06 May 2021 TAMIL Murli Today – Brahma Kumaris
5 May 2021
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Malayalam. This is the Official Murli blog to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே ! தானம் வீட்டிலிருந்து (தன்னிடமிருந்து) தான் ஆரம்பிக்க வேண்டும். அதாவது தேவி தேவதா தர்மத்தை சார்ந்தவர்களே சிவன் அல்லது தேவதைகளின் பூஜாரி ஆவர். அவர்களுக்கு முதன் முதலில் ஞானத்தை அளியுங்கள்.
கேள்வி: -
பாபாவின் எந்த கடமையை வேறு எந்த மனிதரும் செய்ய முடியாது. ஏன்?
பதில்:-
முழு உலகத்தில் அமைதியை உருவாக்கக் கூடிய கடமை ஒரு தந்தையினுடையதாகும். மனிதர்கள் உலகத்தில் அமைதியை உருவாக்க முடியாது. ஏனென்றால் அனைவரும் விகாரி ஆவர். பாபா மற்றும் பாபாவைத் தெரிந்துக் கொள்ளும் போது, தூய்மையாகும் போது தான் அமைதியின் ஸ்தாபனை ஏற்படும். பாபாவை தெரிந்துக் கொள்ளாத காரணத்தால் ஏழைகளாகி விட்டனர்.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
இறந்தாலும் உன் மடியில்….
ஓம் சாந்தி. மன்மனாபவ என்றால் எல்லையற்ற தந்தையை நினையுங்கள் என பொருள் என்று அடிக்கடி கூற வேண்டியிருக்கிறது. அது போன்று ஓம் சாந்தி என்பதன் பொருளைக் கூட அடிக்கடி தெரிவிக்க வேண்டி யிருக்கிறது. ஏனென்றால், ஓம் சாந்தி என்பதன் பொருளை யாரும் அறிய வில்லை. ஓம் என்பதன் அர்த்தை சொல்லும் போது ஓம் என்றால் பகவான் என கூறிவிடுகிறார்கள். ஓம் என்றால் நான் ஆத்மா, இது என்னுடைய உடல் என பாபா அதன் பொருளை கூறுகின்றார். பரம்பிதா பரமாத்மா கூட ஓம் என கூறுகிறார். நான் கூட ஆத்மா, பரந்தாமத்தில் வசிக்கக் கூடியவன், ஆத்மாக்களாகிய நீங்கள் பிறப்பு இறப்பின் சுழற்சியில் வருகிறீர்கள். நான் வருவதில்லை. ஆம், நான் நிச்சயமாக குழந்தைகளாகிய உங்களுக்கு சிருஷ்டியின் முதல், இடை, இறுதியின் சாரத்தைப் புரிய வைப்பதற்காக சாகாரத்தில் வருகிறேன். வேறு யாரும் இதைப் புரிய வைக்க முடியாது. ஒரு வேளை நிச்சயம் இல்லை என்றால் முழு உலகத்திலும் அலைய வேண்டும், மேலும் தன்னுடைய மற்றும் சிருஷ்டியின் முதல், இடை, கடையின் ஞானத்தை யாராவது அளிப்பார்களா என தேட வேண்டும். பரம்பிதா பரமாத்மாவைத் தவிர வேறு யாரும் சிருஷ்டியின் முதல், இடை, இறுதியின் ரகசியத்ûத் தெரிவிக்க முடியாது. யாரும் இராஜயோகத்தைக் கற்பிக்க முடியாது. அழுக்கானவர்களை தூய்மை யாக மாற்ற முடியாது. முதன் முதலில் தேவி தேவதைகளின் பூஜாரிகளாக இருப்பவர்களுக்குப் புரிய வைப்பதற்கு முயற்சி செய்யுங்கள். ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தினர் தான் முழுமையாக 84 பிறவிகள் எடுக்கின்றனர். அவர்களே நன்கு புரிந்துக் கொள்ள முடியும். பின்னால் வரக் கூடியவர்கள் 84 பிறவிகளை எடுக்க முடியாது. யார் தேவதைகளின் பூஜாரி களாக இருப்பபார்களோ கீதையை படிக்கக் கூடியவர்களாக இருப்பார்களோ அவர்களே இதைக் கேட்பார்கள். பகவானுக்குப் பதிலாக கிருஷ்ணரின் பெயரை போட்டு விட்டனர். கீதையில் இந்த தவறை மட்டும் செய்து விட்டனர். எனவே கீதையைப் படிக்கக் கூடியவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். பரம்பிதா பரமாத்மா சிவனுக்கும் தங்களுக்கும் என்ன சம்மந்தம் என கேட்க வேண்டும். அவரை பகவான் என்பார்கள். ஸ்ரீகிருஷ்ணரோ தெய்வீக குணங்களை உடையவர், அவருடைய தெய்வீக இராஜ்யம் இருந்தது. அதில் அனைவரும் தெய்வீக குணம் உடையவர்களாக இருந்தனர். இப்போது அவர்களே பூஜ்யக்குரிய நிலையிலிருந்து பூஜாரி ஆகிவிட்டனர், எனவே முயற்சி செய்து முதன் முதலில் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தினரை தூக்கி நிறுத்த வேண்டும். தானம் முத-ல் தமது வீட்டிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். சிவனின் பூஜாரியாக இருப்பவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். சிவன் நிச்சயமாக வருகின்றார். அதனால் தான் அவருடைய ஜெயந்தியைக் கொண்டாடுகிறார்கள். அவர் பரம்பிதா பரமாத்மா ஆவார். நிச்சயமாக வந்து இராஜயோகத்தைக் கற்பித்து இருப்பார். வேறு எந்த மனிதரும் கற்பிக்க முடியாது. கிருஷ்ணரையோ அல்லது பிரம்மாவையோ பகவான் என்று கூற முடியாது. அனைவருக்கும் சத்கதியை வழங்கும் வள்ளல் பாபா ஒருவரே எனும் போது அவர் ஞானக் கடலாக இருக்கக் கூடிய காரணத்தால் அனைவருக்கும் ஆசிரியராகவும் இருக்கிறார். சிருஷ்டியின் முதல், இடை, இறுதியின் வரலாறு, புவியலை வேறு யாரும் அறியவில்லை. என்னை ஞானக் கடல், உணர்வுள்ள விதை ரூபம் என்று கூட கூறுகிறார்கள் என பாபா கூறுகின்றார். இந்த தலை கீழான மரத்தின் முதல், இடை, இறுதி ஞானம் அந்த விதையிடம் தான் இருக்கும். ஆகவே என்னை ஞானக் கடல், ஆல்மைட்டி அத்தாரிட்டி என்கிறார்கள். என்ன அத்தாரிட்டி. அனைத்து வேதங்கள், சாஸ்திரங்கள், கிரந்தம் அனைத்தையும் அறிந்திருக்கிறார். குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். கல்பத்தின் ஆயுளை லட்சக்கணக்கான வருடங்கள் என சாஸ்திரங் களை விளக்குவோர் கூறுகிறார்கள். ஆனால் அவ்வாறு இருக்க முடியாது. இது விதவிதமான தர்மங்களின் (மதங்கள்) மனிதசிருஷ்டி என்ற மரம் ஆகும். அதனுடைய வயதை பாகவதத்தில் மிக நீண்டதாக எழுதி விட்டனர். பாகவதம் தர்ம சாஸ்திரம் கிடையாது. கீதை தான் தர்ம சாஸ்திரம் ஆகும். அதன் மூலமாகத் தான் தேவி தேவதா தர்மம் ஸ்தாபனை ஆகிறது. மற்றபடி பாகவதம், மகாபாரதம் போன்றவைகளினால் எந்த