01 June 2021 TAMIL Murali Today – Brahma Kumaris
31 May 2021
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! இந்த முழு உலகமும் ஈஸ்வரிய குடும்பமாகும், அதனால் தான் நீங்கள் தாய், தந்தையாக இருக்கிறீர்கள், நாங்கள் உங்களது குழந்தைகள் என்று மகிமை பாடுகின்றனர். இப்போது நீங்கள் நடைமுறையில் இறை குடும்பத்தினர்களாக ஆகியிருக்கிறீர்கள்.
கேள்வி: -
தந்தையிடமிருந்து 21 பிறவிகளுக்கு முழு ஆஸ்தி அடைவதற்கான எளிய விதி என்ன?
பதில்:-
சங்கமத்தில் சிவபாபாவை தனது வாரிசாக ஆக்கிக் கொள்ளுங்கள். உடல், மனம், பொருளால் பலியாகி விடும் போது 21 பிறவிகளுக்கு முழு ஆஸ்தி பலனாக கிடைத்து விடும். எந்த குழந்தைகள் சங்கமத்தில் தனது பழையவைகள் அனைத்தையும் காப்பீடு (இன்சூர்) செய்கிறார்களோ அதற்கு கைமாறாக நான் 21 பிறவிகள் வரை கொடுக்கிறேன் என்று பாபா கூறுகின்றார்.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
கண் பார்வை இல்லாதவர்களுக்கு வழி காண்பியுங்கள் …….
ஓம் சாந்தி. குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள். பக்தர்கள் பகவானை அழைக்கின்றனர். பகவானை முழுமையாக அறியாத காரணத்தினால் மனிதர்கள் எவ்வளவு துக்கமானவர்களாக இருக்கின்றனர்! பக்தி மார்க்கத்தில் எவ்வளவு கடின உழைப்பு செய்து கொண்டிருக்கின்றனர்! இந்த வாழ்க்கைக்கான விசயம் மட்டுமேயன்றி எப்போது பக்தி ஆரம்பமானதோ அப்போதிலிருந்தே ஏமாற்றம் அடைந்து கொண்டே இருக்கின்றனர். பாரதத்தில் தான் தேவி தேவதை களின் இராஜ்யம் இருந்தது. அது தான் சொர்க்கம், சத்தியமான கண்டம் (தேசம்) என்று கூறப்படுகிறது. பாரதத்தின் மகிமை மிகவும் உயர்ந்தது, ஏனெனில் பரம்பிதா பரமாத்மாவின் பிறப்பிடமாகும். அவரது உண்மையான பெயர் சிவன். சிவஜெயந்தி கொண்டாடுகின்றனர். ருத்ரன் அல்லது சோமநாத ஜெயந்தி என்று கூறுவது கிடையாது. சிவஜெயந்தி அல்லது சிவராத்திரி என்று கூறப்படுகிறது. சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர் ஒரே ஒரு தந்தை ஆவார். அனைத்து பக்தர்களின் பகவான் அவசியம் ஒருவராகத் தான் இருக்க வேண்டும். அனைவரும் கண் பார்வையற்றவர்களாக இருக்கின்றனர், அதாவது ஞானக் கண்ணில்லா தவர்களாக இருக்கின்றனர். பகவானின் மகாவாக்கியம் – நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன். ஸ்ரீமத் பகவத் கீதை முக்கியமானது. ஸ்ரீ என்றால் சிரேஷ்ட வழியாகும். இப்போது நீங்கள் புத்திவான்களாக ஆக்கப்படுகிறீர்கள். தெய்வீகக் கண் என்றால் ஞானம் என்ற மூன்றாவது கண் காண்பிக்கின்றனர். உண்மையில் ஞானம் என்ற மூன்றாவது கண் பிராமணர்களாகிய உங்களுக்குக் கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் தந்தையை மற்றும் தந்தையின் படைப்புகளைப் பற்றிய முதல், இடை, கடையை அறிந்து கொள்கிறீர்கள். இந்த நேரத்தில் அனைவரிடத்திலும் தேக அகங்காரம் அல்லது 5 விகாரங்கள் உள்ளன, அதனால் தான் காரிருளில் இருக்கின்றனர். குழந்தைகளாகிய உங்களிடத்தில் ஒளி இருக்கிறது. உங்களது ஆத்மா முழு