04 July 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

July 3, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

தைரியத்தின் இரண்டாவது அடி - சகிப்புத்தன்மை (பிரம்மா பாபாவின் வாழ்க்கை வரலாறு)

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று அல்மைட்டி அத்தாரிட்டி (சர்வசக்திவான்) பாபா தம்முடைய முதல் படைப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். முதல் படைப்பு பிராமணர்களின் படைப்பு. அவருடைய முதல் படைப்பிலும் கூட முதல் நம்பர் என்று பிரம்மாவைத் தான் சொல்வார்கள். முதல் படைப்பின் முதல் நம்பராக இருக்கும் காரணத்தால் பிரம்மா ஆதி தேவர் எனச் சொல்லப் படுகிறார். இதே பெயரில் இந்த அபு மலையில் நினைவுச்சின்னமும் ஆதி தேவரின் பெயரால் தான் உள்ளது. ஆதி தேவர், அதாவது ஆதி (முதல்) படைப்பு என்றும் சொல்லப் படுகிறார். அதனுடன் கூடவே ஆதி தேவர் என்றால் புதிய படைப்பின் ஆரம்பத்தினுடைய முதல் நம்பர் தேவர். முதல் தேவாத்மாவாக ஸ்ரீகிருஷ்ணர் ரூபத்தில் பிரம்மா தான் ஆகிறார். அதனால் புதிய படைப்பினுடைய ஆரம்பத்தின் ஆதி தேவர் எனச் சொல்லப் படுகிறார். சங்கமயுகத்தில் கூட ஆதி படைப்பின் முதல் நம்பர், அதாவது ஆதி தேவர் என்றாலும் சரி, பிராமண ஆத்மாக்களைப் படைப்பவராகிய பிரம்மா என்றாலும் சரி. ஆக, சங்கமயுகத்தில் மற்றும் சிருஷ்டியின் ஆரம்பத்தில் — இரண்டு சமயத்திற்கும் ஆதி, அதனால் ஆதி தேவர் எனச் சொல்லப்படுகிறார். பிரம்மா தாம் ஆதி கர்மாதீத் ஃபரிஸ்தா ஆகிறார். பிரம்மா தாம் ஃபரிஸ்தா ஆகிறார் மற்றும் ஃபரிஸ்தா விலிருந்து அவரே தேவதை ஆகிறார் — அனைவரிலும் நம்பர் ஒன். அந்த மாதிரி நம்பர் ஒன்னாக ஏன் ஆனார்? எந்த விதியின் மூலம் நம்பர் ஒன் சித்தியை அடைந்தார்? பிராமண ஆத்மாக் களாகிய நீங்கள் அனைவரும் பிரம்மாவைத் தான் பின்பற்ற வேண்டும். என்ன பின்பற்ற வேண்டும். இவருடைய முதல் அடி சமர்ப்பணத் தன்மை. இதையோ முன்பே சொல்லியிருக்கிறோம். முதல் அடியிலும் கூட அனைத்து ரூபங்களிலும் சமர்ப்பணமாகிக் காட்டினார். இரண்டாவது அடி சகிப்புத் தன்மை. எப்போது சமர்ப்பணமாகி விட்டீர்களோ, அப்போது பாபாவிடம் இருந்து அனைத்து சிரேஷ்ட ஆஸ்திகளோ கிடைத்து விட்டன. ஆனால் உலக மனிதர்களிடம் என்ன கிடைத்தது? அனைத்திலும் அதிகமாக நிந்தனைகளின் மழை யார் மீது பெய்தது? ஆத்மாக்களாகிய உங்களுக்கும் கூட நிந்தனைகள் கிடைத்திருக்கலாம் அல்லது கொடுமைகள் நடைபெற்றிருக்கலாம். ஆனால் அதிகமான கோபம் பிரம்மாவுக்குத் தான் கிடைத்துக் கொண்டே இருந்தது. லௌகிக வாழ்க்கையில் எந்த ஓர் அவச் சொல்லையும் கேட்டதில்லை. ஆனால் பிரம்மா ஆனவுடன் அவச்சொல் கேட்பதிலும் கூட நம்பர் ஒன்னாக இருந்தார். அனைவரைக் காட்டிலும் அதிகமாக அனவைரின் சிநேகியாக வாழ்ந்தார். ஆனால் எந்த அளவு லௌகிக வாழ்க்கையில் அனைவரின் சிநேகியாக இருந்தாரோ, அந்த அளவு அலௌகிக வாழ்க்கையில் அனைவரின் விரோதி ரூபமாக ஆனார். குழந்தைகள் மீது கொடுமைகள் நடைபெற்றன என்றால் தானாகவே மறைமுகமாக தந்தை மீது கொடுமை நடத்தப் பட்டது. ஆனால் சகிப்புத்தன்மையின் குணத்தால் அல்லது சகிப்புத் தன்மையின் தாரணையால் புன்சிரித்துக் கொண்டே இருந்தார். ஒரு போதும் வாடிப்போகவில்லை.