தர்மமும் உருவாகவில்லை. அவைகளில் ஸ்ரீ கிருஷ்ணரின் வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. குழந்தைகளே ! நீங்கள் தேவி தேவதா தர்மத்தினர், நீங்களே 84 பிறவிகள் எடுக்கிறீர்கள் என புரிய வையுங்கள் என பாபா புரிய வைக்கிறார். சத்யுகத்தில் பாரதம் மட்டும் தான் இருந்தது. வேறு எந்த தர்மமும் இல்லை. பாரதம் தான் சொர்க்கமாக இருந்தது. பாரதம் தான் உயர்ந்ததிலும் உயர்ந்தது என பாடப்பட்டிருக்கிறது. மேலும் அதுவே பரம்பிதா பரமாத்மா சிவனின் பிறப்பிடமாகும். அவரே வந்து அழுக்கானவர் களை தூய்மையாக மாற்றுகிறார். சிவனின் பூஜையும் இங்கே தான் நடக்கிறது. ஜெயந்தியும் இங்கே தான் கொண்டாடப்படுகிறது. நிச்சயமாக அழுக்கான உலகத்தில் தான் வந்திருப்பார். பதீத பாவனா ! வாருங்கள் என அனைவரும் அழைக்கிறார்கள். பாரதம் தூய்மையாக இருந்தது. பிறகு 84 பிறவிகளின் சக்கரம் சுழன்றது. தூய்மையாக, சொர்க்கவாசிகளாக இருந்தவர்களே தற்போது நரக வாசியாக அழுக்காக மாறிவிட்டனர். சிவபாபா தூய்மையாக மாற்றி னார், இராவணன் அழுக்காக மாற்றுகிறான். இச்சமயம் இராவணனின் இராஜ்யம் ஆகும். ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணிற்குள் 5 விகாரங்கள் உள்ளன. சத்யுகத்தில் விகாரங்கள் இல்லை. நிர்விகாரி யாக இருந்தனர். இப்போது அழுக்காக இருப்பதால் தான் வாருங்கள், மீண்டும் எங்களை தூய்மையாக மாற்றுங்கள்! என அழைக்கிறார்கள். சத்யுகத்தில் நாங்கள் தூய்மையாக இருந்தோம், 21 பிறவிகள் இராம இராஜ்யத்தில் இருந்தோம். இப்போதோ இராவண இராஜ்யம் ஆகும். அனைவரும் விகாரிகளாக இருக்கின்றனர். காமம் மிகப் பெரிய எதிரி என்று பாபா கூறுகின்றார். இது முதல், இடை, இறுதிவரை துக்கத்தை அளிக்கின்றது. இப்போது இதை வெற்றி அடைந்து தூய்மையாகுங்கள். நீங்கள் பல பிறவிகளாக பாவம் செய்துள்ளீர்கள். அனைவரையும் விட மிக தாழ்ந்தவராகி விட்டீர்கள். ஆத்மாவில் துரு படிந்து விட்டது. முதலில் சத்யுகத்தில் இருந்தீர்கள், பிறகு திரேதாயுகம், பிறகு துவாபர்… துரு படிந்து ஏணியில் இறங்கி வந்து விட்டீர்கள். இது பாரதத்தின் விஷயமே ஆகும். சத்யுகத்தில் 8 பிறவி, பிறகு திரேதாவில் 12 பிறவி, பிறகு அவர்களே பாரதவாசி சந்திர வம்சி, வைசிய வம்சி…. ஆகிறார்கள். ஆத்மா அழுக்காகிறது. நான் கல்ப கல்பமாக வந்து பாரதத்தை சொர்க்கமாக மாற்றுகிறேன் என பாபா கூறுகின்றார். பிறகு இராவணன் நரகமாக மாற்றுகிறான். இவ்வாறு நாடகம் உருவாக்கப் பட்டிருக்கிறது. ஞானக் கடல் சிவபாபா அல்லவா என இப்போது பாபா புரிய வைக்கிறார். உயர்ந்த திலும் உயர்ந்தவர் சிவன். அனைவராலும் பூஜிக்கப்படக் கூடியவர். முதன் முதலில் அவருடைய பூஜை நடக்கிறது. அவர் எல்லையற்ற