03 December 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

2 December 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே ! அதிகாலையில் எழுந்து கண்டிப்பாக சிவபாபாவிடம் காலை வணக்கம் (குட்மார்னிங்) சொல்லவும். எழுந்ததும் சிவபாபாவின் நினைவில் வர வேண்டும். எந்த தேகதாரியின் நினைவும் வரக்கூடாது.

கேள்வி: -

எந்த ஒப்பந்தம் ஒரு பாபாவைத் தவிர வேறு யாரும் எடுக்க முடியாது?

பதில்:-

பாவனமான உலகமாக மாற்றக் கூடிய ஒப்பந்தம் ஒரு பாபாவினுடையது. இந்த ஒப்பந்தத்தை வேறு யாரும் எடுக்க முடியாது. சன்யாசிகள் தூய்மையினால் இந்த உலகத்தை அவசியம் தாங்கி நிற்கிறார்கள். ஆனால் அவர்கள் பாவனமான உலகமாக மாற்றக் கூடிய ஒப்பந்தத்தை எடுக்க முடியாது. பாபா குழந்தைகளுக்கு பாவனமாக மாறு வதற்கான யுக்தியைத் தெரிவிக்கிறார். குழந்தை கள் வேலைகளை செய்துக் கொண்டிருந் தாலும் ஒரு தந்தையிடத்தில் புத்தியின் தொடர்பை, யோகத்தை வையுங்கள்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

இன்று அதிகாலையில் யார் வந்தது…

ஓம் சாந்தி. ஆன்மீகக் குழந்தைகளுக்கு தந்தை தானே வந்து புரிய வைக்கின்றார். சிவபகவான் வாக்கு என்று கூறினாலும் கூட நிறைய மனிதர்களுக்கு சிவா என்ற பெயர் இருக்கிறது. எனவே ஆன்மீகக் குழந்தை களுக்கு ஆன்மீகத் தந்தை முதன் முதலில் அன்பு நினைவுகளைக் கொடுத்துக் கொண்டிருக் கிறார் எனக்கூற வேண்டியிருக்கிறது. காலையில் முதன் முதலில் குட்மார்னிங் சொல்லப்படுகிறது. உங்களுக்கு குட்மார்னிங் கேட்டதா? அதிகாலையில் யார் வந்து குட்மார்னிங் கூறினார்கள்? தந்தை தான் அதிகாலை யில் வருகிறார். இது எல்லையற்ற பகல் மற்றும் இரவாகும். இதை மனிதர்கள் யாரும் அறிந்துக் கொள்ளவில்லை. குழந்தைகள் வரிசைக்கிரமத்தில் முயற்சிக்கேற்ப அறிந்துக் கொள்கிறார்கள். குழந்தையாகி விட்டார்கள், ஆனால் அதிகாலையில் எழுந்து பாபாவை நினைப் பதில்லை. அதிகாலையில் எழுந்து முதன் முதலில் சிவபாபாவிற்கு குட்மார்னிங், அதாவது நினைவு செய்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் நிறைய குழந்தைகள் காலையில் எழுந்து முற்றிலும் நினைப்பதில்லை. பக்தி மார்க்கத்தில் கூட அதிகாலையில் எழுந்து பக்தி செய்கிறார்கள், பூஜை செய்கிறார்கள், மாலை உருட்டுகிறார்கள், மந்திரம் ஜெபிக்கிறார்கள். அவர்கள் சாகாரத்தின் (ஸ்தூலமாக) பக்தியை செய்கிறார்கள். சிலை எதிரில் வருகிறது. சிவனுடைய பூஜாரிகள் அவருக்கு பெரிய சிவலிங்கத்தை உருவாக்குகிறார்கள். அந்த சிலை நினைவு வரும். அது தவறாகும். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் தன்னை ஆத்மா என நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அதிகாலையில் எழுந்து பாபாவிடம் பேச வேண்டும். பாபா குட்மார்னிங். ஆனால் இந்தப் பழக்கம் யாருக்கும் இல்லை என பாபா அறிகிறார். குழந்தைகளே! உங்கள் தலையில் அரை கல்பத்தின் சுமை இருக்கிறது. அது இறங்கவே இல்லை. ஏனென்றால் நினைக்கவே இல்லை என பாபா கூறுகிறார். ஒரு சிலருக்கு மேலும் மேலும் பாவம் அதிகமாகிறது. எலி ஊதி விட்டு கடிப்பது போல மாயா வும் எலியைப் போல கடித்துக் கொண்டிருக்கிறது. தலையில் இருக்கும் முடியையும் கடித்து விடுகிறது. தெரிவதில்லை. சிலர் தன்னை ஞானி என நினைக்கிறார்கள். ஆனால் நினைவில் முற்றிலும் அரைகுறையாக உள்ளனர். பாபா நன்கு அறிந்திருக்கிறார். தன்னுடைய மனதைக் கேளுங்கள், நாம் அதிகாலையில் எழுந்து பாபாவை நினைக்கின்றோமா, உத்தமான தந்தை உங்களை எல்லையற்ற அதிகாலையில் வந்து சந்திக்கின்றார். சன்னியாசிகளும் எழுந்து பிரம்மத்தை நினைக்கிறார்கள். மனிதர்கள் எழுந்ததும் உற்றார், உறவினர், நண்பர்களை நினைக்கிறார்கள். பக்தர்கள் என்றால் தன்னுடைய தேவதைகளை நினைவு செய்வார்கள். பாவ ஆத்மாக்கள், பாவ ஆத்மாக்களிடம் குட்மார்னிங் கூறுவார்கள் அல்லது நினைப்பார்கள். அதிகாலையில் நினைக்க வேண்டும்.

