09 December 2021 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
9 December 2021
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! உங்களுக்கு இராஜயோகம் கற்பிப்பதற்காக தந்தை வந்துள்ளார். தந்தையைத் தவிர எந்த ஒரு தேகதாரியும் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்க முடியாது.
கேள்வி: -
தீவிர பக்தி செய்வதால் எந்த ஒரு பிராப்தி கிடைக்கிறது, எந்த ஒரு பிராப்தி கிடைப்ப தில்லை?
பதில்:-
யாராவது தீவிர பக்தி செய்தார்கள் என்றால் (காட்சி) தரிசனம் ஆகி விடுகிறது. மற்றபடி சத்கதி யாருக்குமே ஏற்படுதில்லை. யாருமே திரும்பிப் போவதில்லை. தந்தை இல்லாமல் யாருமே திரும்பி அழைத்துச் செல்ல முடியாது. நீங்கள் இந்த அமைந்த, அமைக்கப்பட்டுள்ள நாடகத்தை அறிந்துள்ளீர் கள். உங்களுக்கு ஆத்மா பற்றிய சரியான ஞானம் உள்ளது. ஆத்மா தான் சொர்க்கவாசி மற்றும் நரகவாசி ஆகிறது.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
ஓம் சாந்தி. ஆன்மீகக் குழந்தைகளுக்காக ஆன்மீக தந்தை ஓம் சாந்தியின் பொருளை புரிய வைத்துள்ளார். ஓம் என்பதற்கு அகம் அதாவது நான் என்று கூறப்படுகிறது. நான் ஆத்மா, என்னுடைய சரீரம் இரண்டு பொருட்கள் உள்ளன. இவ்வாறு ஓம் சாந்தி என்று ஆத்மா கூறியது. அதாவது சாந்தி என்னுடைய சுயதர்மம் ஆகும். ஆத்மாவின் இருப்பிடம் சாந்திதாமம் அல்லது பரந்தாமம் ஆகும். அது நிராகார உலகம் ஆகும். இது சாகாரி மனிதர் களின் உலகமாகும். மனிதனுக்குள் ஆத்மா இருக்கிறது. மேலும் இந்த சரீரம் 5 தத்துவங் களால் அமைக்கப்பட்டுள்ளது. ஆத்மா அழிவற்றது ஆகும். அது ஒரு பொழுதும் இறப்ப தில்லை. இப்பொழுது ஆத்மாவின் தந்தை யார்? சரீரத்தின் தந்தை ஒவ்வொரு வருக்கும் தனித் தனி ஆவார். மற்றபடி அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஒரே ஒருவர், பரமபிதா பரமாத்மா ஆவார். அவருடைய உண்மையான பெயர் சிவன் என்பதாகும். முதன் முதலில் சிவபரமாத்மாய நம: என்று கூறுகிறார்கள். பிறகு பிரம்மா தேவதாய நம: விஷ்ணு தேவதாய நம: என்பார்கள். அவர்களை பகவான் என்று கூற முடியாது. எல்லோரையும் விட உயர்ந்தவர் நிராகார பரமாத்மா ஆவார். பிறகு இருப்பது சூட்சும தேவதைகள். இங்கு எல்லோருமே மனிதர்கள் ஆவார்கள். இப்பொழுது ஆத்மாவின் ரூபம் என்ன என்ற கேள்வி எழுகிறது. பாரதத்தில் சிவனுக்கு பூஜை செய்கிறார்கள். சிவ் காசி, சிவ் காசி என்று கூறு கிறார்கள். அவர்கள் லிங்கத்தை அமைக்கிறார்கள். ஒரு சிலர் பெரியதாக அமைக்கிறார்கள். ஒரு சிலர் சிறியதாக அமைக்கிறார்கள். ஆனால் ஆத்மாவின் ரூபம் எப்படியோ அப்படியே தான் பரமாத்மாவின் ரூபமும் ஆகும். பரம ஆத்மா