யாராவது புகழ்ந்து பேசியதும் புன்சிரிக்கிறார் என்றால் இதை சகிப்புத்தன்மை எனச் சொல்ல மாட்டார்கள். ஆனால் விரோதி ஆகி, கோபம் கொண்டு, அவச்சொற்களை மழையாகப் பொழிந்தாலும், அத்தகைய சமயத்திலும் புன்சிரித்துக் கொண்டிருப்பது, சங்கல்பத்தில் கூட வாட்டத்தின் அறிகுறி முகத்தில் இல்லாதிருப்பது — இது தான் சகிப்புத்தன்மை எனச் சொல்லப்படுவது. விரோதி ஆத்மாவை யும் கூட இரக்க மனதின் பாவனையுடன் பார்ப்பது, பேசுவது, தொடர்பில் வருவது – இதைத் தான் பொறுமை எனச் சொல்கின்றனர். ஸ்தாபனையின் காரியத்தில், சேவையின் காரியத்தில் சில நேரம் சிறியதாக, சில நேரம் பெரியதாகப் புயல்கள் வரலாம். எப்படி ஞாபகார்த்த சாஸ்திரங்களில் மகாவீர் அநுமானைக் காட்டுகின்றனர் – எத்தகைய பெரிய மலையையும் கூட உள்ளங்கையில் ஒரு பந்தைப் போல் எடுத்து வந்தார். எவ்வளவு பெரிய மலை போன்ற பிரச்சினையாக இருந்தாலும், புயலாக இருந்தாலும். விக்னமாக இருந்தாலும் மலை, அதாவது பெரிய பிரச்னையைச் சிறிய பொம்மையாக ஆக்கி ஒரு விளையாட்டாக சதா கடந்து சென்றீர்கள் அல்லது மிகப்பெரிய விˆயத்தையும் சதா லேசாக ஆக்கித் தானும் லேசாக இருக்கிறீர்கள், மற்றும் மற்றவர்களையும் லேசாக ஆக்கினீர்கள் என்றால் இதைத் தான் பொறுமை எனச் சொல்கின்றனர். சிறிய கல்லை மலையாக அல்ல, ஆனால் மலையைப் பந்தாக ஆக்கி, விஸ்தாரத்தை சாரத்தில் கொண்டு வந்தீர்கள் என்றால் இது பொறுமை எனப் படும். விக்னங்களை, பிரச்சினைகளைத் தனது மனதில் அல்லது மற்றவர்களின் எதிரில் விஸ்தார மாக்குவது என்றால் மலையாக ஆக்குவதாகும். ஆனால் விஸ்தாரத்தில் போகாமல் நத்திங் நியு (எதுவும் புதிதல்ல) என்ற முற்றுப்புள்ளி மூலம் பிந்தி வைத்து, பிந்தி ஆகி முன்னேறிச் செல்ல வேண்டும். இதைத் தான் விஸ்தாரத்தை சாரத்தில் கொண்டு வருவது என்று சொல்வார்கள். பொறுமையான சிரேஷ்ட ஆத்மா சதா ஞான யோகத்தின் சாரத்தில் நிலைத்திருந்து இது போல விஸ்தாரத்தை, பிரச்சினையை, விக்னங்களையும் கூட சாரத்தில் கொண்டு வருவார்கள், எப்படி பிரம்மா பாபா செய்தாரோ, அதைப் போல. எப்படி நீண்ட சாலையைக் கடந்து செல்வதில் சமயம், சக்திகள் முடிந்து போகின்றன, அதாவது அதிகம் பயனுள்ளதாகின்றன, அது போல் விஸ்தாரம் என்பது நீண்ட பாதையைக் கடந்து செல்வது மற்றும் சாரம் என்பது குறுக்கு வழியைக் கடந்து செல்வது (ˆôட்கட்). இருவருமே கடந்து செல்கின்றனர், ஆனால் ˆôட்கட் செய்பவர்கள் சமயம் மற்றும் சக்திகளைச் சிக்கனப் படுத்துவதால் நிராசை (நம்பிக்கை இழந்தவராக) ஆவதில்லை. மனச்சோர்வடைவதில்லை, சதா மகிழ்ச்சியில் புன்சிரிப்புடன் கடந்து செல்கின்றனர். இதைத் தான் பொறுமை எனச் சொல்வது.