தந்தையாவார் ! நிச்சயம் அவரிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி கிடைக்கிறது. பாரத வாசிகள் மறந்து விட்டனர். ஒரு நிராகாரரை தான் பகவான் என அழைக்க முடியும். அவரை மனிதர்கள் நினைக்கிறார்கள். அனைவரும் பகவானே என்பது கிடையாது. ஒரு புறம் பகவானை நினைக்கிறார்கள், ஒரு புறம் நிந்திக்கவும் செய்கிறார்கள், ஒரு புறம் சர்வ வியாபி என்கிறார்கள், பிறகு பதீத பாவனா ! வாருங்கள், எனவும் கூறுகிறார்கள். தந்தை வந்து பிரம்மாவின் உடல் முலமாக பிரம்மா முக வம்சாவாளி பிராமணர்களுக்குத் தான் புரிய வைக்கிறார். இப்போது பிராமணர்களாகிய நீங்கள் குடுமிக்கு சமமானவர்கள். பிராமணர்களுக்கும் மேலானவர் சிவன் ஆவார். விராட ரூபத்தில் தேவதை, சத்திரியர், வைஷியர், சூத்திரரைக் காண்பிக்கிறார்கள். பிராமணர்களின் பெயரே கிடையாது. ஏனென்றால் பிராமணர்களோ விகாரிகளாக இருக்கின்றனர் என்பதை பார்க் கின்றனர். பிறகு தேவதை களை விட உயர்ந்தவர் என்று எப்படி கூற முடியும்? பிராமண தேவி தேவதாய நமஹ ! என பாடுகிறார்கள் ஆனால். துல்லியமாக யாரும் அறியவில்லை. இவர்களுடைய இராஜ்யம் எப்போது இருந்தது? சொர்க்கம் எங்கிருந்து வந்தது என பாபா புரிய வைக்கின்றார். தந்தை வந்து பிரம்மா மூலமாக சொர்க்கத்தை உருவாக்குகிறார். சங்கரர் மூலமாக நரகத்தை அழிக்கிறார் என நீங்கள் இப்போது புரிந்துக் கொள்கிறீர்கள். மகாபாரத போர் நடந்தது அல்லவா? அதன் மூலம் சொர்க்கத்தின் வாயில் திறந்தது என பாடுகிறார்கள். ஆனால் எதையும் அறியவில்லை. இந்த ருத்ர ஞான வேள்வியிலிருந்து அழிவின் ஜுவாலைகள் பிரகாசமாக எரியும் என்று கூட காட்டுகிறார்கள். உண்மையில் இப்போது அதே நடிப்பு (பாகம்) நடந்துக் கொண்டிருக்கிறது. 5000 வருடத்திற்கு முன்பும் போர் நடந்தது. அப்போது அழுக்கான உலகம் அழிந்து விட்டது. கீதா ஞானம் சொல்லப்படும் போது மூன்று படைகள் இருந்தன என கூறுகிறார்கள். ஐரோப்பியர்களாகிய யாதவ சேனை, அவர்கள் விஞ்ஞானத்தினால் ஏவுகணைகளைக் கண்டுபிடித்தனர். முழுமையாக கீதையின் 5000 வருடம் ஆகிவிட்டது. இந்த மூன்று சேனைகளும் தற்போது உள்ளன என பாபா புரிய வைக்கிறார். வினாச காலத்தில் விபரீத புத்தி என பாடப்பட்டிருக்கிறது. அதாவது பரம்பிதா பரமாத்மாவோடு விபரீதமான புத்தியுடன் இருக்கின்றனர். அறியவில்லை. உங்களைத் தவிர வேறு யாருக்கும் (பாபா மீது) அன்பில்லை. அனைவருக்கும் அழிவு கலத்தில் விபரீதமான (கடவுளிடம் அன்பில்லா) புத்தி இருக்கிறது. மீதம் பாண்டவர்களாகிய உங்களின் புத்தி அன்பு நிறைந்த புத்தியாகும். நீங்கள் சிவபாபா வின் நினைவில் இருக்கிறீர்கள். சிவபாபா நமக்கு 21 பிறவிகளுக்கு ஆஸ்தி அளிப்பதற்காக