என்பதை ஒன்று சேர்த்து பரமாத்மா என்று கூறுகிறார்கள். பரமாத்மாவிற்காக ஒரு சிலர் அவர் அகண்ட சோதி சொரூபம் என் கிறார்கள். ஒரு சிலர் பிரம்மம் என்கிறார்கள். எப்படி ஆத்மாவாகிய நீங்கள் பிந்துவாக இருக் கிறீர்களோ, அதே போல என்னுடைய ரூபமும் பிந்து ஆகும் என்று இப்பொழுது தந்தை புரிய வைக் கிறார். ருத்ர பூஜை செய்யும் பொழுது அதில் லிங்கத்தை தான் அமைக் கிறார்கள். சிவனுக்கு பெரிய லிங்கம் கூடவே சிறு சிறு சாலிகிராமங்களும் அமைக்கிறார்கள். மனிதர் களுக்கு ஆத்மா பற்றிய சரியான ஞானம் இல்லை. பரமாத்மா பற்றிய சரியான ஞானமும் இல்லை. ஆக அவர்கள் பின் என்ன மனிதர்கள்! எல்லோருக்குள்ளும் 5 விகாரங்கள் பிரவேசமாகி உள்ளது. தேக அபிமானத்தில் வந்து ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த விகாரங்கள் துக்கம் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. யாராவது இறந்து விட்டார் என்றால் துக்கம் ஏற்பட்டது. இது கூட முள் குத்தியது போலத்தான்! எந்த ஒரு மனிதனுக்கும் ஆத்மா பற்றிய, பரமாத்மா பற்றிய உணருதல் (ரியலைசேஷன்) கிடையாது. தோற்றம் மனிதர்களினுடையது. குணங்கள் விகாரியினுடையது. எனவே இராவண சம்பிரதாயம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இருப்பதே இராவண இராஜ்யமாக! எல்லோரும் எங்களுக்கு இராம இராஜ்யம் வேண்டும் என்று கூறுகிறார்கள். கீதையில் கூட கௌரவ சம்பிரதாயம், பாண்டவ சம்பிரதாயம் மற்றும் யாதவ சம்பிரதாயம் என்ற வார்த்தைகள் உள்ளன. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இராஜயோகத்தை ஸ்ரீகிருஷ்ணர் கற்பிக்க முடியாது. அவர் சத்யுகத்தின் இளவரசர் ஆவார். சர்வ குணங்களில் சம்பன்ன மானவர் என்பது அவரது மகிமை ஆகும். ஒவ்வொருவருடைய காரியங்கள் மகிமை தனித் தனியாகும். ஜனாதிபதியின் கடமை தனி, பிரதம மந்திரியின் கடமை தனி. இப்பொழுது இவர் உயர்ந்ததிலும் உயர்ந்த எல்லையில்லாத தந்தை ஆவார். இவருடைய காரியங்களையும் மனிதர்கள் தானே அறிவார்கள். விலங்குகள் அறிந்து கொள்ளுமா என்ன? மனிதர்கள் தமோபிரதானமாக ஆகி விடும் பொழுது ஒருவரை யொருவர் திட்டு கிறார்கள். இது பழைய உலகம் கலியுகமாக இருக்கிறது. இதற்கு நரகம் என்று கூறப்படுகிறது. விகார உலகம் என்று கூறப்படுகிறது. சத்யுகத்திற்கு நிர்விகாரி உலகம் என்று கூறப்படுகிறது. எங்களுக்கு இராம இராஜ்யம் வேண்டும் என்று ஆத்மா இந்த உறுப்புக்கள் மூலமாகக் கூறுகிறது. ஹே பதீத பாவனரே! நீங்கள் வந்து பாவனமாக ஆக்குங்கள். சாந்திதாமம் சுக தாமத்திற்கு அழைத்து செல்லுங்கள். துக்கம் சுகத்தின் விளை யாட்டு அமைக்கப் பட்டுள்ளது என்று தந்தை புரிய