சகிப்புத் தன்மையின் சக்தி உள்ளவர்கள் ஒரு போதும் இப்படியும் நடக்குமா என்று அந்த மாதிரி பயப்பட மாட்டார்கள். சதா நிறைந்தவராக இருக்கும் காரணத்தால் ஞானத்தின், நினைவின் ஆழத்தில் செல்வார்கள். பயப்படுபவர்கள் ஒரு போதும் ஆழத்தில் செல்ல முடியாது. சாரத்தில் இருப்பவர்கள் சதா நிறைந்தவராக இருப்பார்கள். அதனால் நிறைந்த, சம்பன்னமான பொருள் ஆழமானதாக இருக்கும். விஸ்தாரத்தில் செல்பவர்கள் வெறுமையாக இருப்பார்கள். அதனால் காலியான பொருள் சதா தழும்பிக் கொண்டே இருக்கும். ஆகவே விஸ்தாரத்தில் செல்பவர்கள் சதா இது ஏன், இது என்ன, இப்படி இல்லை, அப்படித் தான் இருக்க வேண்டும், இப்படி நடக்கக் கூடாது இந்த மாதிரி சங்கல்பங்களில் கூட தழும்பிக் கொண்டே இருப்பார்கள் மற்றும் பேச்சிலும் கூட அனைவரின் எதிரில் தடுமாறிக் கொண்டே இருப்பார்கள். மேலும் யார் எல்லைக்குட்பட்டதில் அதிகமாகத் தடுமாறுகிறார்களோ, அப்போது என்னவாகும்? தானே தடுமாறுவார்கள், தானே சத்தமாகக் கத்துவார்கள், பிறகு தானே களைத்துப் போவார்கள். பொறுமையானவர்கள் இந்த அனைத்துப் பிரச்சினைகளில் இருந்தும் தப்பித்து விடுவார்கள். அதனால் சதா மகிழ்ச்சியில் இருப்பார்கள், தடுமாறுவதில்லை, பறப்பார்கள்.