வந்திருக் கின்றார் என அறிகிறீர்கள். சிவபாபாவுடன் உங்களுக்கு அன்பான புத்தி இருக்கிறது. மற்றவர்கள் யாரும் பாபாவை அறியவே இல்லை என்றால் மூன்று சேனைகள் ஆகிவிட்டன. நீங்கள் பாண்டவ சேனையினர் தற்போது வினாசக் காலமாக இருக்கிறது. மரணம் எதிரிலேயே இருக்கிறது என உங்களுக்குத் தெரியும். நீங்கள் தூய்மையாக மாறினால் புது உலகத்திற்கு அதிபதியாகலாம் என சிவபாபா கூறகின்றார். சத்யுகத்தில் ஒரேயொரு தேவி தேவதா தர்மம் இருந்தது. வேறு எந்த தர்மமும் இல்லை. தற்போது மற்ற அனைத்து தர்மங்களும் உள்ளன. ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் மட்டும் இல்லை. தன்னை தேவி தேவதா என்று புரிந்துக் கொள்ளவில்லை. நாங்கள் பதீதமாக இருக் கிறோம் என கூறுகிறார்கள். தேவதைகளுக்கு முன்பு நீங்கள் சர்வ குணங்களும் நிறைந்தவர்கள், 16 கலைகளும் நிரம்பியவர்கள் என புகழ் பாடுகிறார்கள். நாங்கள் விகாரியாக இருக்கிறோம், நான் நிர்குணமானவன், எந்த குணமும் எனக்குள் இல்லை என்று தங்களைக் கூறிக்கொள்கிறார்கள். தந்தையை நினைக்கிறார்கள். நீங்களும் ஒரு தந்தையை நினைக்க வேண்டும். பாபாவை நினைக்காமல் தூய்மையாகாமல் உயர்ந்த பதவி பெற முடியாது. அபவித்ரமான உலகம் அழியும் போது தான் உலகத்தில் அமைதி உண்டாகும். பாரதத்தில் மற்றும் உலகத்தில் அமைதி வர வேண்டும் என மனிதர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் அதுவோ ஒரு தந்தையின் வேலையாகும். மனிதர்களே விகாரிகள் தான். அவர்கள் எப்படி அமைதியை உருவாக்க முடியும். ஒவ்வொரு வீட்டிலும் சண்டை சச்சரவுகள் நடக்கின்றன. தந்தையை அறியாத காரணத்தால் முற்றிலும் ஏழையாகி விட்டனர். சத்யுகத்தில் முற்றிலும் தூய்மை, சுகம், சாந்தி இருந்தது. இப்போது மீண்டும் பாபா அந்த தூய்மை, சுகம், சாந்தியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். வேறு யாரும் செய்ய முடியாது. பாரதவாசிகள் இப்போது நரகவாசிகளாக இருக்கின்றனர். சொர்க்கத்தில் இருந்தபோது மறுபிறவியும் சொர்க்கத்தில் எடுத்தனர். இப்போது பதீதமாக இருக்கிறார்கள், ஆகவே, பதீதபாவனர் பாபாவை நினைக்கிறார்கள். பதீத பாவனர் பாபாவை நினைத்தால் விகர்மம் வினாசம் ஆகும் என குழந்தைகள் அறிகிறீர்கள். லௌகீக தந்தையிடமிருந்து எல்லைக்குட்பட்ட சொத்து கிடைக்கிறது. பாரலௌகீக எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிட மிருந்து எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தியை அடைந்துக் கொண்டி ருக்கிறீர்கள். இது புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயமாகும். இது ஏதோ சத்சங்கம் கிடையாது. அது பக்தி மார்க்கமாகும். இது ஞான மார்க்கமாகும்.