வைக்கிறார். மாயையிடம் தோற்றால் தோல்வி. மாயையை வென்றால் வெற்றி. யாரைப் பூஜை செய்கிறார்களோ அவர்களுடைய தொழிலை முற்றிலுமே அறியாமல் இருக்கிறார்கள். இதற்கு குருட்டு நம்பிக்கை அல்லது பொம்மைகளின் பூஜை என்று கூறப்படுகிறது. எப்படி குழந்தைகள் பொம்மை செய்து அவற்றுடன் விளையாடி பிறகு அவற்றைக் கலைத்து விடுகிறார்கள். சிவபரமாத்மாய நம: என்று கூறுகிறார்கள். ஆனால் அர்த்தத்தைத் தெரியாமலிருக்கிறார்கள். சிவன் உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை ஆவார். பிரம்மாவை பிரஜாபிதா என்று கூறுகிறார்கள். பிரஜை என்றாலே மனித சிருஷ்டி. சிவன் ஆத்மாக்களின் தந்தை ஆவார். எல்லோருக்குமே இரண்டு தந்தையர் இருக்கிறார்கள். ஆனால் அனைத்து ஆத்மாக்களின் தந்தை சிவன் ஆவார். அவருக்கு துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர் என்று கூறப்படுகிறது. கல்யாணகாரி (நன்மை செய்பவர்) என்றும் கூறுகிறார்கள். தேவதைகளிடம் நீங்கள் சர்வகுண சம்பன்ன.. .. .. நாங்கள் நீசர் பாவி.. .. எங்களிடம் எந்த குணமும் இல்லை என்று பாடுகிறார்கள். முற்றிலுமே இழிந்த புத்தியாக இருக்கிறார்கள். தேவதைகள் தூயபுத்தியினராக இருந்தார்கள். இங்கு எல்லோருமே விகாரி பதீதமாக (தூய்மையற்று) இருக்கிறார்கள்.. எனவே குருவிடம் செல்கிறார்கள். குரு யாரென்றால் சத்கதி அளிப்பவராக இருக்க வேண்டும். வானப் பிரஸ்த நிலையில் தான் குருவிடம் செல்வார்கள். நாங்கள் பகவானிடம் செல்ல விரும்புகிறோம் என்பார்கள். சத்யுகத் தில் வானப்பிரஸ்த நிலை என்று கூறுவ தில்லை. அங்கு நாங்கள் ஒரு சரீரத்தை விட்டு மற்றொன்றை எடுக்க வேண்டும் என்பது தெரிந்திருக்கும். இங்கு மனிதர்கள் முக்திக்கு செல்வதற்காக குருவிடம் போகிறார்கள். ஆனால் யாருமே முக்தியில் செல்வது இல்லை. இந்த குருக்கள் எல்லோருமே பக்தி மார்க்கத் தினுடையவர்கள் ஆவார்கள். சாஸ்திரங்கள் கூட எல்லாமே பக்தி மார்க்கத்தினுடையது ஆகும். இதை தந்தை புரிய வைக்கிறார். அவரே பகவான் ஆவார். மனிதனை எப்படி பகவான் என்று கூற முடியும். இங்கு எல்லோ ரையுமே பகவான் என்று கூறிக் கொண்டே இருக்கிறார்கள். சாயி பாபா கூட பகவான். நானும் பகவான் நீயும் பகவான். கல் மண் எல்லாவற்றிலுமே பகவான். எனவே கல்புத்தி ஆகிறார்கள் அல்லவா? நீங்கள் கூட முதலில் கல்புத்தி நரகவாசியாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் சங்கம யுகத்தினர் ஆவீர்கள். மகிமை முழுவதும் சங்கமயுகத் தினுடைய தாகும். புருஷோத்தம மாதம் கொண்டாடுகிறார்கள் அல்லவா? ஆனால் அதில் யாரும் உத்தம புருஷர் ஆவதில்லை. நீங்கள் இப்பொழுது மனிதனிலிருந்து தேவதை எவ்வளவு உத்தம புருஷராக