இரண்டாவது அடி சகிப்புத் தன்மை. இதை பிரம்மா பாபா நடந்து காட்டினார். சதா ஆடாத அசையாத சகஜ சொரூபத்தில் மகிழ்ச்சியில் இருந்தார். முயற்சி அல்லது கடின உழைப்பால் அல்ல. இதன் அனுபவத்தை 14 வருட தபஸ்யா செய்த குழந்தைகள் அடைந்தார்கள். 14 வருடங்களாகத் தோன்றியதா அல்லது சில மணி நேரமாக அனுபவமானதா? மகிழ்ச்சியாக இருந்தார்களா அல்லது கடின உழைப்பு அனுபவமானதா? அது போல் ஸ்தூல முயற்சியின் சோதனையும் கூட நன்றாகவே வந்தது. எங்கே பெருமிதத்துடன் வளர்பவர்கள் மற்றும் எங்கே சாண உருண்டையும் செய்ய வைத்தார், மெக்கானிக்காகவும் உருவாக்கினார்! செருப்புக் கூடத் தைக்க வைத்தார். துப்புரவு பணியாளரகவும் ஆக்கினார் இல்லையா? தோட்டக்காரனாகவும் ஆக்கினார். ஆனால் கடின உழைப்பாக இருந்ததா, மகிழ்ச்சியின் அனுபவம் இருந்ததா? அனைத்தையும் கடந்து சென்றார், ஆனால் சதா மகிழ்ச்சியான வாழ்க்கையின் அனுபவம் இருந்தது. யார் குழப்பமடைந்தார்களோ, அவர்கள் ஓடிப் போனார்கள். யார் மகிழ்ச்சியில் இருந்தார்களோ, அவர்கள் அநேகரை மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவம் செய்ய வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போதும் அதே 14 வருடங்களைத் திரும்பவும் கொண்டு வந்தால் அதில் உங்களுக்கு விருப்பம் தான் இல்லையா? இப்போதோ சென்டரில் கொஞ்சம் ஸ்தூல காரியம் செய்ய வேண்டி இருந்தாலும் யோசிக்கின்றனர் — இதற்காக சந்நியாசம் செய்தோமா, இந்த வேலை செய்வதற்குத் தான் நாம் இருக்கிறோமா? மகிழ்ச்சியில் வாழ்க்கையை வாழ்வது — இதைத் தான் பிராமண வாழ்க்கை எனச் சொல்வது. ஸ்தூலமான சாதாரண காரியமாக இருந்தாலும் சரி, ஆயிரம் பேர் உள்ள சபைக்கு நடுவில் ஸ்டேஜ் மீது பேச வேண்டி இருந்தாலும் சரி, இரண்டையுமே மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும். இது தான் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வது எனச் சொல்லப் படும். குழம்பக் கூடாது — நாமோ புரிந்து கொள்ளாமல் இருந்தோம் — சமர்ப்பணமாவது என்றால் இவையனைத்தையும் செய்ய வேண்டியதிருக்கும், நானோ டீச்சர் ஆகி வந்திருக்கிறேன், ஸ்தூல காரியம் செய்வதற்காக சந்நியாசம் செய்யவில்லை, பிரம்மா குமாரி வாழ்க்கை என்றால் இப்படித் தான் இருக்குமா? – இதைத் தான் குழப்பத்தில் வருகிற வாழ்க்கை எனச் சொல்வது.

