07 June 2021 TAMIL Murli Today – Brahma Kumaris
6 June 2021
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! அமிர்தவேளையின் சமயம் மிக மிக நல்லது, ஆகையால் அதிகாலையில் எழுந்து ஏகாந்தத்தில் (தனிமையில்) அமர்ந்து பாபாவிடம் இனிமையிலும் இனிமையான உரையாடல் செய்யுங்கள்.
கேள்வி: -
எந்த ஞானம் நிரந்தர யோகி ஆவதில் உதவி புரிகிறது?
பதில்:-
நாடகத்தின் ஞானம். என்னவெல்லாம் நடந்து முடிந்ததோ, நாடகத்தின் விதி. ஆகவே மன நிலையில் கொஞ்சமும் குழப்பத்தில் வரக் கூடாது. எந்த சூழ்நிலையாகவும் இருக்கலாம், நில நடுக்கம் ஏற்படலாம், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம், ஆனால் கொஞ்சமும் சந்தேகம் எழக்கூடாது. இப்படிப்பட்டவரைத் தான் மஹாவீர் என சொல்லலாம் நாடகத்தின் சரியான ஞானம் இல்லாவிட்டால் கண்ணீர் வடித்தபடி இருப்பார்கள். நிரந்தர யோகி ஆவதில் நாடகத்தின் ஞானம் மிகவும் உதவி புரிகிறது.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
ஓம் நம: சிவாய. . .
ஓம் சாந்தி. தூய்மையற்ற உலகின் முடிவு இப்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது, தூய்மையான உலகின் தொடக்கம் நடந்துக் கொண்டிருக்கிறது, இதை குழந்தைகள் இப்போது நல்ல முறையில் புரிந்து கொள்கின்றனர். இதனை குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே புரிந்து கொண்டிருக்கிறீர்கள். மேலும் குழந்தைகளுக்குத்தான் இந்த வழி அதாவது ஸ்ரீமத் கிடைக்கிறது. யார் கொடுக்கிறார்? உயர்ந்தவரிலும் உயர்ந்த பகவான். தூய்மையற்ற வரிலிருந்து தூய்மையானவராக ஆக வேண்டும் என புரிய வைக்கிறார். இந்த ஞானம் உங்களுக்காகவே ஆகும், மற்ற அனைவரும் தூய்மையற்றவர் களாக உள்ளனர். இந்த பழைய உலகம் கண்டிப்பாக வினாசம் ஆக வேண்டும். விகாரிகள் தூய்மையற்றவர்கள் எனப்படுகின்றனர். நீங்கள் (விகாரிகள்) பிறவி பிறவிகளாக ஒருவர் மற்றவருக்கு துக்கம் கொடுத்தபடி வந்தீர்கள், ஆகையால் நீங்கள் முதல்-இடை-கடைசி வரையும் துக்கத்தை அடைகிறீர்கள். ஒருவர் மற்றவரை தூய்மையற்றவராக ஆக்குகிறீர்கள். நாங்கள் தூய்மை யற்றவர்கள் என கூக்குரலும் இடுகின்றனர், ஆனால் புத்தியில் முழுமையாக பதிவதில்லை. பதீத பாவனா (தூய்மை ஆக்கக் கூடியவரே) வாருங்கள் என சொல்லவும் செய்கின்றனர், ஆனாலும் கூட தூய்மை யற்ற தன்மையை விடுவதில்லை. முழு விஷயமே தூய்மை யடைவதுதான் என இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இதனை புரிய வைக்கவும் யாராவது