ஆகிறீர்கள். நான் கல்பத்தின் சங்கமயுகத்தில் பாரதத்தை புருஷோத்தமமாக ஆக்க வருகிறேன் என்று தந்தை கூறுகிறார். எனவே எப்படி ஆத்மா பிந்துவாக உள்ளதோ அதே போல பரமபிதா பரமாத்மாவும் பிந்து ஆவார் என்பதையும் குழந்தைகளுக்குப் புரிய வைத்துள்ளார். புருவ மத்தியில் பிரகாசிக்கும் அதிசயமான நட்சத்திரம் என்று கூறுகிறார்கள். ஆத்மா சூட்சுமமானது. அது புத்தியின் மூலமாக உணரப்படுகிறது. இந்த கண்களால் பார்க்க முடியாது. திவ்ய திருஷ்டி மூலமாகப் பார்க்க முடியும். ஒருவர் தீவிர பக்தி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது அவருக்கு தரிசனம் கிடைக்கிறது. ஆனால் அதனால் என்ன பலன்? ஒன்றும் இல்லை. தரிசனம் (காட்சி தெரிதல்) ஆவதால் சத்கதியோ அடைய முடியாது. சத்கதி அளிக்கும் வள்ளல் துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர் ஒரே ஒரு தந்தை ஆவார். இந்த உலகமே விகாரி ஆகும். சாட்சாத்காரத்தினால் யாரும் சொர்க்கத் திற்குச் செல்வதில்லை. சிவனுக்கு பக்தி செய்தார்கள். தரிசனம் ஆகியது. பிறகு என்ன ஆயிற்று? தந்தை இன்றி யாருமே திரும்ப அழைத்துச் செல்ல முடியாது. இது அமைந்த, அமைக்கப்பட்ட நாடகமாகும். அமைந்தது அமைக்கப்பட்டதே மீண்டும் அமைந்து கொண்டிருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால் சிறிதளவும் பொருள் புரியாமல் உள்ளார்கள். ஆத்மா பற்றிய ஞானம் இல்லை. அவர்கள் ஒவ்வொரு ஆத்மாவும் 84 இலட்சம் பிறவிகள் எடுக்கிறது என்கிறார்கள். அதில் ஒரு மனிதப் பிறவி மிகவும் அரியது என்கிறார்கள். ஆனால் அந்த மாதிரி விஷயம் எதுவும் கிடையாது. மனிதனுடைய பெரிய பாகம் நடந்து கொண்டிருக் கிறது. மனிதர்கள் தான் சொர்க்கவாசி மற்றும் மனிதர்கள் தான் நரகவாசி ஆகிறார்கள். பாரதம் தான் எல்லாற்றையும் விட உயர்ந்த கண்டமாக இருந்தது. இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது. அங்கு மிகவும் குறைவான மனிதர்கள் இருந்தார்கள். ஒரு தர்மம் ஒரு வழி இருந்தது. பாரதம் முழு உலகிற்கு அதிபதியாக இருந்தது. வேறு எந்த தர்மமும் இருக்கவில்லை. இது படிப்பு ஆகும். இதை யார் படிப்பிக்கிறார்? நான் உங்களை இந்த இராஜயோகத்தின் மூலமாக இராஜாக்களுக்கெல்லாம் இராஜவாக ஆக்குகிறேன் என்று பகவான் கூறுகிறார். பகவான் யாருக்கு கீதையைக் கூறினார்? கீதையினால் பிறகு என்ன ஆகியது? இது யாருக்குமே தெரியாது. கீதைக்குப் பிறகு மகாபாரதம் இருக்கிறது. கீதையில் இராஜயோகம் இருக்கிறது. என் ஒருவனை நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுடைய பாவங்கள் சாம்பலாகும் என்று பகவான் கூறுகிறார். மன்மனாபவ என்பதன் பொருளே இது தான். சூரிய வம்சத்தில் பூஜைக்குரியவராக இருந்த நீங்கள் இப்பொழுது பூஜாரி சந்திர வம்சத்தினர் ஆகி உள்ளீர்கள் என்று தந்தை கூறுகிறார். விராட ரூபத்தின் பொருளைக் குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். அவர்கள் காண்பிக்கும் விராட ரூபத்தில் பிராமணர்களே இல்லாமல் செய்து விட்டுள்ளார்கள். பிராமணர்கள் நிறைய பாடப்படுகிறார்கள். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் ஆவார்கள் அல்லவா? தந்தை பிரம்மா மூலமாகத் தான் படைப்பைப் படைக்கிறார். தத்து எடுக்கிறார். இப்பொழுது நீங்கள் உயர்ந்த பிராமணர்கள் ஆவீர்கள். உங்களைப் படைப்பவர் உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான்! அவர் அனைவருக்கும் தந்தை ஆவார். பிரம்மாவிற்கும் அவர் தந்தை ஆவார். முழு படைப்பிற்கும் அவர் தந்தை ஆவார். படைப்பு எல்லாமே சகோதரர்கள் ஆகிறார்கள். ஆஸ்தி தந்தை யிடமிருந்து கிடைக்கிறதேயன்றி சகோதரனிட மிருந்து அல்ல. சிவஜெயந்தி கூட கொண்டாடப் படுகிறது. இன்றிலிருந்து 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாக பிரம்மா வின் உடலில் சிவபாபா வந்திருந்தார். தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை செய்திருந்தார். பிராமணர்கள் தான் இராஜயோகத்தைக் கற்றிருந்தார்கள். அதை நீங்கள் இப்பொழுது கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். பாரதம் முதலில் சிவாலயமாக இருந்தது. சிவபாபா சிவாலயம் (சொர்க்கம்) படைத்தார். மேலும் பாரதவாசிகள் தான் சொர்க்கத்தில் ஆட்சி புரிந்து கொண்டி ருந்தார்கள். இப்பொழுது எங்கு ஆட்சி புரிகிறார்கள்? இப்பொழுது பதீதமான (தூய்மையற்ற) உலகம் நரகமாக உள்ளது. நாம் நரகவாசி ஆவோம் என்பதை யாரும் புரியாமல் உள்ளார்கள். இன்னார் இறந்தார் என்றால் சொர்க்கவாசி ஆனார் என்று கூறு கிறார்கள். எனவே தங்களை நரகவாசி என்று உணர வேண்டும்.
நான் குழந்தைகளாகிய உங்களை சொர்க்கவாசியாக ஆக்கி இருந்தேன். அதற்கு 5 ஆயிரம் வருடங்கள் ஆகியது என்று தந்தை கூறுகிறார். முதலில் நீங்கள் மிகவும் செல்வந்த ராக இருந்தீர்கள். முழு உலகிற்கு அதிபதியாக இருந்தீர்கள். எனவே பகவான் தான் ஆக்கியிருக்கக் கூடும். நான் இவ்வாறு உங்களை இராஜாக் களுக்கெல்லாம் இராஜாவாக ஆக்குகிறேன் என்று பகவான் கூறுகிறார். எனவே நிச்சயம் இராஜாவும் ஆவார்கள். பிரஜை களும் ஆவார்கள். அரைகல்பம் பகல் சொர்க்கம் ஆகும். அரைகல்பம் இரவு நரகம் ஆகும். இப்பொழுது பிரம்மா ஒரு முறை தான் வருவார் அல்லவா? தந்தை அனைவரின் ஆன்மீக வழிகாட்டி ஆவார். அவர் அனைவரையும் திரும்ப அழைத்துச் செல்கிறார். அங்கிருந்து மீண்டும் மரண உலகத்திற்கு வரமாட்டீர்கள். குருடர்களின் கைத்தடி ஒரே ஒரு தந்தை ஆவார். குழந்தைகளே! இந்த இராவண இராஜ்யத்தின் விநாசம் ஆகப் போகிறது என்று தந்தை புரிய வைக்கிறார். இது அதே மகாபாரதப் போர் ஆகும். மனிதர்கள் ஒன்றுமே புரிந்து கொள்வதில்லை. பாரதவாசிகள், அவர்களே பூஜைக்குரியவர்களாகவும், அவர்களே பூஜாரிகளாகவும் ஆகிறார்கள். படி இறங்கி இறங்கி வாம மார்க்கத்தில் சென்று விடுகிறார்கள். எனவே பூஜாரி ஆகி விடுகிறார்கள். முதலில் நாம் அனைவரும் பூஜைக்குரிய சூரியவம்சத் தினராக இருந்தோம். பிறகு 2 கலை குறைந்து சந்திர வம்சத்தினர் ஆனோம். பிறகு இறங்கி இறங்கி பூசாரி ஆனோம். முதன் முதலில் சிவனுக்கு பூஜை நடக்கிறது. அதற்கு கலப்படமற்ற பூஜை என்று கூறப்படுகிறது. இப்பொழுது ஒரு நிராகாரமான தந்தையை நினைவு செய்யுங் கள் என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். வேறு எந்த ஒரு தேகதாரியையும் நினைவு செய்யக் கூடாது. ஹே பதீத பாவனரே வந்து எங்களை பாவனமாக ஆக்குங்கள் என்றே அழைக்கிறார்கள். ஆக என்னைத் தவிர வேறு யாரும் எப்படி பாவனமாக ஆக்க முடியும்? கலியுக கடைசியில் என்ன இருக்கிறது என்பதை ஏணிப்படியில் காண்பித்துள்ளார்கள். 5 தத்துவங்களை பக்தி செய்கிறார்கள். சாது சந்நியாசிகள் பிரம்மத்தின் சாதனை செய்கிறார்கள். சொர்க்கத்தில் இவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இந்த முழு நாடகம் பாரதத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளது. 84 பிறவிகள் எடுப்பீர்கள். இங்கு பக்தி மார்க்கத்தின் எந்த ஒரு கட்டுக் கதையும் கிடையாது. இதுவோ படிப்பு ஆகும். இங்கு ஒரு தந்தையை மட்டும் நினைவு செய்யுங்கள் என்று அறிவுரை கிடைக்கிறது. பிரம்மா விஷ்ணு சங்கரரைக் கூட நினைவு செய்யக் கூடாது. எந்த ஒரு தேகதாரியையும் நினைவு செய்யக் கூடாது. எங்களுடையவர் ஒரு சிவபாபா வேறு யாரும் இல்லை என்று குழந்தைகளாகிய நீங்களும் கூறுகிறீர்கள். குழந்தைகளே! இல்லறத்தில் இருந்தபடியே தாமரை மலர் போல தூய்மை ஆகுங்கள்! என்று தந்தையும் கூறுகிறார். பதீத பாவனர் என்று தந்தையாகிய என் ஒருவனுக்குத் தான் கூறுகிறார்கள். பிறகு மனிதர்கள் குருவாக எப்படி ஆக முடியும்? சுயம் தாங்களே திரும்பிப் போக முடியவில்லை என்றால் மற்றவர்களை எப்படி கூட்டிச் செல்ல முடியும்? ஜோதி ஜோதியுடன் கலப்பதும் இல்லை. பாகங்களை நடிப்பவர்கள் அனைவரும் இங்கு புனர்ஜென்மத்தில் இருக்கிறார்கள். நீங்கள் அனைவரும் மணமகள்கள் ஆவீர்கள். ஒரு மணமகனை நினைவு செய்கிறீர்கள். அவர் கருணையுள்ளம் உடையவர் விடுவிப்பவர் (லிபரேட்டர்) ஆவார். இங்கு துக்கம் உள்ளது. அதனால் தான் அவரை நினைவு