04 May 2022 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
3 May 2022
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! ஸ்ரீமத் படி தூய்மையாக ஆவீர்களானால் தர்மராஜரின் தண்டனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வைரம் போல் ஆக வேண்டுமானால் ஞான அமிர்தத்தை அருந்துங்கள். விஷத்தை விட்டு விடுங்கள்.
கேள்வி: -
சத்யுக பதவிக்கான முழு ஆதாரமும் எந்த விஷயத்தின் மீது உள்ளது?
பதில்:-
தூய்மையின் மீது. நீங்கள் நினைவில் இருந்து அவசியம் தூய்மையாக ஆக வேண்டும். தூய்மையாக ஆவதன் மூலம் தான் சத்கதி கிடைக்கும். யார் தூய்மையாக வில்லையோ, அவர்கள் தண்டனை பெற்று தங்களின் தர்மத்தில் சென்று விடுவார்கள். நீங்கள் வீட்டில் இருங்கள், ஆனால் எந்த ஒரு தேகதாரியையும் நினைவு செய்யாதீர்கள். தூய்மையாக இருப்பீர்களானால் உயர்ந்த பதவி கிடைத்து விடும்.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
உங்களை அடைந்து நாங்கள் உலகத்தை அடைந்தோம்..
ஓம் சாந்தி. சிவபகவான் சொல்கிறார், வேறு யாரையுமே பகவான் எனச் சொல்லப் படுவ தில்லை. ஒரு நிராகார் பரமபிதா பரமாத்மா மட்டுமே சிவபாபா எனச் சொல்லப்படுகிறார். அவர் தான் அனைத்து ஆத்மாக்களின் தந்தை. முதன்-முதலில் இந்த நிச்சயம் இருக்க வேண்டும் – நாம் சிவபாபாவின் குழந்தைகள் தான். துக்கத்தின் சமயத்தில் சொல்கின்றனர் – பரமாத்மா, உதவி செய்யுங்கள், இரக்கம் வையுங்கள் என்று. நாம் ஆத்மா பரமாத்மாவை நினைவு செய்கிறோம் என்பதை அறியவில்லை நான் ஆத்மா என்னுடைய தந்தை அவர். இச்சமயம் முழு உலகமுமே தூய்மையில்லாத ஆத்மாக்களினுடையதாக உள்ளது. நாங்கள் பாவி, நீசர்கள், தாங்கள் சம்பூர்ண நிர்விகாரி எனப் பாடுகின்றனர். ஆனால் பிறகும் கூட தங்களைப் பற்றி புரிந்து கொள்வதில்லை. பாபா புரிய வைக்கிறார், நீங்கள் சொல்கிறீர்கள், பகவான் தந்தை ஒருவர் என்று அப்படியானால் நீங்கள் அனைவரும் உங்களுக்குள் சகோதர- சகோதரர் ஆகிறீர்கள். பிறகு சரீரத்தின் ரீதியில் அனைவரும் சகோதர-சகோதரிகள் ஆகின்றனர். சிவபாபா வின் குழந்தைகள் பிறகு பிரஜாபிதா பிரம்மாவுக்கும் குழந்தைகள் ஆகின்றனர். இவர் உங்களுடைய எல்லையற்ற தந்தை, ஆசிரியர் மற்றும் குரு. இவர் சொல்கிறார், நான் உங்களை தூய்மை இழக்க வைப்பதில்லை. நானோ உங்களைத் தூய்மைப் படுத்துவதற்காகவே வருகிறேன் – எனது அறிவுரைப்படி நடப்பீர்களானால். இங்கோ மனிதர்கள் அனைவரும் இராவணனின் வழிப்படி நடப்பவர்கள். அனைவரிடமும் 5 விகாரங்கள் உள்ளன. பாபா சொல்கிறார், ஹே குழந்தைகளே, இப்போது