தேவைப்படுகின்றனர். புரிய வைப்பவர் ஒருவரே ஆவார். மற்றபடி இந்த குருமார்கள் யாரையும் தூய்மையாக்க முடியாது. தூய்மையும் கூட ஒரு பிறவிக்கு மட்டுமல்ல, பிறவி பிறவிகளுக்காகவும் ஆக வேண்டும். உங்களுக்குள்ளும் ஞானத்தை சரியாகப் புரிந்திருப்பவர்கள் வேகமாகச் செல்வார்கள். நாடகத்தின்படி அது பதிவாகி யுள்ளது. உங்களுக் குள்ளும் மஹாவீர் (தைரியம்) தன்மை தேவைப்படுகிறது. தந்தையின் நினைவில் இருக்கும் போது அது வரும். தந்தை மிகவும் நல்ல விதமாக அமர்ந்து புரிய வைக்கிறார். பாபா சொல்கிறார் – அதிகாலையில் எழுந்து நினைவு செய்யுங்கள். அந்த சமயம் நினைவு செய்ய மிகவும் ஏற்ற நேரமாகும், அது அதிகாலை எனப்படுகிறது. அதிகாலையில் ராமனை சிந்திப்பாய் என் மனமே என பக்தி மார்க்கத்திலும் சொல்கின்றனர். தந்தையும் கூட சொல்கிறார்-அதிகாலை எழுந்து தந்தையை நினைவு செய்தால் மிகவும் மகிழ்ச்சி உண்டாகும். தந்தையின் நினைவில் அமர்ந்து பிறருக்கு எப்படி புரிய வைக்கலாம் என்பதையே சிந்திக்க வேண்டும். அமிர்தவேளையின் வாயு மண்டலம் மிகவும் சுத்தமாக இருக்கும். பகலில் மிகவும் அதிகமாக வேலைகள் இருக்கும். இரவில் 12 மணிவரை விகாரி வாயுமண்டலம் இருக்கும். சாது சன்னியாசிகள், பக்தர்கள் முதலான அனைவரும் பக்தியும் கூட அதிகாலை யில் செய்கின்றனர். நினைவு பகலில் கூட செய்ய முடியும். வேலையில் இருந்தாலும், புத்தியின் தொடர்பு எந்த தேவதைக்கு பூஜை செய்கின்றனரோ அவரிடம் செல்லும். ஆனால் யாருடைய புத்தியும் அப்படி இருப்பதில்லை. பக்தி மார்க்கத்தில் தரிசனத்திற்காக மட்டுமே முயற்சிக்கின்றனர். எதுவும் கிடைப்பதில்லை. அவர்களும் கூட பக்தி செய்து செய்து தமோபிர தானமாக ஆகவே வேண்டும். பக்தி மார்க்கத்திலும் கூட சிவனின் மீது பலியாகின்றனர், அது காசி கல்வெட்டு எனப்படுகிறது. சிவனை நினைத்து நினைத்து கிணற்றில் குதித்து விடுகின்றனர். சிவன் மீது பலியா கின்றனர். அது பக்தி மார்க்கத்தின் பலி. இது ஞான மார்க்கத்தின் பலி. அதுவும் கஷ்டம், இதுவும் கஷ்டம். பக்தி மார்க்கத்தில் இதன் மூலம் எந்த லாபமும் இல்லை. இது ஆத்மா தன்னுடைய சரீரத்தை அழிப்பது போலாகும். இது ஏதும் ஞானமில்லை. ஆத்மாவே பரமாத்மா எனவும் சொல்லி விடுகின்றனர். ஒரு தந்தைதான் ஆத்ம அபிமானியாக இருக்கிறார், பரமாத்மா நான் மட்டுமே என குழந்தை களுக்குப் புரிய வைக்கிறார். ஆத்மாக்களாகிய நாம்தான் பரமாத்மா என சொல்வது மிகப் பெரிய பொய்யாகும். அப்படி இருக்க முடியாது.