செய்கிறார் கள். சத்யுகத்தில் யாருமே நினைவு செய்வது இல்லை. எனது பாகமே சங்கமயுகத்தில் தான் உள்ளது என்று தந்தை கூறுகிறார். மற்றபடி யுகே யுகே என்று தவறான வார்த்தை களை எழுதி விட்டுள்ளார்கள். இந்த கல்யாணகாரி புருஷோத்தம யுகம் பற்றி யாருக்குமே தெரியாது. முதல் முக்கியமான விஷயமே தந்தையை அறிந்து கொள்ளுதல் ஆகும். இல்லையென்றால் தந்தையிடமிருந்து ஆஸ்தியை எப்படி எடுப்பீர்கள்? படைப்பிடமிருந்து ஆஸ்தி கிடைக்க முடியாது. தந்தை பிரம்மா மூலமாகத் தத்து எடுத்துள்ளார். இவ்வளவு பெரிய பிரஜைகள் எப்படி உருவாக்கி இருக்க முடியும் என்பது மனிதர்களுக்குத் தெரியாது. பிரஜா பிதா ஆவார் அல்லவா? சரஸ்வதி அம்மாவா இல்லை மகளா? இது கூட யாருக்கும் தெரியாது. உங்களுடைய தாயோ மறைமுகமாக இருக்கிறார். பிரம்மா மூலமாக உங்களைத் தத்து எடுக்கிறார். இப்பொழுது நீங்கள் இராஜரிஷி ஆவீர்கள். ரிஷி என்ற வார்த்தை தூய்மை யின் அடையாளம் ஆகும். சந்நியாசிகள் ஹடயோகி ஆவார்கள். அவர்கள் இராஜயோகம் கற்பிக்க முடியாது. அவர்கள் கூறும் கீதை பக்தி மார்க்கத்தினுடையது ஆகும். எவ்வளவு கீதைகளைப் படைத்துள்ளார்கள். குழந்தைகளே நான் சம்ஸ்கிருதத்தில் ஒன்றும் படிப்பிப் பதில்லை. சுலோகம் ஆகியவையின் விஷயமும் கிடையாது. உங்களுக்கு வந்து இராஜ யோகத்தைக் கற்பிக்கிறேன். இந்த இராஜயோகத்தினால் நீங்கள் பாவனமாக ஆகி பாவன உலகத்திற்கு அதிபதி ஆகி விடுகிறீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1. ஒரு பொழுதும் எந்த ஒரு தேகதாரியையும் நினைவு செய்யக் கூடாது. என்னுடையவர் ஒரே ஒரு சிவபாபா இரண்டாவது என்று யாருமே இல்லை என்ற இந்த பாடத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
2. தந்தைக்கு சமமாக ஆன்மீக வழிகாட்டியாகி அனைவருக்கும் வீட்டிற்கான வழியைக் கூற வேண்டும். குருடர்களின் கைத்தடியாக வேண்டும்.
வரதானம்:-
சம்பூரண கர்மாதீத் நிலை அடைவதில் வீணான எண்ணங்களின் புயல் தான் தடை போடுகிறது. இந்த வீணான எண்ணங்களின் புகார்களை முடிப்பதற்காக தனது மனதை எந்நேரமும் பிஸியாக வைத்திருங்கள். நேரத்தை முன் கூட்டியே பதிவு செய்வதற்கான முறையை கையாளுங்கள். முழு நாளில் மனதை ஏதாவதொரு இடத்தில் பிஸியாக (அலை பாயாமல்) வையுங்கள். – இதற்கான நிகழ்ச்சியை உருவாக்குங்கள். தினந்தோறும் தனது மனதை 4 விஷயங்களில் பிஸியாக வையுங்கள். 1. சந்திப்பு (ஆன்மீக உரையாடல்).
2. வர்ணணை (சேவை). 3. மூழ்கியிருப்பது மற்றும் 4. ஈடுபாடு. இதனால் நேரம் பயனுள்ள தாக மாறிவிடும். மேலும் வீணானவற்றின் புகார்கள் முடிந்துவிடும்.
சுலோகன்:-
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!