நிர்விகாரி ஆகுங்கள். ஸ்ரீமத் படி நடந்து செல்லுங்கள். ஆனால் விகாரங்களை விடுவதே இல்லை. இதனால் சொர்க்கத்தின் எஜமானர் ஆவதே இல்லை. அனைவரும் அஜாமில் போன்ற பாவிகளாக ஆகி விட்டுள்ளனர். இராவண சம்பிரதாயம், இது சோகவாட்டிக்கா (சோகவனம்) – எவ்வளவு துக்கத்தில் உள்ளனர்! பாபா வந்து பிறகு இராமராஜ்யத்தை உருவாக்குகிறார். ஆக, குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், இது உண்மை யிலும் உண்மையான யுத்த மைதானம். கீதையில் பகவான் சொல்கிறார், காமம் மகாசத்ரு, அதன் மீது வெற்றி கொள்ளுங்கள். அதையும் வெற்றி கொள்வதில்லை. இப்போது பாபா வந்து புரிய வைக்கிறார். ஆத்மா நீங்கள் உங்கள் உடல் உறுப்புகள் மூலம் கேட்கிறீர்கள், பிறகு மற்றவர்களுக்கும் சொல்கிறீர்கள், நடிப்பை ஆத்மா நடிக்கிறது. நாம் ஆத்மா சரீரத்தை தாரணை செய்து பார்ட்டை நடிக்கின்றோம். ஆனால் மனிதர்கள் ஆத்ம அபிமானி ஆவதற்கு பதிலாக தேக அபிமானி ஆகி விட்டுள்ளனர். இப்போது பாபா சொல்கிறார், தேகி (ஆத்ம) அபிமானி ஆகுங்கள். சத்யுகத்தில் ஆத்ம அபிமானிகள் உள்ளனர். பரமாத்மா பற்றி அவர் களுக்குத் தெரியாது. இங்கே நீங்கள் தேக அபிமானியாக இருக்கிறீர்கள். மேலும் பரமாத்மாவைப் பற்றியும் அறியாதிருக்கிறீர்கள். அதனால் உங்களுக்கு இதுபோல் துர்கதி (தாழ்வான நிலை) ஏற்பட்டுள்ளது. துர்கதியைப் பற்றியும் புரிந்து கொள்ளவில்லை. யாரிடம் செல்வம் நிறைய உள்ளதோ, அவர்கள் தாங்கள் சொர்க்கத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டுள்ளனர். பாபா சொல்கிறார், இவர்கள் அனைவரும் ஏழையாகி விடுவார்கள். ஏனென்றால் விநாசம் ஏற்படப் போகிறது. விநாசம் நடப்பதோ நல்லது தான் இல்லையா? நாம் பிறகு முக்திதாமத்திற்குச் சென்று விடுவோம். இதற்காக குஷி அடைய வேண்டும். நீங்கள் இறந்து விடுவதற்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள். மனிதர்களோ இறப்பதற்கு பயப்படுகின்றனர். பாபா உங்களை வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்வதற்காகத் தகுதி உள்ளவர்களாக ஆக்கிக் கொண்டிருக் கிறார். தூய்மை இல்லாதவர்கள் தூய்மை இல்லாத உலகத்தில் தான் பிறவி எடுத்துக் கொண்டே இருக்கின்றனர். சொர்க்கவாசி இங்கே யாரும் கிடையாது. முக்கியமான விஷயம் பாபா சொல்கிறார், தூய்மையாகுங்கள். தூய்மையாகாமல் தூய்மையான உலகத்திற்குச் செல்ல முடியாது. தூய்மையின் காரணத்துக்காகத் தான் அபலைகள் மீது அடி விழுகிறது. விஷத்தை அமிர்தம் என நினைக்கின்றனர். பாபா சொல்கிறார், ஞான அமிர்தத்தினால் உங்களை வைரம் போல் ஆக்குகிறேன். பிறகு