நான் வருவதே தூய்மையற்றவர்களை தூய்மையாக்குவதற்கு, எனவே தூய்மையாக்கிக் கொண்டிருக் கிறேன் என தந்தை சொல்கிறார். மற்றபடி நாடகத்தில் என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கவே போகிறது. நில நடுக்கம் ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், கூரை இடிந்து விழும், விதி என்று சொல்வோம், கல்பத்திற்கு முன்பும் இப்படி நடந்தது. இதில் கொஞ்சமும் அசைய (துடித்துப் போக) வேண்டியதில்லை. நாடகத் தின் மீது உறுதியாக இருக்க வேண்டும். இப்படி இருப்பவர்களே மஹாவீர் எனப்படுவார்கள். விபத்துக்கள் அதிகமாக நடந்தபடி இருக்கின்றன. பிறகு யாரையாவது காப்பாற்றுகிறார்களா என்ன? இது நாடகத்தில் பதிவாகி யுள்ளது. இப்படித்தான் நாடகத்தில் நடிப்பு உள்ளது. நாடகத்தைப் பற்றி அறியாதவர்கள் சரீரத்தை நினைத்து கண்ணீர் வடிக்கின்றனர். அவர்கள் ஒருபோதும் சிவபாபாவை நினைவு செய்ய முடியாது. ஏனென்றால் சிவபாபாவின் மீது அன்பு இல்லை. உண்மையான அன்பு இல்லை. தந்தையிடம் முழுமையான அன்பு இருக்க வேண்டும். சிவபாபாவிடம் அன்பான புத்தி உள்ளவர்களாக நீங்கள் ஒவ்வொரு கல்பமும் ஆகிறீர்கள். தேவதைகளுக்கு தந்தையுடன் அன்பான புத்தி முன்பு இருந்தது என்று சொல்ல மாட்டார்கள். அவர்கள் இந்த அன்பின் மூலம் தான் அந்த பதவியை அடைந்தனர். அங்கே செலுத்துவதற்கு முழு கல்பத்திலும் உங்களுக்கு சிவபாபாவைத் தெரிந்தும் இருக்காது. இப்போதுதான் தந்தை தனது அறிமுகத்தைக் கொடுத்துள்ளார். மற்ற தொடர்புகளை நீக்கி, ஒரு தந்தையான என் மீது தொடர்பு வையுங்கள் என இப்போது தந்தை சொல்கிறார். இது கண்டிப்பாக வினாச காலமேயாகும். இதனையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். மனிதர்கள் முற்றிலும் அடர்ந்த காரிருளில் இருக்கின்றனர். நாம் தந்தையிடம் முழுமை யான ஆஸ்தி எடுக்க வேண்டும் என நீங்கள் இப்போது புரிந்து கொள் கிறீர்கள். நினைவு செய்யாமல் சதோபிரதானமாக ஆக முடியாது. சர்ஜனாக (மருத்துவர்) ஆகி தனது நோயைப் பார்க்க வேண்டும். ஸ்ரீமத்படி நம்முடைய அன்பு தந்தையிடம் எந்த அளவு உள்ளது என பார்க்க வேண்டும். அமிர்த வேளையில் தந்தையை நினைவு செய்வதே நல்லது. அதிகாலை நேரம் மிகவும் நன்றாக இருக்கும். அந்த சமயம் மாயையின் புயல்கள் வீசாது. இரவில் 12 மணி வரை தபஸ் செய்வதில் லாபம் ஏதுமில்லை. ஏனென்றால் நேரமே அழுக்கானதாக இருக்கும். வாயுமண்டலம் கெட்டிருக்கும். எனவே ஒரு மணி வரை விட்டுவிட வேண்டும். ஒரு மணிக்குப் பிறகு வாயுமண்டலம் நன்றாக இருக்கும். தந்தை சொல்கிறார் – நம்முடையதே சகஜ இராஜயோகம், சௌகரியமாக அமர்ந்து கொள்ளுங்கள். எப்படி சிவ பாபாவுடன் பேசுகிறேன் என்பதை பிரம்மா பாபா தன்னுடைய அனுபவத்தையும் சொல்கிறார். பாபா எவ்வளவு அதிசயமானது இந்த நாடகம்! நீங்கள் எப்படி வந்து தூய்மையற்ற வரிலிருந்து தூய்மையானவராக ஆக்குகிறீர்கள். முழு உலகத்தை யும் நேராக ஆக்குகிறீர்கள். பெரிய அதிசயம் இது. இப்படி தந்தைக்கு வருவது போன்ற சிந்தனைகள் குழந்தை களுக்கும் வர