பிரம்மா குமாரி ஆவது என்றால் மன மகிழ்ச்சியில் இருப்பதாகும், ஸ்தூல மகிழ்ச்சியில் அல்ல. மனதின் மகிழ்ச்சி மூலம் எந்த ஒரு பிரச்சனைகளிலும், எந்த ஒரு காரியத்திலும் குழப்பத்தை மகிழ்ச்சியாக மாற்றி விடுவார்கள். மேலும் மனதால் குழம்புகிறவர்கள் சிரேஷ்ட சாதனங்கள் இருந்தாலும், தெளிவான விˆயம் இருந்தாலும் சதா சுயம் குழப்பத்தில் இருக்கும் காரணத்தால் தெளிவான விˆயத்தையும் கூடக் குழப்பி விடு வார்கள். நல்ல சாதனங்கள் இருந்த போதிலும் சாதனங்களில் இருந்து அவர்களால் மகிழ்ச்சி பெற முடியாது. இது எப்படி ஆகும், இப்படி இல்லை, அப்படி ஆகும் – இதில் தானும் குழம்புவார்கள், மற்றவர்களையும் குழப்பி விடுவார்கள். சொல்கிறார்கள் இல்லையா – நூல் சிக்கிக் கொண்டால் சிக்கலை விடுவிப்பது கஷ்டம். நல்ல விˆயத்திலும் குழம்புவார்கள் என்றால் பயமுறுத்தக் கூடிய விˆயத்திலும் குழம்புவார்கள். ஏனென்றால் உள்ளுணர்வு குழம்பிப் போய் இருக்கிறது. மனம் குழம்பிப் போய் இருக்கிறது என்றால் தானாகவே உள்ளுணர்வின் பிரபாவம் திருஷ்டி மீதும், திருஷ்டியின் காரணத்தால் சிருஷ்டியும் கூடக் குழம்பியதாகவே தெரியும். பிரம்மா குமாரி வாழ்க்கை என்றால் பிரம்மா பாபாவுக்கு சமமாக மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை. ஆனால் இதற்கு ஆதாரம் – சகிப்புத்தன்மை. ஆக, சகிப்புத்தன்மைக்கு இவ்வளவு விசேˆதா உள்ளது. இந்த விசேˆதாவின் காரணத்தால் தான் பிரம்மா பாபா சதா ஆடாத, அசையாத நிலையில் இருந்தார்.

இரண்டு விதமான சகிப்புத் தன்மைக்கான சோதனை பற்றிச் சொல்லியிருக்கிறோம். முதல் பேப்பர் – மனிதர்கள் மூலமாக அவச்சொல் அல்லது கொடுமை. இரண்டாவது – யக்ஞத்தின் ஸ்தாபனையில் வந்துள்ள பலவித விக்னங்கள். மூன்றாவது – அநேக பிராமணக் குழந்தைகள் மூலமாகவும் துரோகியாவது அல்லது சிறிய-பெரிய விˆயங்களில் திருப்தியின்மையை எதிர்கொள்வது. ஆனால் இதிலும் கூட சதா திருப்தியின்மையை திருப்திப்படுத்தும் பாவனை மூலம் அவர்கள் வேறு வசமாக உள்ளனர் என்பதைப் புரிந்து, சதா நன்மையின் பாவனை மூலம் சகிப்புத்தன்மையின் அமைதி சக்தி மூலம் ஒவ்வொருவரையும் முன்னேறச் செய்தார். யார் இன்று எதிர்க்கிறார்களோ, அவர்கள் நாளை மன்னிப்பு வேண்டுகிறார்கள் என்றால் அவர்களின் வாயிலிருந்தும் இதே வார்த்தை வெளிப்படும் — பாபா என்றால் பாபா தான்! இது தான் சகிப்புத்தன்மை மூலம் ஃபெயிலைப் பாஸ் ஆக்கி விக்னங்களைக் கடந்து செல்வதாகும். ஆக, இரண்டாவது அடி பற்றிக் கேட்டீர்கள். எதற்காக? அடி மீது அடி வையுங்கள். இதைத் தான் தந்தையைப் பின்பற்றுவது, அதாவது தந்தைக்கு சமமாக ஆவது எனச் சொல்வது. அது போல் ஆக வேண்டுமா அல்லது தூரத்திலிருந்தே பார்க்க வேண்டுமா? தைரியசாலிகள் இல்லையா? பஞ்சாப், மகாராஷ்ட்டிரா இருவருமே தைரியசாலிகள். அனைவரும் தைரியசாலிகள். இந்த தேசம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த அனைவரும் தங்களை மகாவீர் எனச் சொல்லிக் கொள்கின்றனர். யாரையாவது காலாட்படை என்றால் ஏற்றுக் கொள்வார்களா? இதிலிருந்து தெளிவாகிறது — அனைவரும் தங்களை மகாவீர் எனப் புரிந்து கொண்டுள்ளனர். மகாவீர் என்றால் பாபாவுக்கு சமமாக ஆவது. புரிந்ததா? நல்லது.