பக்தியும் காலையில் தான் செய்கிறார்கள். ஆனால் பகவானை யாரும் பக்தி செய்வ தில்லை. ஏனென்றால், பகவானை அவர்கள் அறியவில்லை. பக்தியின் பலனைக் கொடுக் கக்கூடியவர் பகவான் என்று கூறுகிறார்கள். பகவானே வந்து தனது அறிமுகத்தைக் கொடுக்கும் போது தான் தெரிந்துக் கொள்ள முடியும். இல்லையென்றால் அனைவரும் தெரியாது தெரியாது என கூறுகிறார்கள். அதாவது நாங்கள் அறியவில்லை. எனவே பரமாத்மா இந்த நேரத்தில் வந்து நான் யார் என்பதைத் தெரிவிக்கிறார். ஆனால் குழந்தை களுக்குள் பலர் பெரிய பெரிய மகாரதிகள், சென்டரை பார்த்துக் கொள்ளக் கூடியவர்கள் பாபாவை முழுமையாக அறியவில்லை. அந்த அளவு அன்போடு பாபாவை நினைவு செய்வதில்லை. அதிகாலையில் எழுந்து அன்புடன் குட்மார்னிங் சொல்லுதல், ஞான சிந்தனையில் இருத்தல் என்பதைக் கூட அறியவில்லை. நினைவு செய்தால் குஷியின் அளவு அதிகரிக்கும். ஆனால் மாயை அதிகரிக்க விடுவதில்லை. ஒருவேளை பாபாவிடம் ஏதாவது மரியாதையின்றி நடந்தால் மாயா ஒரேயடியாக புத்தியோகத்தைத் துண்டித்து விடுகிறது. பிறகு உலகின், வீணான விஷயங்களில் புத்தி மாட்டிக் கொள்கிறது. சொர்க்கத்திற்கு அதிபதியாவது என்பது சித்தி வீடு கிடையாது. பிரஜையாக மாறுவது எளிதாகும். இன்னும் போகப்போக நீங்கள் 30-40 வருடத்தினர் கூட பிரிந்து சென்று விடுவதை (பாபாவிட மிருந்து) பார்க்கலாம். மாயா ஒரேயடியாக தூக்கி மறக்க வைத்து விடுகிறது. ராஜ்ய பதவியை அடைய முடியாது. முதலிலேயே இறந்து விட்டால் பிறகு ராஜ்ய பதவி எங்கிருந்து கிடைக்கும்? பிறகு இந்த ரகசியத்தை பாபா வெளியிடுவதில்லை. நான் அரை கல்பமாக ராஜ்யம் செய்கிறேன். இவர்கள் என்னை வெற்றி அடைகிறார்கள் என்று மாயை கூட பார்க்கிறது. பிறகு சிவபாபாவை ஒரேயடியாக மறந்து போகிறார்கள். சில இடங்களில் இவருடைய (பிரம்மா பாபா) பெயர் உருவத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். சிவபாபாவை நினைப்பதில்லை யாருக்குள் கோபம், பேராசை, மோகம் என்ற பூதங்கள் இருக்கிறதோ அவர்கள் பாபாவை எவ்வாறு நினைப்பார்கள்? பெயர் உருவத்தில் அந்த மாதிரி மாட்டிக் கொள்கிறார்கள். கேட்கவே கேட்காதீர்கள்! தேக அபிமானத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். வீட்டில் குடும்பத்தில் இருந்தாலும் பிரியதரிசனை (பாபாவை) நினைவு செய்துக் கொண்டே இருங்கள், அப்போது கர்மாதீத் நிலையை அடையலாம். முக்கியமான விஷயம் நினைவாகும். இதில் கடின உழைப்பு இருக்கிறது. நினைவு செய்யாமல் சதோபிரதானமாக முடியாது, உயர்ந்த பதவியும் அடைய முடியாது. புத்தியோகம் வேறு எங்காவது அலைந்துக் கொண்டிருக்கும். சில குழந்தைகள் மிகவும் மனப்பூர்வமாக உயிருக்குயிராக செல்லமாக அன்புடன் பாபாவை நினைக்கிறார்கள். பாபாவிற்கு குட்மார்னிங் கூறிவிட்டு, பிறகு பாபாவிடம் நாங்கள் உங்களுடைய நினைவில் இருக்கின்றோம் ஏனென்றால், தலையில் பாவங்களின் சுமை நிறைய இருக்கிறது என கூற வேண்டும். பாபாவின் நினைவு இல்லை என்றால் பாவச் சுமை எப்படி குறையும். அரை கல்பமாக தேக அபிமானம் இருப்பதால் குறைவதில்லை.