வேண்டும். எப்படி மனிதர்களின் படகை கரை சேர்க்கலாம்? தந்தை சொல்கிறார் – ஓ பதீத பாவனா வாருங்கள் என நீங்கள் கூக்குரலிட்ட படி இருக்கிறீர்கள். இச்சமயம் நான் வந்திருக்கிறேன், இச்சமயம் நீங்கள் தூய்மையை இழக்காதீர்கள். தூய்மையற்றவர் ஆகி சபையில் வந்து அமராதீர்கள். இல்லா விட்டால் வாயுமண்டலத்தை அசுத்தமாக்கி விடுகிறீர்கள். பாபாவுக்குத் தெரிந்து விடுகிறது. டில்லியில், பம்பாயில் இப்படி விகாரத்தில் செல்பவர்கள் வந்து அமர்ந்து விடுவார்கள். அசுரர்கள் வந்து தடைகளை உண்டாக்க வந்து அமர்ந்தார்கள் என பாடப்பட்டுள்ளது. விகாரத்தில் செல்பவர்கள் அசுரர்கள் என சொல்லப்படுகிறது. வாயு மண்டலத்தை கெடுக்கின்றனர். அவர்களுக்கு கடுமையான தண்டனை இருக்கிறது. பாபா அனைத்து விஷயங் களையும் புரிய வைக்கிறார், என்றாலும் தனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாமல் இருக்க முடிவதில்லை. பொய்யும் கூட சொல்கின்றனர். இல்லாவிட்டால் உடனே எழுத வேண்டும் – பாபா என்னால் இந்த தவறு நடந்தது, மன்னிக்க வேண்டும். தான் செய்த பாவத்தை எழுதுங்கள். இல்லாவிட்டால் வளர்ந்தபடி இருக்கும் மேலும் நரகத்தில் சென்று விடுவீர்கள். ஏதோ கொஞ்சம் எடுப்பதற்காக வருகின்றனர், ஆயினும் காதை இன்னும் அறுத்துக் கொள் கின்றனர். இதுவும் நாடகத்தில் அமைந்துள்ளது. இப்படிப்பட்டவர்கள் இதே போல கல்பத்திற்கு முன்பும் இருந்தனர், இப்போதும் இருக்கின்றனர். அமிர்தத்தை விடுத்து விஷத்தை அருந்துகின்றனர். தனக்கும் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர், பிறருக்கும் இழப்பை ஏற்படுத்துகின்றனர். வாயுமண்டலத்தை கெடுத்து விடுகின்றனர். பிராமணிகளும் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மஹாரதி, குதிரைப்படை, காலாட்படை என அனைத்தும் உண்டு.
குழந்தைகளுக்கு அளவற்ற குஷி இருக்க வேண்டும் – பாபா கிடைத்து விட்டார், இனி என்ன! ஆம், தமது குழந்தைகள் முதலானவர்களை கண்டிப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும். பாபா இவர்கள் அனைவரும் உங்களுடையவர்கள், இனி நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள், நாங்களோ உங்களு டையவர்களாக ஆகி விட்டோம்-அப்படி அல்ல. இல்லற விஷயங்களில் இருந்தபடி தாமரை மலர் போல தூய்மையானவராக ஆகுங்கள். எந்த தூய்மையற்ற காரியமும் செய்யாதீர்கள். முதல் விஷயமே காமம் ஆகும். இதன் காரணமாக திரௌபதி கூட கூக்குரலிட்டு அழைத்தாள் – என்னை இவர்கள் துகிலுரி கின்றனர். அதுவும் கேட்கக்கூடிய தந்தை வந்த போது அழைத்தாள். தந்தை வருவதற்கு முன்பு யாரும் அழைப்பதில்லை. யாரை அழைப்பார்கள்? தந்தை வந்திருந்தார் அப்போது தான் அழைக்கின்றனர். தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவராக்கி பின் எங்கே செல்வோம்? திரும்பச் செல்ல வேண்டும், அது இந்த சமயத்தில் தானாகும். அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல், விடுவிப்பவர் ஒருவர்தான் ஆவார். இங்கே துக்கம் நிறைந்துள்ளது. சாது