கலை, சத்யுக-திரேதா, இறங்கும் கலை துவாபர கலியுகம். இப்போது மீண்டும் உயரும் கலை இருக்கும். பாபாவைத் தவிர யாராலும் உயரும் கலையை உருவாக்க முடியாது. இந்த அனைத்து விஷயங்களையும் தாரணை செய்ய வேண்டி உள்ளது. எந்த ஒரு காரியம் முதலியவற்றைச் செய்து கொண்டிருந்தாலும் நினைவில் இருக்க வேண்டும். எப்படி ஸ்ரீநாத் கோவிலில் முகத்தில் துணியைக் கட்டிக் கொண்டு காரியங்களைச் செய்கின்றனர். ஸ்ரீநாத் என்று கிருஷ்ணரைச் சொல்கின்றனர். ஸ்ரீநாத்துக்கு உணவு படைக் கின்றனர் இல்லையா? சிவபாபாவோ உணவு முதலியவற்றை உண்பதில்லை. நீங்கள் தூய்மை யான உணவு சமைக்கிறீர்கள் என்றால் நினைவில் இருந்து சமைக்க வேண்டும். அப்போது அதில் சக்தி கிடைக்கும். கிருஷ்ண லோகம் செல்வதற்காக விரதம் நியமம் முதலியன மேற்கொள்கின்றனர். இப்போது நீங்கள் அறிவீர்கள், நாம் கிருஷ்ணபுரிக்குச் சென்று கொண்டிருக் கிறோம். அதனால் நீங்கள் தகுதி உள்ளவர்களாக ஆக்கப் படுகிறீர்கள். நீங்கள் பாபாவை நினைவு செய்கிறீர்கள் என்றால் பிறகு பாபா கேரண்டி (உத்திரவாதம்) தருகிறார் – நீங்கள் கிருஷ்ணபுரிக்கு அவசியம் செல்வீர்கள். நீங்கள் அறிவீர்கள், நாம் நமக்காக கிருஷ்ணபுரியை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். பிறகு நாம் தான் இராஜ்யம் செய்வோம். யார் ஸ்ரீமத் படி நடக்கின்றனரோ, அவர்கள் கிருஷ்ணபுரிக்கு வருவார்கள். லட்சுமி-நாராயணரை விடவும் கிருஷ்ணரின் பெயர் அதிகப் புகழ் பெற்றதாக உள்ளது. கிருஷ்ணர் சிறு குழந்தை என்றால் மகாத்மாவுக்கு சமம். குழந்தைப் பருவம் சதோபிரதான நிலையில் இருப்பதால் கிருஷ்ணருக்குப் பெயர் அதிகம் உள்ளது. நல்லது

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) தனது முழுத் தொடர்பையும் ஒரு சிவபாபாவுடன் வைக்க வேண்டும். ஒரு போதும் எந்த ஒரு தேகதாரியையும் நினைவு செய்யக் கூடாது. ஒரு போதும் தன்னுடைய குருவின் (தந்தை) பெயரைக் கெடுத்துவிடக் கூடாது.

2) தன் மூலமாக யாருக்காவது நன்மை ஏற்படுகிறதென்றால், நான் இவருக்கு நன்மை செய்தேன் என்ற அகங்காரத்தில் வரக் கூடாது. இதுவும் தேக அபிமானமாகும். செய்விப்பவராகிய பாபாவை நினைவு செய்ய வேண்டும்.

வரதானம்:-

தினமும் அமிர்தவேளையில் மூன்று புள்ளிகள் என்ற திலகத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்று பாப்தாதா எப்பொழுதும் சொல்கிறார். நீங்களும் புள்ளியாக இருக்கிறீர்கள், பாபாவும் புள்ளியாக இருக்கிறார் மேலும் என்ன நடந்ததோ, என்ன நடந்து கொண்டிருக்கிறதோ, எதுவும் புதியதல்ல, எனவே முற்றுப்புள்ளியும் கூட புள்ளி தான். பிறகு முழு நாளும் ஆடாமல் அசையாமல் இருப்பீர்கள். ஏன், என்ன என்ற குழப்பங்கள் முடிந்துவிடும். ஏதாவதொரு நேரத்தில் ஏதாவது நடைபெறுகிறது என்றால் அந்த நேரத்தில் முற்றுப் புள்ளி வையுங்கள். எதுவும் புதியதல்ல நடந்தது, நடந்து கொண்டிருக்கிறது. சாட்சியாக இருந்து பாருங்கள் மற்றும் முன்னேறிக் கொண்டேயிருங்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top