நீங்கள் விஷத்தை அருந்தி சோழி போல் ஏன் ஆகிறீர்கள்? அரைக் கல்பமாக நீங்கள் விஷத்தை அருந்தினீர்கள். இப்போது எனது ஆணையை ஏற்றுக் கொள்ளுங் கள். இல்லையென்றால் தர்மராஜரின் தண்டனையை அடைய நேரிடும். லௌகீகத் தந்தையும் சொல்கிறார், குழந்தைகளே, குலத்தின் பெயரைக் கெடுக்கிற மாதிரி எந்த ஒரு காரியமும் செய்து விடாதீர்கள். எல்லையற்ற தந்தை சொல்கிறார், ஸ்ரீமத்படி நடந்து செல்லுங்கள். தூய்மை யாகுங்கள். காம சிதையில் அமர்ந்ததினால் உங்கள் முகம் கருப்பாகவே உள்ளது, இன்னும் கருப்பாக ஆகிவிடும். அதனால் இப்போது உங்களை ஞான சிதையில் அமர்த்தி வைத்து வெள்ளையாக (தூய்மையாக) ஆக்குகிறேன். காம சிதையில் அமர்வதால் சொர்க்கத்தின் முகத்தையும் (வாயிலை) பார்க்க முடியாது. அதனால் பாபா சொல்கிறார், இப்போது ஸ்ரீமத் படி நடந்து செல்லுங்கள். பாபாவோ குழந்தைகளோடு தான் உரையாடுவார் இல்லையா? குழந்தை கள் தான் அறிவார்கள் – பாபா நமக்கு சொர்க்கத்தின் ஆஸ்தியைத் தருவதற்காக வந்துள்ளார். கலியுகம் இப்போது முடியப் போகிறது. யார் பாபாவின் ஸ்ரீமத்படி நடக்கின்றனரோ, அவர்களுக்குத் தான் சத்கதி கிடைக்கும். தூய்மையாகவில்லை என்றால் தண்டனை பெற்று தங்களின் தர்மத்தில் சென்று விடுவார்கள். பாரதவாசிகள் தான் சொர்க்கவாசிகளாக இருந்தனர். இப்போது தூய்மை இழந்தவர்களாகி விட்டுள்ளனர். சொர்க்கத்தைப் பற்றியே தெரியாது. அதனால் பாபா சொல்கிறார், நீங்கள் எனது ஸ்ரீமத்படி நடக்காமல் மற்றவர்களின் வழிப்படி நடந்து விகாரத்தில் சென்று விட்டீர்களானால் இறந்து விட்டீர்கள். பிறகு கடைசியில் வேண்டு மானால் சொர்க்கத்தில் வரலாம். ஆனால் மிக லேசான பதவி பெறுவீர்கள். இப்போது யார் பணக்காரர்களாக உள்ளனரோ, அவர்கள் ஏழையாகி விடுவார்கள். யார் இங்கே ஏழையாக உள்ளனரோ, அவர்கள் பணக்காரர்களாக ஆகி விடுவார்கள். பாபா ஏழைப்பங்காளர் ஆவார். அனைத்தும் தூய்மையின் ஆதாரத்தில் தான் உள்ளது. பாபாவிடம் யோகம் (புத்தியின் தொடர்பை) வைப்பதன் மூலம் நீங்கள் தூய்மையாவீர்கள். பாபா குழந்தைகளுக்கப் புரிய வைக்கிறார், நான் உங்களுக்கு இராஜயோகம் கற்றுத் தருகிறேன். நான் வீடு-வாசலை விட்டு விடுமாறு செய்வதில்லை. வீட்டிலேயே இருங்கள். ஆனால் விகாரத்தில் செல்லாதீர்கள். மேலும் எந்த ஒரு தேகதாரியையும் நினைவு செய்யாதீர்கள். இச்சமயம் அனைவரும் தூய்மை யின்றி உள்ளனர். சத்யுகத்தில் தூய்மையான தேவதைகளாக இருந்தனர். இச்சமயம் அவர்களும் தூய்மை இல்லாதவர்களாகி விட்டுள்ளனர். மறுபிறவி எடுத்து-எடுத்து இப்போது கடைசி பிறவி ஆகி விட்டது.