சன்னியாசி ஆகியோர் யாரும் சுகம் மிக்கவராக ஆக முடியாது. அனைவருக்குமே ஏதாவது ஒரு துக்கம், நோய் முதலானவை வரத்தான் செய்கிறது. சில குருமார்கள் குருடர்களாக, முடவர்களாகவும் இருக் கின்றனர். கண்டிப்பாக அப்படிப்பட்ட ஏதாவது காரியம் செய்திருக்க வேண்டும், அதனால் குருடர் களாக, முடவர்களாக ஆகின்றனர். சத்யுகத்தில் யாரும் குருடராகவோ, முடவராகவோ இருக்க மாட்டார்கள். மனிதர்கள் புரிந்து கொள்வ தில்லை. தந்தைதான் வந்து புரிய வைக்கிறார். தந்தைதான் ஞானக்கடலாக பதித பாவனராக இருக்கிறார். மற்ற அனைத்தும் பக்தியாகும். அந்த பக்தி மார்க்கமே தனியானது. அது ஏணியில் இறங்கக் கூடிய மார்க்கமாகும். இறங்குவதில், ஜீவன் பந்தனத்தில் வருவதில் 84 பிறவிகள் பிடிக்கிறது. மேலும் ஜீவன் முக்தி அடைய ஒரு வினாடி பிடிக்கிறது – அவர் வழிப்படி நடந்து தந்தையை நினைவு செய்தால். வரிசைக்கிரமமாக உள்ளனர் அல்லவா. எங்களுக்கு இந்த டீச்சர் கிடைத்தால் நல்லது என சொல்கின்றனர். எனில் கண்டிப்பாக அவர்கள் பலவீனமாக உள்ளனர், ஆகவேதான் இன்னாரை 2-4 மாதங்களுக்கு அனுப்பி வையுங்கள் என சொல்கின்றனர். இதுவும் கூட தவறாகும் என பாபா சொல்கிறார். தந்தை சகஜமான விஷயத்தைச் சொல்கிறார் – தந்தையை மட்டும் நினைவு செய்யுங்கள் மற்றும் சுயதரிசன சக்கரத்தை சுற்றுங்கள், பிறருக்கும் புரிய வையுங்கள், அவ்வளவுதான் – இப்படி இருக்க நீங்கள் பிராமணியை ஏன் நினைவு செய்கிறீர்கள். இதில் பிராமணி வந்து என்ன செய்வார்? இது ஒரு வினாடியின் விஷயமாகும். நீங்கள் வேலை, தொழிலில் மறந்து விடு கிறீர்கள், பிராமணியும் கூட மன்மனாபவ என்றுதான் சொல்வார். பல புத்தி கெட்டவர்கள் புரிந்து கொள்வதில்லை, நல்ல பிராமணி தேவை என்று மட்டும் சொல்லி விடுகின்றனர். ஞானம் உங்களுக்கு கிடைத்துள்ளது அல்லவா. தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங் கள். தேக அபிமானத்தை விடுங்கள். இது நம்முடைய சென்டர், இது அவர்களுடைய சென்டர், இந்த மாணவர் அங்கே ஏன் செல்கிறார்… இவையனைத்தும் தேக அபிமானமாகும். அனைத்தும் சிவபாபாவின் சென்டர்களாகும். நம்முடையது அல்ல. இன்னார் நம்முடைய சென்டருக்கு ஏன் வருவதில்லை? என உங்களுக்கு ஏன் தோன்றுகிறது? எங்கு வேண்டு மானாலும் செல்லட்டுமே. யாரிடமும் எதையும் வேண்டி கேட்காதீர்கள் என பாபா எப்போதும் சொல்வதுண்டு. விதையை விதைக்காவிட்டால் பின் என்ன கிடைக்கும் என புரிந்து கொள்ள முடியும். பக்தி மார்க்கத்தில் கூட தான புண்ணியம் செய்யப் படுகிறது நீங்கள் அனைவரும் பக்தி மார்க்கத்தில் ஈஸ்வரனின் பெயரால் மறைமுகமாக செய்து கொண்டிருந்தீர்கள். பிறகு சன்னியாசிகளுக்கும் கூட நிறைய கொடுக்கின்றனர். இல்லா விட்டால் தானம் ஏழைகளுக்குச் செய்யப்படுகிறது, செல்வந்தர்களுக்கு அல்ல. இதில் தானியத்தின் தானம் அனைத்திலும் நல்லதாகும். அதனையே தந்தை புரிய வைக்கிறார் – தானம் செய்வதால் இன்னொரு பிறவியில் அதன் பலன் கிடைத்து விடுகிறது. ஈஸ்வரன் தான் அனைவருக்கும் பலனைக் கொடுக்கிறார். சாது