அங்கே தேவதைகள் ஆத்ம அபிமானியாக இருக்கிறார்கள். பரமாத்மாவை அறிய வில்லை. நாம் ஆத்மா, ஒருசரீரத்தை விட்டு இன்னொன்றை எடுக்கிறோம் என புரிந்துக் கொள்கிறார்கள். படைக்கக் கூடியவரை அறிந்துக் கொண்டால் தந்தையின் ஆஸ்தியை பற்றியும் அறியலாம். அங்கே இந்த ஞானம் கிடையாது. இந்த ஞானத்தை நான் தான் உங்களுக்கு கொடுக்கிறேன் என பாபா கூறுகிறார். பிறகு இந்த ஞானம் மறைந்து போகிறது. இந்த ஞானம் பரம்பரையாக வருவதில்லை. ஆத்மாவையும் பரமாத்மாவையும் அறியவில்லை. இப்போது அனைத்து ஆத்மாக்களுக்கும் அவரவருக்கென எப்படிபட்ட பாகம் கிடைத் திருக்கிறது என நீங்கள் அறிகிறீர்கள். மிக நல்ல நடிகர்கள் நீங்களே! இச்சமயம் நீங்கள் இந்த உலகத்தை தன்னுடைய ராஜ்யமாக மாற்றுகிறீர்கள். கதாநாயகன், கதாநாயகி யின் பாகம் உங்களுடையது. முக்கியமான விஷயம் பாபாவின் நினைவில் இருப்பதாகும். படக் கண்காட்சியில் நன்கு சேவை செய்யக் கூடியவர்கள் பலர் இருக்கின்றனர் என பாபாவிற்குத் தெரியும். ஆனால் நினைவில் மிகவும் பலவீனமாக இருக்கிறார்கள். எப்படி அதிகாலையில் எழுந்து பாபாவிற்கு குட்மார்னிங் சொல்ல வேண்டும் என்ற அறிவு இல்லை. தலைப்புகள் பற்றி நன்கு சிந்திக்கிறார்கள். அது பொதுவானது. தினந்தோறும் புது புது தலைப்புகளைக் கண்டறிந்து, புரிய வைக்கலாம். ஆனால் முக்கியமான விஷயம் பாபாவை அன்புடன் நினைவு செய்தல் ஆகும். அப்போது தான் பாவங்கள் விலகும். குழந்தைகளின் நிலை இவ்வாறு இல்லை என பாபா அறிகிறார். பாபா பெயரைக் கூறவில்லை. ஒரு வேளை பாபா பெயரைக் கூறினால் இப்போதிருக்கும் ஒரு பைசாவின் நிலையில் இருந்து கூட விழுந்து செல்லாத பைசா ஆகிவிடுவார்கள். இந்த ஞானத்தில் புத்திசாலித்தனம் வேண்டும். நீங்கள் வெளிறிப்போய் (பொலிவிழந்து) இருக்கிறீர்கள், நோயாளியாக இருக்கிறீர்கள், என்று யாராவது கூறினால் அதை கேட்டு ஜுரம் அதிகரித்து விடக் கூடாது. இவ்வாறு அரை குறையாக இருக்கக் கூடாது. தைரியம் வேண்டும். சேவை செய்யக் கூடிய குழந்தைகள் மனமுடைந்து போக மாட்டார்கள். அவர்கள் ஆர்வத்துடன் இருப்பார்கள். வேலை தொழில் செய்துக் கொண்டிருந்தாலும் பாபாவின் நினைவிலிருக்க வேண்டும். பாபாவிடம் குட்மார்னிங் சொல்ல வேண்டும். நம்முடையது மிகப்பெரிய குறிக் கோளாகும். ராஜ்ய பதவி அடைய வேண்டும் என்றால் கடின உழைப்பு தேவை. போன கல்பத்தில் மாறியவர்களுக்கு இன்னும் போகப்போக தெரிந்துக் கொண்டே போகும். யாரும் மறைந்திருக்க முடியாது. பள்ளிக் கூடத்தில் டீச்சர் மாணவர்களை அறிந்திருப்பார். மேலும் ரெஜிஸ்டரும் வைக் கிறார்கள். அதன் மூலமாகவும் தெரிய வருகிறது. அதில் முக்கியமான பாடம் மொழியாகும். இதில் முக்கியமான பாடம் நினைவாகும். ஞானம் மிகவும் எளிது. குழந்தைகள் கூட புரிய வைக்கலாம். சிறிய வயதில் தாரணை செய்வதில் புத்தி கூர்மையாக இருக்கிறது. வயதானவர் கள் அவ்வளவு புரிந்துக் கொள்ள முடியாது.