நீங்கள் அனைவரும் பார்வதிகள். உங்களுக்கு இப்போது அமர்நாத் பாபா அமரகதை சொல்லிக் கொண்டிருக்கிறார், அமரபுரியின் எஜமானர் ஆக்குவதற்காக. ஆக, இப்போது அமர்நாத் தந்தையை நினைவு செய்யுங்கள். நினைவினால் தான் உங்களுடைய விகர்மங்கள் விநாச மாகும். மற்றப்படி சிவன், சங்கர் அல்லது பார்வதி ஒன்றும் மலைகள் மீது அமர்ந்திருக்க வில்லை. அவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் ஏமாற்றம். அரைக்கல்பமாக நிறைய ஏமாற்றம், நஷ்டத்தை அடைந்துள்ளனர். இப்போது பாபா சொல்கிறார், நான் உங்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வேன். சத்யுகத்தில் சுகமே சுகமாக இருக்கும். அடி வாங்குவதும் இல்லை, கீழே விழுவதும் இல்லை. முக்கியமான விசயம், தூய்மையாக இருப்ப தாகும். இங்கே அதிகமான கொடுமைகளை செய்வதால் பாவங்களின் குடம் நிரம்பி விடுகிறது. மேலும் விநாசம் நடைபெறுகின்றது. இப்போது இந்த ஒரு பிறவி தூய்மையாக இருப்பீர் களானால் தூய்மையான உலகத்தின் எஜமானர் ஆகி விடுவீர்கள். இப்போது யார் ஸ்ரீமத் படி நடக்கிறார் களோ உயர் பதவி அடைவர். கல்பத்திற்கு முன் ஸ்ரீமத்படி நடக்கவில்லை என்றால் இப்போதும் நடக்க மாட்டார்கள், பதவியும் பெற மாட்டார்கள். ஒரு தந்தையின் குழந்தைகள் நீங்கள். நீங்களோ தங்களுக்குள் சகோதர-சகோதரிகள். ஆனால் தந்தையுடையவர்களாக ஆகிய பிறகு விகாரத்தில் விழுந்தீர்கள் என்றால் இன்னும் கூட நரகத்தினுள் சென்று விடுவீர்கள். மேலும் பாவாத்மாக்களாக ஆகி விடுவீர்கள். இது ஈஸ்வரிய அரசாங்கம். எனது வழிப்படி தூய்மையாக வில்லை என்றால் தர்மராஜர் மூலமாக மிகக்கடுமையான தண்டனை அடைய நேரிடும். பிறவி பிறவிகளாகச் செய்துள்ள பாவங்களுக்குத் தண்டனை பெற்றுக் கணக்கு-வழக்கை முடிக்க வேண்டியதிருக்கும். இல்லையெனில் யோகபலத்தால் விகர்மங்களை சாம்பாலக்க வேண்டியதிருக்கும். அதுவும் இல்லையெனில் கடுமையான தண்டனை அடைய நேரிடும். எவ்வளவு ஏராளமான பிரம்மாகுமார் குமாரிகள்! அனைவரும் தூய்மையாக உள்ளனர், பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகின்றனர். நீங்கள் சிவசக்தி பாண்டவ சேனை, கோப-கோபியர், இதில் இருவரும் வந்து விடுகின்றனர். பகவான் நமக்குப் படிப்பு சொல்லித் தருகிறார். லட்சுமி- நாராயணரை பகவான்-பகவதி எனச் சொல்கின்றனர். அவர்களுக்கு நிச்சயமாக பகவான் தான் ஆஸ்தி கொடுத்திருப்பார். பகவான் தான் வந்து உங்களை தேவதையாக ஆக்குகிறார். சத்யுகத் தில் இராஜா-ராணி எப்படியோ, அப்படியே பிரஜைகளும் இருப்பார்கள். அனைவரும் உயர்ந்தவர் களாக (சிரேஷ்டாச்சாரி) இருந்தனர். இப்போது இராவண இராஜ்யம். இராம ராஜ்யத்திற்குச் செல்ல வேண்டுமானால் தூய்மையாகுங்கள் மற்றும் இராமரின் அறிவுரைப்படி