பாபா நம்மை சொர்கவாசியாக மாற்றுகின்றார் என உங்களுக்கு குஷி இருக்கிறது. போன கல்பத்தில் யார் சொர்க்கவாசியாக மாறினார்களோ அவர்களே இப்போதும் மாறுவார்கள். பிராமணன் ஆகாமல் தேவதையாக ஒரு போதும் ஆக முடியாது. இது புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் அல்லவா? இப்போதோ பாரதத்தில் எந்த கலையும் இல்லை. யாருக்கும் தெரியவில்லை. கும்பகர்ண தூக்கத்தில் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். உங்களை பாபா இப்போது எழுப்பி உள்ளார். நீங்கள் சொர்க்கவாசியாக மாறுவதற்காக இங்கே வந்துள்ளீர்கள். பாபாவைத் தவிர வேறு யாரும் (இவ்வுலகை) மாற்ற முடியாது. சத்யுகத்திற்கு சொர்க்கம் என்று கூறப்படுகிறது. கலியுகத்திற்கு நரகம் என்று கூறப்படுகிறது. எவ்வாறு ராஜா ராணியோ அதே போன்று பிரஜைகள். இப்போது அனைவரும் விகாரத்தினால் பிறக்கிறார்கள். தேவதைகள் ஒரு போதும் விகாரத்தினால் மறுபிறவி எடுப்பதில்லை. குழந்தைகள் இப்போது தூய்மையாக இருப்போம் என பாபாவிடம் உறுதி மொழி எடுக்கிறார்கள். ஆனால் போகப் போக தோல்வி அடைகிறார்கள். பிறகு வருமானம் நின்று போய்விடுகிறது. மிகப் பெரிய அடி விழுகிறது. ஆச்சரியப்படும் வகையில் (ஞானத்தை) கேட்கிறார்கள், பிறருக்கும் கூறுகிறார் கள், பிறகு (ஞானத்தை விட்டே) ஓடியும் போகிறார்கள். சாட்சாத்காரம் கூட அடைகிறார்கள். ஆனால் சாட்சாத்காரத்தில் மாயாவின் பிரவேசம் நிறைய ஏற்படுகிறது. சில சமயம் ரேடியோவில் கூட ஒருவர் மற்றொருவரின் விஷயத்தைக் கேட்க முடியாமல் போகும். ஆகவே இடையில் குழப்பத்தை ஏற்படுத்தி விடுவர். இதுவும் அவ்வாறே ஆகும். யோகத்தில் மாயை தடைகளை ஏற்படுத்துகிறது. உழைப்பு முழுவதும் யோகத்திற்காகத் தான். பாரதத்தின் பழைமையான யோகம் என பாடப் பட்டிருக்கிறது. நல்லது !.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1. ஒரு பாபாவிடம் உண்மையான அன்பு வைத்து உண்மையிலும் உண்மையான பாண்டவர் ஆக வேண்டும். மரணம் எதிரிலேயே உள்ளது. ஆகவே, துய்மையாகி தூய்மையான உலகத்திற்கு அதிபதியாக வேண்டும்.
2. காமம் மிகப் பெரிய எதிரி, அதுவே முதல், இடை, இறுதியில் துக்கத்தை அளிக்கிறது. அதன் மீது வெற்றி அடைந்து தூய்மையாக வேண்டும். நினைவின் மூலம் விகாரங்களின் துருவை நீக்கி ஆத்மாவை சத்யுகத்தினுடையதாக மாற்ற வேண்டும்.
வரதானம்:-
எந்த குழந்தைகள் மன்மனாபவ என்ற மனநிலையில் நிலைத்திருக்கிறார்களோ, அவர்கள் மற்றவர்களின் உணர்வுகளை தெரிந்துக் கொள்ள முடியும். பேச்சு வார்த்தை எப்படி இருந்தாலும் கூட அவர்களின் உணர்வு என்னவாக இருக்கிறது, அதை தெரிந்துக் கொள்வதற்கான பயிற்சியை செய்துக் கொண்டே செல்லுங்கள். ஒருவர் மற்றவரின் மனதின் உணர்வுகளை புரிந்துக் கொள்வதின் மூலம் அவர்களுக்கு என்ன வேண்டுமோ அல்லது எதை அடைய விருப்பம் இருக்கிறதோ, அதை (நிறைவேற செய்ய) முடியும். இதனால் அவர்கள் என்றுமே இடைவிடாமல் முயற்சியாளர்களாக ஆகிவிடுவார் கள். பிறகு சேவையில் குறுகிய காலத்தில் வெற்றி அடைந்துவிடுவார்கள். அதிக நன்மைகள் தெரிய வரும். இதனால் . மேலும் நீங்கள் முயற்சி சொரூபத்திற்கு பதிலாக வெற்றி சொரூபம் ஆகிவிடு வீர்கள்.
சுலோகன்:-
➤ Daily Murlis in Tamil: Brahma Kumaris Murli Today in Tamil
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!