இங்கே குமாரிகளுக்கு பாபா நிறைய மரியாதை வைத்திருக்கிறார். பெயர் ரூபத்தில் மாட்டிக் கொண்டு தலைகீழாக ஆந்தைபோல் ஆகி விடக்கூடாது. இச்சமயம் அனைத்து மனிதர்களும் தலைகீழாக மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு நேராக ஆகும் போது தான் அல்லாவின் குழந்தைகளாகிறார்கள். பரமாத்மாவையும் சர்வவியாபி என்று சொன்னதால் தான் அனைத்து மனிதர்களும் பரமாத்மா விடமிருந்து பாராமுகமாகி இருக்கிறார்கள். சன்னியாசிகள் தானே தன்னுடைய பூஜையை செய்விக் கிறார்கள். இல்லையென்றால் நீங்கள் என் மீது ஏன் மலர்களைப் போடுகிறீர்கள் என கேட்க வேண்டும். அனைத்து சன்னியாசிகளையும் குருவாக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் சன்னியாசி, இவர்கள் குடும்பத் திலிருப்பவர்கள், பிறகு எப்படி ஃபாலோயர்ஸ் (சீடர்கள் அல்லது குருவைப் பின்பற்று பவர்கள்) ஆக முடியும். சன்னியாசி ஆகும் போது தான் ஃபாலோயர்ஸ் எனக் கூற முடியும். பிறகு நீங்கள் உங்களை ஃபாலோயர்ஸ் என கூற முடியாது என்பதை அவர்களுக்கு யாரும் புரிய வைக்க முடியாது. பாபாவும், நீங்கள் ஃபாலோயர் என்று யாரையும் கூற முடியாது. தூய்மையாவதற்கான உத்திரவாதம் கொடுக்கும் போது தான் விஷயம் இருக்கிறது. உறுதி மொழி எடுக்கும் போது, தானே எழுதி அனுப்புகிறார்கள். ஆனால் விழுந்து விடும் போது, முகத்தில் கரியைப் பூசிக் கொள்ளும் போது எழுதுவதில்லை. வெட்கம் வருகிறது. இது மிகப்பெரிய அடியாகும். பிறகு பாபாவிடம் புத்தியோகம் வைக்க முடியாது. பதீதர்களை நாம் வெறுக்கின்றோம். விஷத்தை அருந்தக் கூடியவர்கள் மிகவும் மோசம் என பாபா கூறுகிறார். தூய்மை ஆவது நல்லதல்லவா! நான் வந்தது தூய்மையாக்குவதற்காக அதாவது நான் பவித்திரமாக மாற்றிக் காட்டுகிறேன் என்ற ஒப்பந்தம் எடுக்கிறேன். கல்ப கல்பமாக ஒப்பந்ததாரராகிய என்னை பதீத பாவனா வாருங்கள்! என அழைக்கிறீர்கள். வேறு யாரும் இது போன்ற ஒப்பந்ததாரர் இருக்க முடியாது. என் ஒருவனுக்கு தான் இந்த ஒப்பந்தம் கிடைத்திருக்கிறது. நான் தான் பாவனமான உலகமாக மாற்றுகிறேன். கல்ப கல்பமாக நானே வந்து இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுகிறேன். பிறகு சன்னியாசிகளுக்கு பவித்ரமாக இருந்து பாரதத்தை நிறுத்தக் கூடிய ஒப்பந்தம் கிடைத்திருக்கிறது. ஏனென்றால், அனைத்தையும் விட பவித்ரமாக பாரதம் இருந்தது அதைத் தான் சொர்க்கம் என்கிறார்கள். அங்கே தேவதைகள் சர்வ குணம் நிறைந்தவர்களாக, சம்பூர்ண நிர்விகாரியாக இருந்தார்கள்.