இந்த தேசத்திலும் வெளிதேசங்களிலும் உள்ள பாபாவுக்கு சமமான, சதா புத்தி மூலம் சமர்ப்பணமாகியுள்ள அனைத்து ஆத்மாக்களுக்கும், சதா ஒவ்வொரு பரிஸ்திதியிலும் ஒவ்வொரு மனிதரிடமும் சகிப்புத்தன்மை உள்ளவராகி, ஒவ்வொரு பெரிய பிரச்சினையையும் சிறியதாக்கி சுலபமாகக் கடந்து செல்லக் கூடிய, சதா விஸ்தாரத்தை சார ரூபத்தில் கொண்டுவரக் கூடிய, சதா பிராமண வாழ்க்கையை மகிழ்ச்சியின் வாழ்க்கையாக வாழக்கூடிய, அத்தகைய பாபாவுக்கு சமமாக ஆகக்கூடிய மகாவீர் சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் சமான் பவ (சமமாக ஆகுக) என்ற சிநேகம் நிறைந்த அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

பார்ட்டிகளுடன் சந்திப்பு – குமார்களுடன் – குமார்களின் விசேˆதா என்ன? குமார் வாழ்க்கை சிரேஷ்டமான வாழ்க்கை. ஏனென்றால் பவித்திர வாழ்க்கை மற்றும் எங்கே பவித்திரதா உள்ளதோ, அங்கே மகான் தன்மை உள்ளது. குமார் என்றால் சக்திசாலி. என்ன சங்கல்பம் செய்கிறார்களோ, அதைச் செய்ய முடியும். குமார் என்றால் சதா பந்தன்முக்த்தாக இருக்கக்கூடிய மற்றும் மற்றவர்களையும் ஆக்கக்கூடியவர்கள். அந்த மாதிரி விசேˆதாக்கள் உள்ளன இல்லையா? என்ன சங்கல்பம் செய்கிறீர்களோ, அதைக் கர்மத்திலும் கொண்டு வர முடியும். தானும் பவித்திரமாக இருந்து, மற்றவர்களுக்கும் பவித்திரமாக இருப்பதற்கான மகத்துவத்தைச் சொல்ல முடியும். அந்த மாதிரி சேவைக்கு நிமித்தமாக ஆக முடியும். உலகத்தினர் எதை முடியாதது எனப் புரிந்து கொண்டுள்ளனரோ, அதை பிரம்மா குமார்கள் சவால் விடுக்கின்றனர் – ஆக, எங்களைப் போல் யாரும் பாவனமாக இருக்க முடியாது. ஏன்? ஏனென்றால் அது போல் ஆக்குபவர் சர்வசக்திவான். உலகத்தினர் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் சரி, உங்களைப் போல் பாவனமாக முடியாது. நீங்கள் சுலபமாகவே பாவனமாகி விட்டீர்கள். சுலபமாக உள்ளது இல்லையா? அல்லது உலகத்தினர் எப்படிச் சொல்கிறார்கள் — இது இயற்கைக்குப் புறம்பானது (ன்ய்ய்ஹற்ன்ழ்ஹப்) — அந்த மாதிரி தோன்றுகிறதா? குமார் என்பதன் அர்த்தமே சவால் விடுபவர்கள், மாற்றம் செய்து காட்டுபவர்கள், முடியாததைச் செய்து காட்டுபவர்கள். உலகத்தினர் தங்கள் துணையிலிருப்பவர்களை சங்கதோˆத்தில் கொண்டு செல்கின்றனர். நீங்கள் பாபாவின் சங்கத்தில் கொண்டு வருகிறீர்கள். அவர்களை உங்களுடைய சகவாசத்தில் கொண்டு வருவதில்லை, பாபாவின் சங்கத்தினுடைய நிறத்தை அவர்கள் மீது படியச் செய்கிறீர்கள். பாபாவுக்கு சமமாக ஆக்குகிறீர்கள். அப்படித் தான் இல்லையா? நல்லது.