செல்லுங்கள். இராவணனின் வழிமுறையினாலோ உங்களுக்கு துர்கதி ஏற்படுகின்றது. பாடப் பட்டும் உள்ளது, சிலர் சேர்த்து வைத்தது மண்ணோடு மண்ணாகப் போய் விடும். தங்கம் முதலியவை நிலத்தில், சுவரில் மறைத்து வைக்கின்றனர். திடீரென இறந்து போவார்களானால் அனைத்தும் அங்கேயே இருந்து போகும். விநாசமோ நடைபெறத் தான் போகிறது. நிலநடுக்கம் முதலியவை நிகழும் போதோ திருடர்கள் கூட அதிகம் வெளிவருவார்கள். இப்போது பிரபு வாகிய தந்தை வந்துள்ளார், உங்களைத் தம்முடையவர்களாக ஆக்கி உலகத்தின் எஜமானர் ஆக்குவதற்காக. தற்சமயம் வானப்ரஸ்த நிலையில் கூட விகாரம் இல்லாமல் இருக்க முடிவதில்லை. முற்றிலும் தமோபிராதானமாக ஆகி விட்டுள்ளனர். தந்தையை அறிந்து கொள்ளவே இல்லை. பாபா சொல்கிறார், நான் தூய்மையானவர்களாக்குவதற்காக வந்துள்ளேன். விகாரத்தில் செல்வீர் களானால் மிகக் கடுமையான தண்டனை பெற நேரிடும். நான் தூய்மையாக்கி தூய உலகை ஸ்தாபனை செய்வதற்காக வந்துள்ளேன். நீங்கள் பிறகு தூய்மையில்லாமலாகி தடைகளை ஏற்படுத்துகிறீர்கள்! ஆகவே மிகக் கடும் தண்டனை அடைய வேண்டியதிருக்கும். நான் வந்துள்ளேன், உங்களை சொர்க்கவாசி ஆக்குவதற்காக. விகாரத்தை விடவில்லை என்றால் தர்மராஜர் மூலம் அதிகமாக தண்டனை அடைய வேண்டியதிருக்கும். மிக அதிகமாகக் கதற நேரிடும். இது இந்திர சபையாகும். கதை உள்ளது இல்லையா – அங்கே ஞானப்பரிகள் (தேவதைகள்) இருந்தனர். யாரோ தூய்மை இல்லாதவரைக் கொண்டு வந்தபோது அதன் அதிர்வலைகள் வந்தன. இங்கே சபையில் எந்த ஒரு தூய்மையற்றவரும் அமர்த்தி வைக்கப் படுவதில்லை. தூய்மையின் உறுதிமொழி எடுத்துக் கொள்ளாமல் அமரச் செய்வதில்லை. இல்லையென்றால் பிறகு அழைத்து வருபவர் மீதும் குற்றம் ஆகி விடும். பாபாவோ அறிந்துள்ளார். பிறகும் கூட அழைத்து வருகின்றனர் என்றால் போதனை தரப்படுகிறது. சிவபாபாவை நினைவு செய்வதால் ஆத்மா சுத்தமாக ஆகி விடுகிறது. வாயுமண்டலத்தில் அமைதி வந்து விடும். பாபா தான் வந்து அறிமுகம் தருகிறார் – நான் உங்களுடைய தந்தை. 5000 ஆண்டுகளுக்கு முன்பு போலவே உங்களை மனிதரில் இருந்து தேவதை ஆக்குவதற்காக வந்துள்ளேன் என்று. எல்லையற்ற தந்தையிடம் எல்லையற்ற சுகத்தின் ஆஸ்தியை அடைய வேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1) யோக பலத்தின் மூலம் விகர்மங்களின் அனைத்துக் கணக்கு-வழக்குகளையும் முடித்து விட்டு ஆத்மாவை சுத்தமாகவும், வாயுமண்டலத்தை சாந்தமாகவும் ஆக்க வேண்டும்.
2) பாபாவின் ஸ்ரீமத் படி சம்பூர்ண தூய்மை ஆவதற்கான உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். விகாரங்களின் வசமாகி சொர்க்கத்தின் படைப்பில் தடை ரூபம் ஆகக் கூடாது.