அவர்களுடைய மகிமையைப் பாடுகிறார்கள். இந்த புகழ் வேறு தேசத்தில் கிடையாது. அங்கே சித்திரங்களே இல்லை. இவர்கள் சொர்க்கத்திற்கு அதிபதியாக இருந்தார்கள். லஷ்மி நாராயணனை தேவி தேவதைகள் என்கிறார் கள். மிகவும் அன்போடு பழைய சித்திரங்களை வாங்குகிறார்கள். பகவான் கிருஷ்ணரின் சித்திரத்தைக் கேட்கிறார்கள். எல்லாவற்றையும் விட அதிகமாக பகவான் கிருஷ்ணரை விரும்புகிறார்கள். நான் சதோபிரதானமாக வேண்டும் என்ற ஆர்வம் குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்க வேண்டும். மாயா மிகவும் துடிதுடிக்க வைக்கிறது. ஒரேயடியாக பெயர் ரூபத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். சிவபாபாவை நினைப் பதேயில்லை. பாபா அடிக்கடி, எப்போதும் சிவபாபா நமக்குப் புரிய வைக்கிறார் என புரிந்துக் கொள்ளுங்கள் என புரிய வைக்கிறார். இந்த பிரம்மா எதுவும் பேசுவதில்லை. இருப்பினும் சிவபாபாவை மறந்து பெயர் உருவத்தை (பிரம்மாவை) நினைவு செய்துக் கொண்டே இருக்கிறார்கள். பிறகு அவர்கள் என்ன பதவி அடைவார்கள்?

முதலில் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். பூதங்களை விரட்டுங்கள் என சிவபாபா கூறுகிறார். தேக அபிமானத்தை விரட்டுங்கள். நாம் ஆத்மா மிகவும் இனிமையாக மாற வேண்டும். தேகம் உட்பட தேகத்தின் அனைத்து சம்பந்தங்களையும் மறந்துக் கொண்டே செல்லுங்கள். என்னை நினையுங்கள் என பாபா கூறுகிறார். கைகள் வேலை செய்தாலும் மனதில் என் நினைவு…. நான் பழைய பிரியதர்ஷன். இது போன்று வேறு யாருக்கும் புரிய வைக்க வராது. தந்தை தான் இச்சமயம் வந்து உங்களை ஆன்மீகப் பிரிய தர்ஷினிகளாக மாற்றுகிறார்.

இப்போது நம்முடைய பிரியதர்ஷன் சிவபாபா என உங்களுடைய ஆத்மா அறிகிறது. அவரிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸதியை அடைய வேண்டும். இப்படிப்பட்ட சிவபாபா விற்கு அதிகாலையில் எழுந்து குட்மார்னிங் சொல்ல வேண்டும். நினைக்க வேண்டும். எவ்வளவு நினைக்கிறீர்களோ அவ்வளவு பாவம் விலகிப் போகும். தேக அபிமானம் விலகும். இவ்வாறு பயிற்சி செய்ய செய்ய அந்த மன நிலை வரும். நினைவில் இருந்துக் கொண்டே இருப்பீர்கள். வாடிக்கையாளர் வருவார்கள். அந்த பக்கம் எண்ணம் போகாது. பிறகு அவர்களுக்கும் நான் நினைவில் அமர்ந்திருந்தேன் என தெரிவிப்பீர்கள். மிகவும் மஜா வந்துக் கொண்டே இருக்கும். வாடிக்கை யாளரிடம் வியாபாரம் முடித்ததும் பாபாவின் நினைவில் நீங்கள் கர்மாதீத நிலையை அடைய முயற்சி செய்ய வேண்டும்.