2. குமார் என்றால் சதா ஆடாத, அசையாத, எந்த ஒரு பரிஸ்திதி (பாதகமான சூழ்நிலை) வந்தாலும் மேலே-கீழே ஆகிறவர் இல்லை. ஏனென்றால் உங்கள் துணைவர் சுயம் தந்தை. எங்கே தந்தை இருக்கிறாரோ, அங்கே சதா ஆடாத, அசையாதவராக இருப்பார்கள். எங்கே சர்வசக்திவான் இருக்கிறாரோ, அங்கே சர்வ சக்தி களும் இருக்கும். சர்வ சக்திகளின் முன்னால் மாயா எதுவும் செய்ய முடியாது. அதனால் குமார் வாழ்க்கை என்றால் சதா ஏக்ரஸ் ஸ்திதி உள்ளவர்கள், குழப்பத்தில் வருபவர்கள் இல்லை. யார் குழப்பத்தில் வருகிறாரோ, அவர் அவிநாசி ராஜ்ய பாக்கியத்தையும் அடைய முடியாது. கொஞ்சம் சுகம் கிடைக்கும். ஆனால் சதா காலத்துக்கும் இருக்காது. ஆகவே குமார் வாழ்க்கை என்றால் சதா அசையாத, ஒரே சீரான நிலையில் நிலைத்திருப்பவர்கள். ஆக, ஏக்ரஸ் ஸ்திதி இருக்கிறதா அல்லது மற்ற ரசனைகளில் புத்தி செல்கிறதா? அனைத்து ரசனைகளையும் ஒரு பாபாவிடம் அனுபவம் செய்பவர்கள் தாம் ஏக்ரஸ் அதாவது ஆடாத, அசையாதவர் எனச் சொல்லப்படுவார்கள். அந்த மாதிரி ஏக்ரஸ் ஸ்திதி உள்ள குழந்தை தான் பாபாவுக்கு அன்பானவர் ஆகிறார். ஆகவே இதையே சதா நினைவு வைக்க வேண்டும் – நாம் ஆடாத, அசையாத ஆத்மாக்கள் ஏக்ரஸ் ஸ்திதியில் இருப்பவர்கள்.

தாய்மார்களுடன் – 1) மாதர்களுக்காக சகஜ மார்கம் என்ன சொல்லியிருக்கிறார், அதன் மூலம் சகஜமாகவே பாபாவின் நினைவை அனுபவம் செய்ய முடியும், கடின உழைப்பு தேவைப்படாது? நினைவையும் சகஜமாக்கக் கூடிய சாதனம் என்ன? மனதார சொல்லுங்கள் — என்னுடைய பாபா. எங்கே என்னுடையவர் எனச் சொல்கிறீர்களோ, அங்கே சகஜமாக நினைவு வரும். நாள் முழுவதும் எது என்னுடையதோ, அது சகஜமாக நினைவு வருகிறது இல்லையா? எதுவும் என்னுடையது என்றால், மனிதராக இருக்கலாம், பொருளாக இருக்கலாம் எங்கே என்னுடையது உள்ளதோ, அதே தான் நினைவு வரும். ஆக, பாபாவை நினைவு செய்வதற்கான சகஜமான வழி — மனதார என்னுடைய பாபா எனச் சொல்லுங்கள். சும்மா வாயினால் என்னுடைய-என்னுடைய என்று சொல்லக் கூடாது. உரிமையுடன் சொல்ல வேண்டும். இதே சகஜ புருஷார்த்தம் செய்து முன்னேறிக் கொண்டே செல்லுங்கள். சதா இந்த விதி மூலம் சகஜயோகி ஆகுங்கள். என்னுடையவர் எனச் சொல்லுங்கள் மற்றும் பாபாவின் கஜானாக்களுக்கு மாலிக் ஆகுங்கள்.