சன்னியாசிகள் முதலானவர்கள் எந்தப் பலனையும் கொடுக்க முடியாது. கொடுப்பவர் ஒரே தந்தை ஆவார். யார் மூலமேனும் கொடுப்பார். நீங்கள் ஈஸ்வரனின் பெயரால் கொடுத்துக் கொண்டிருந்த போதும் அடுத்த பிறவியில் உங்களுக்கு பலனை கொடுத்துக் கொண்டிருந்தார் என தந்தை புரிய வைக்கிறார். இப்போது நான் நேரடியாக வந்துள்ளேன். இப்போது உங்களுக்கு 21 பிறவிகளுக்கு பலன் கிடைக்கப் போகிறது. இருப்பினும் மரணம் முன்னால் நின்றிருக் கிறது. ஆகையால் தனது அனைத்தை யும் நற்பலனுள்ளதாக ஆக்கிக் கொள்ளுங்கள் என பக்தி மார்க்கத்தில் உங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கவில்லை. ஆக இப்போது தந்தை புரிய வைக்கிறார் – யாருக்கு வேண்டுமானாலும் இந்த ஆன்மீக மருத்துவமனையை திறந்து வையுங்கள். சிலர் வீடு கட்டி அதில் இந்த ஆஸ்பத்திரியை திறக்கிறோம் என சொல்கின்றனர். இன்று வீடு கட்டுங்கள், நாளை இறந்து விட்டீர்கள் என்றால் எல்லாம் முடிந்து விடும், சரீரத்தின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை என தந்தை சொல்கிறார். இருப்பதில் ஓர் அறையை ஒதுக்கி அதில் ஆன்மீக ஆஸ்பத்திரி, ஆன்மீகக் கல்லூரியை உருவாக்குங்கள். பலருக்கு நன்மையை செய்தீர்கள் என்றால் மிகவும் உயர்ந்த பதவியை அடைவீர்கள். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்!
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1. ஸ்ரீமத்படி தன்னைத் தானே பாருங்கள் – இந்த வினாச காலத்தில் தந்தையின் மீது எனக்கு உண்மையான அன்பு உள்ளதா? மற்ற தொடர்புகளை விடுத்து ஒருவரோடு தொடர்பை இணைத்துக் கொண்டுள்ளேனா? எப்போதாவது ஏதாவது பாவ கர்மம் செய்து அசுரனாக ஆகவில்லையல்லவா? இப்படி சோதனை செய்து தன்னை மாற்றம் செய்து கொள்ள வேண்டும்.
2. இந்த சரீரத்தின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. ஆகையால் தனது அனைத்தையும் நற்பலனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். தனது நிலையை ஒரே சீராக, அசைக்க முடியாததாக ஆக்கிக் கொள்வதற்காக நாடகத்தின் ரகசியத்தை புத்தியில் வைத்து நடக்க வேண்டும்.
வரதானம்:-
யார் பலனை எதிர்பார்க்காத சேவாதாரியாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு நான் இந்தளவு செய்தேன், எனக்கு இதன் மூலம் கௌவரம் – மரியாதை மற்றும் மதிப்பு கிடைக்க வேண்டுமல்லவா…. இந்தமாதிரி எண்ணங்கள் ஒருபொழுதும் வராது, இது கூட பெறுவதாகும். வள்ளலின் குழந்தைகளுக்கு ஒருவேளை பெறு வதற்கான எண்ணம் வருகிறது என்றால் வள்ளல் என்று சொல்ல முடியாது. இவ்வாறு பெறுவது கூட கொடுப் பவர்களுக்கு முன்னால் அழகு கிடையாது. இந்த எண்ணங்கள் முடிவடைவும் பொழுது தான் உலகத்தின் மகாராஜாவின் ஸ்டேஜை (சிம்மாசனம்) அடைய முடியும். அப்படிப்பட்ட பலனை எதிர்ப் பார்க்காத சேவாதாரி, எல்லைக்கு அப்பாற்பட்ட வைராகியமுடைவர் தான் உலகத்திற்கு நன்மை செய்பவர், கருணை மனமுடைவர் ஆக முடியும்.
சுலோகன்:-
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!