பாபா மிகவும் யுக்திகளைக் தெரிவிக்கிறார். இவருக்கு(பிரம்மா) நிறைய பிரச்சனைகள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். உங்களுக்கு நினைவு செய்வதற்கு நிறைய நேரம் இருக்கிறது. சாப்பிடும் போது சிவபாபாவை நினைவு செய்து அமருகிறார். நாம் இருவரும் இணைந்து சாப்பிடுவோம், பிறகு மறந்து போகிறேன் என்று பாபா தன்னைப் பற்றிக் கூறுகிறார். எல்லோரையும் விட அதிமான சச்சரவுகள் பாபாவிற்கு இருக்கிறது. பாபாவுடன் மிகவும் அன்பு இருக்க வேண்டும். இரவு 12 மணிக்குப் பிறகு ஏ.எம் ஆரம்பமாகிறது. இரவு சீக்கிரம் தூங்குங்கள். பிறகு சீக்கிரம் எழுந்து நினையுங்கள். எழுந்ததும் பாபா குட்மார்னிங்! என்று கூறுங்கள். வேறு எந்த பக்கமும் புத்தி போகக் கூடாது. பாபாவிற்கு ஒவ்வொரு குழந்தையைப் பற்றியும் தெரியும். உங்களுடைய எதிர்காலத்திற்காக மிகப்பெரிய வருமானம். கல்ப கல்பமாக இந்த வருமானம் பயன்படும். எந்த விதமான பூதமும் வரக் கூடாது. கோபம் கூட குறைந்தது இல்லை. மோகமும் மோசமானது. எவ்வளவு முடியுமோ தந்தை யின் நினைவில் அமர்ந்து பாவனமாக வேண்டும். எப்படி தந்தை ஞானக் கடலாக இருக் கிறாரோ குழந்தைகளும் அவ்வாறு மாற வேண்டும். ஆனால் கடல் ஒன்று தான் அல்லவா! மற்ற அனைத்தையும் நதிகள் என்பார்கள். கோபம் இரண்டாவது நம்பர் எதிரியாகும். மிகவும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. ஒருவருக்கொருவரின் மனதை எரிக்கிறார்கள். பேராசைக்காரர்களும் ஒருவருக்கொருவரின் மனதை எரிக்கிறார்கள். மோகத்தின் பூதம் மிகவும் நாசம் செய்விக்கிறது. மோகத்தின் காரணமாக சிவபாபாவின் நினைவு மறந்து தன்னுடைய குழந்தைகளை நினைவு செய்துக் கொண்டே இருக்கிறார்கள். பற்றுதலிலிருந்து விடுபட்டவர்கள் தான் நினைவில் இருப்பார்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய்க் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் வரிசைக் கிரமத்தில் முயற்சிக்கேற்ப அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. நன்கு சேவை செய்வதன் கூடவே அன்புடன் இதயப் பூர்வமாக நினைவு செய்ய வேண்டும். அதிகாலையில் எழுந்து அன்புடன் பாபா குட்மார்னிங் என்று கூற வேண்டும். கர்மம் செய்தாலும் நினைவில் இருக்கப் பயிற்சி செய்ய வேண்டும்.

2. எந்த ஒரு தேகதாரியின் பெயர் ரூபத்திலும் மாட்டிக் கொள்ளக் கூடாது. ஞானச் சிந்தனையில் இருக்க வேண்டும். வீண் விஷயங்களைப் பேசக் கூடாது.

வரதானம்:-

அலைகளில் தவிக்கும் அல்லது மூழ்கிக் கொண்டிருக்கும் ஆத்மாவிற்கு ஒரு சிறு இலையின் உதவியைத் தேடுவது போன்று துக்கத்தின் ஒரே ஒரு அலை வந்தால் பிறகு பாருங்கள், சுகம்-சாந்தியை யாசித்துக் கொண்டு பல ஆத்மாக்கள் உங்களிடம் வருவார்கள். இவ்வாறு தாகத்துடன் இருக்கும் ஆத்மாக்களின் தாகத்தை தீர்ப்பதற்கு தன்னை அதீந்திரிய சுகம் மற்றும் அனைத்து சக்திகள், அனைத்து பொக்கிஷங்களினால் நிறைத்துக் கொள்ளுங்கள். அனைத்து பொக்கிˆங்களும் அந்த அளவிற்கு நிறைந்து இருக்க வேண்டும், அதன் மூலம் தனது ஸ்திதியும் நிலையாக இருக்க வேண்டும், மேலும் மற்ற ஆத்மாக் களையும் சம்பன்னமாக ஆக்கி விட வேண்டும்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top