2) மாதர்கள் சதா தங்களைப் பத்மாபதம் பாக்கியவான் என உணர்ந்திருக்கிறீர்களா? வீட்டில் அமர்ந்தவாறு பாபா கிடைத்து விட்டார் என்றால் எவ்வளவு பெரிய பாக்கியம்! உலகத்தினர் பாபாவைத் தேடுவதற்காக வெளியில் செல்கின்றனர், ஆனால் உங்களுக்கு வீட்டில் அமர்ந்தவாறே கிடைத்து விட்டார். ஆக, இவ்வளவு பெரிய பாக்கியம் கிடைக்கும் என்று எப்போதாவது சங்கல்பத்திலாவது நினைத்திருப்பீர்களா? வீட்டில் அமர்ந்தவாறே பகவான் கிடைத்து விட்டார் என்ற பாடல் யாருக்காகச் சொல்லப் பட்டது? உங்களுக்காகத் தான் இல்லையா? ஆக, இந்த சிரேஷ்ட பாக்கியத்தையே ஸ்மிருதி யில் வைத்து முன்னேறிக் கொண்டே செல்லுங்கள். ஆஹா எனது சிரேஷ்ட பாக்கியம்! — இந்தக் குஷியின் பாடலைப் பாடிக் கொண்டே இருங்கள். குஷியின் ஊஞ்சலில் ஆடிக் கொண்டே இருங்கள். குஷியில் நடனமாடுங்கள், பாடுங்கள்.

3) சக்திகளுக்கு சதா எந்த ஒரு குஷி இருக்கிறது? சதா பாபாவுடன் இணைந்திருக்கிறேன். சிவசக்தி என்பதன் அர்த்தமே இணைந்திருப்பது தான். பாபா மற்றும் நீங்கள் – இருவரையும் சேர்த்து சிவசக்தி எனச் சொல்கின்றனர். ஆக, எது இணைந்திருக்கிறதோ, அதை யாராலும் தனியாகப் பிரிக்க முடியாது. அத்தகைய குஷி இருக்கிறதா? பலமற்ற ஆத்மாவை பாபா சக்தியாக ஆக்கியிருக்கிறார். ஆக, இதையே சதா நினைவு வையுங்கள் – நாம் இணைந்திருப்பதற்கு அதிகாரி ஆகி விட்டோம். முதலில் தேடுபவர்களாக இருந்தோம். இப்போது கூடவே இருப்பவர்களாகி விட்டோம் – இந்த நஷா சதா இருக்கட்டும். எவ்வளவு தான் மாயா முயற்சி செய்தாலும் சிவசக்திக்கு முன்னால் மாயாவினால் எதுவும் செய்ய முடியாது. தனியாக இருப்பீர்களானால் மாயா வருகிறது. இணைந்திருப்பீர்களானால் மாயா வர முடியாது. ஆகவே இதே வரதானத்தை சதா நினைவு வையுங்கள் – நாம் இணைந்திருக்கும் சிவசக்திகள், வெற்றியாளர்கள்.

வரதானம்:-

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணம் இணைப்பில் தளர்வு (இறுக்கமற்ற தன்மை) இருப்பது தான். இணைப்பை மட்டும் சரி செய்து விட்டீர்களானால் சர்வசக்திகள் உங்களுக்கு முன்னால் சுற்றி வரும். தொடர்பை இணைப்பதில் ஓரிரு நிமிடங்கள் ஆகுமானால் தைரியத்தை இழந்து குழப்பமடைந்து விடாதீர்கள். நிச்சயத்தின் அஸ்திவாரத்தை அசைக்காதீர்கள். நான் பாபா வுடையவன், பாபா என்னுடையவர் — இந்த ஆதாரத்தின் மூலம் அஸ்திவாரத்தைப் பக்கா ஆக்குவீர்களானால் பிரச்சினையிலிருந்து விடுபட்டவர் ஆகி விடுவீர்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top