வரதானம்:-
எப்போது சரியான சமயத்தில் புத்தி யதார்த்த நிர்ணயம் செய்கிறதோ, அப்போது தான் எந்த ஒரு காரியத்திலும் வெற்றி கிடைக்கும். ஆனால் எப்போது மனம்-புத்தி தூய்மையாக உள்ளதோ, எந்த ஒரு குப்பையும் இல்லாமல் இருக்கிறதோ, அப்போது தான் நிர்ணய சக்தி வேலை செய்யும். அதனால் யோக அக்னி மூலம் குப்பையை அழித்து விட்டு, புத்தியைத் தூய்மையாக்குங்கள். எந்த வித பலவீனம் இருந்தாலும் அது அழுக்கு தான். கொஞ்சம் வீண் சங்கல்பங்கள் இருந்தாலும் அது குப்பை தான். எப்போது இந்தக் குப்பை முடிந்து போகிறதோ, அப்போது கவலையற்றவராக இருப்பீர்கள் மற்றும் தூய்மையான புத்தி இருப்பதால் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி கிடைக்கும்.
சுலோகன்:-
மாதேஷ்வரி அவர்களின் இனிய மகாவாக்கியங்கள்
இந்தக் கலியுக உலகை சாரமற்ற உலகம் என ஏன் சொல்கிறோம்? ஏனென்றால் இந்த உலகில் எந்த ஒரு சாரமும் இல்லை. அதாவது எந்த ஒரு பொருளிலும் அந்த சக்தி இல்லை. அதாவது சுகம், சாந்தி, பவித்திரதா இல்லை. இந்த சிருஷ்டியில் ஏதோ ஒரு சமயம் சுகம், சாந்தி, பவித்திரதா இருந்தது. இப்போது அது இல்லை. ஏனென்றால் இப்போது ஒவ்வொருவருக் குள்ளும் 5 பூதங்கள் பிரவேமாகி யுள்ளன. அதனால் தான் இந்த சிருஷ்டியை பயத்தின் கடல் அல்லது கர்ம பந்தனங்களின் கடல் எனச் சொல்கின்றனர். இதில் ஒவ்வொரு வரும் துக்கமடைந்து, பரமாத்மாவை அழைத்துக் கொண்டுள்ளனர். பரமாத்மா! எங்களைப் பிறவிக் கடலிலிருந்து அக்கரை கொண்டு செல்லுங்கள். இதிலிருந்து உறுதியாகிறது – நிச்சயமாக பயமற்ற உலகம் ஒன்றும் உள்ளது. அங்கே செல்ல விரும்புகின்றனர். அதனால் இவ்வுலகைப் பாவக் கடல் எனச் சொல்கின்றனர். அதனைக் கடந்து புண்ணிய ஆத்மாக்கள் இருக்கும் உலகிற்குச் செல்ல விரும்புகின்றனர். ஆக, உலகங்கள் இரண்டு. ஒன்று சாரமுள்ள சத்யுகம். இன்னொன்று சாரமற்ற கலியுகம். இரண்டு உலகங்களுமே இதே சிருஷ்டி மீது தான் உள்ளன.
மனிதர்கள் அழைக்கின்றனர் – ஹே பிரபு! எங்களை இந்தப் பிறவிக் கடலில் இருந்து அக்கரை கொண்டு செல்லுங்கள். அக்கரை என்பதன் அர்த்தம் என்ன? மனிதர்கள் நினைக் கிறார்கள், அக்கரை என்பதன் அர்த்தம் பிறப்பு-இறப்பு சக்கரத்தில் வராமலிருப்பது என்று. அதாவது முக்தி அடைவது. இப்போது இதுவோ மனிதர்கள் சொல்வது. ஆனால் பரமாத்மா சொல்கிறார் – குழந்தைகளே, உண்மையிலேயே எங்கே சுகம், சாந்தி உள்ளதோ, துக்கம், அசாந்தியிலிருந்து விலகியதாக உள்ளதோ, அந்த உலகத்திற்கு நான் உங்களை அழைத்துச் செல்கிறேன். நீங்கள் சுகத்தை விரும்புகிறீர்கள் என்றால் நிச்சயமாக அது இந்த வாழ்க்கையில் இருக்க வேண்டும். இப்போது அதுவோ சத்யுக சொர்க்கத்தின் தேவதைகள் உலகமாக இருந்தது. அங்கே அனைத்து சுகங்களும் நிறைந்த வாழ்க்கை இருந்தது. அந்த தேவதைகளை அமரர் எனச் சொன்னார்கள். இப்போது அமரர் என்ற சொல்லுக்கும் எந்த ஒரு அர்த்தமும் இல்லை. தேவைதைகளின் ஆயுள் அவ்வளவு நீண்டதாக இருந்தது – அவர்கள் ஒரு போதும் மரணமடைந்ததே கிடையாது என்று அந்த மாதிரி எல்லாம் இல்லை. இப்போது இது போல் அவர்கள் சொல்வது தவறு. ஏனென்றால் அப்படி ஒன்றும் கிடையாது. அவர்களின் ஆயுள் ஒன்றும் சத்யுக-திரேதா வரை இருப்பதில்லை. ஆனால் தேவி-தேவதைகளின் ஜென்மம் சத்யுக-திரேதாவில் அதிகம் இருந்துள்ளன. 21 ஜென்மங்களாக அவர்கள் நன்றாக ராஜ்யம் செய்திருக்கிறார்கள். மேலும் 63 ஜென்மங்கள் துவாபர யுகத்திலிருந்து கலியுகக் கடைசி வரை மொத்தமாக அவர்களுக்கு ஏறுகிற கலையின் 21 ஜென்மங்கள் இருந்தன மற்றும் இறங்கும் கலையின் 63 பிறவிகள். மனிதர்கள் மொத்தம் 84 பிறவிகள் எடுக்கின்றனர். மற்றப்படி மனிதர்கள் நினைப்பது போல் 84 லட்சம் பிறவிகள் எடுப்பதாகச் சொல்வதெல்லாம் தவறாகும். மனிதர்கள் மனிதப் பிறவியில் சுகம், துக்கம் இரண்டையும் அனுபவிக்க முடியு மென்றால் பிறகு மிருகங்களாகப் பிறக்க என்ன அவசியம் உள்ளது? மற்றப்படி மொத்தமாக சிருஷ்டியில் மிருகங்கள், பறவைகள் முதலியன 84 லட்சம் உயிர்கள் வேண்டுமானால் இருக்கலாம். ஏனென்றால் அநேக விதமான பிறவிகள் உள்ளன. ஆனால் மனிதர்கள் மனிதப் பிறவியில் தான் தங்கள் பாவ-புண்ணியங்களை அனுபவம் செய்து கொண்டுள்ளனர். மேலும் மிருகங்கள் தங்கள் பிறவியில் அனுபவம் செய்கின்றன. மனிதர்கள் மிருகமாகவோ, மிருகங்கள் மனிதராகவோ பிறவி எடுப்பதில்லை. மனிதர்கள் தங்கள் பிறவியில் தான் வாழ்ந்து அனுபவிக்க வேண்டி உள்ளது. அதனால் அவர்கள் மனித ஜென்மத் தில் தான் சுகம், துக்கத்தின் அனுபவம் செய்கின்றனர். அது போலவே மிருகங்களும் கூட தங்களின் பிறவியில் சுகம், துக்கம் அனுபவித்தாக வேண்டும். ஆனால் மிருகங்களுக்கு இந்த புத்தி கிடையாது – அதாவது எந்தக் கர்மத்தினால் நாம் இதை அனுபவிக்க நேர்ந்தது? அவற்றின் அனுபவத்தையும் கூட மனிதர்கள் ஃபீல் பண்ணுகிறார்கள். ஏனென்றால் மனிதர்கள் புத்திவான்கள். மற்றப்படி மனிதர்கள் ஒன்றும் 84 லட்சம் பிறவிகளை எடுக்கின்றனர் என்பது கிடையாது. இதுவோ மனிதர்களை பயமுறுத்துவதற்காகச் சொல்கின்றனர் – தவறான கர்மம் செய்தால் மிருகமாகப் பிறவி கிடைக்கும். நாமும் கூட இப்போது இந்த சங்கமயுக சமயத்தில் நமது வாழ்க்கையை மாற்றி, பரமாத்மா மூலமாகப் புண்ணியாத்மா ஆகிக் கொண்டிருக்கிறோம். ஓம் சாந்தி.
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!