உலகின் சரித்திர, பூகோளத்தை அறிந்து கொண்டுள்ளது. முன்பு நீங்கள் அனைவரும் அஞ்ஞானத்தில் இருந்தீர்கள். ஞானக் கண்மை சத்குரு கொடுத்தார், அஞ்ஞான இருள் நீங்கி விட்டது. யார் பூஜைக்குரியவர்களாக இருந்தார்களோ அவர்களே பூஜாரிகளாக ஆகிவிட்டனர். பூஜைக்குரியவர்கள் ஒளியில் (சத்ய திரேதாவில்) இருந்தனர். பூஜாரிகள் இருளில் (துவாபர், கலியுகத்தில்) இருக்கின்றனர். பரமாத்மாவை நீங்களே பூஜைக்குரியவர், நீங்களே பூஜாரி என்று கூற முடியாது. அவர் பரம பூஜைக்குரியவர் ஆவார். அனைவரையும் பூஜைக்குரியவராக ஆக்கக் கூடியவராவார். அவர் பரம பூஜ்யமானவர் என்று கூறப்படுகிறார். பரம்பிதா பரம் ஆத்மா என்றால் பரமாத்மா. கிருஷ்ணரை இவ்வாறு கூறுவது கிடையாது. அவரை அனைவரும் பரம்பிதா என்று கூற மாட்டார்கள். நிராகார இறைவனைத் தான் அனைவரும் பரம்பிதா என்று கூறுகின்றனர். அவரும் ஆத்மா தான், ஆனால் பரம் (உயர்ந்தவர்) ஆக இருக்கின்றார். அதனால் தான் அவர் பரமாத்மா என்று கூறப்படுகின்றார். அந்த பரம் ஆத்மா சதா பரந்தாமத்தில் இருக்கக் கூடியவர் ஆவார். ஆங்கிலத் தில் அவரை சுப்ரீம் சோல் (பரம் ஆத்மா) என்று கூறுகின்றனர். தந்தை கூறுகின்றார் – ஆத்மா பரமாத்மாவை விட்டு பிரிந்து வெகு காலம் ஆகிவிட்டது ……. என்று நீங்கள் பாடவும் செய்கிறீர்கள். பரமாத்மா பரமாத்மாவை விட்டு பிரிந்து வெகு காலம் ஆகிவிட்டது என்ற கூறுவது கிடையாது. ஆத்மா தான் பரமாத்மா, பரமாத்மா தான் ஆத்மா என்று கூறுவது தான் முதல் நம்பர் அஞ்ஞானமாகும். ஆத்மாவானது பிறப்பு இறப்பில் வருகிறது. பரமாத்மா மறுபிறப்புகளில் வருவது கிடையாது. பாரதவாசிகளாகிய நீங்கள் சொர்க்கவாசிகளாக இருந்தீர்கள் என்பதை தந்தை அமர்ந்து புரிய வைக்கின்றார். மனிதர்களில் பூஜைக்குரியவர்கள் தேவி தேவதைகள் ஆவர். இவர்கள் அனைவரும் ஈஸ்வரிய குடும்பமாகும். ஈஸ்வரன் படைப்பவர் ஆவார். நீங்கள் தான் தாய், தந்தை, நாங்கள் உங்களது குழந்தைகள் ……. என்று பாடப்படுகிறது. ஆக குடும்பம் ஆகிவிடுகிறது அல்லவா! நல்லது, தாய், தந்தை என்று நீங்கள் யாரை கூறுகிறீர்கள்? இவ்வாறு கூறுவது யார்? ஆத்மா தான் தாய், தந்தை….. என்று கூறுகிறது. உங்களது கருணையினால் எங்களுக்கு சொர்க்கம் என்ற சுகமான பூமி கிடைத்திருந்தது. தாய், தந்தையாகிய நீங்கள் வந்து சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறீர்கள். ஆக நாங்கள் உங்களது குழந்தைகளாக ஆகின்றோம். நான் சங்கமத்தில் வந்து தான் புது உலகிற்காக இராஜயோகம் கற்பிக் கிறேன் என்று தந்தை கூறுகின்றார். மனிதர்களின் புத்தி முற்றிலும் கீழானதாக ஆகிவிட்டது. சொர்க்கத்தை நரகம் என்று புரிந்து கொள்கின்றனர். அங்கும் கம்சன், ஜராசந்தன், ஹிரண்யன் போன்றவர்கள் இருந்தனர் என்று கூறுகின்றனர். நீங்கள் மறந்து விட்டீர்களா என்ன? என்று தந்தை வந்து புரிய வைக்கின்றார். எனது சிவஜெயந்தியையும் நீங்கள் பாரதத்தில் தான் கொண்டாடுகிறீர்கள். சிவராத்திரி என்று பாடப்பட்டிருக்கிறது. எந்த ராத்திரி? இந்த பிரம்மாவின் எல்லையற்ற ராத்திரி ஆகும். தந்தை சங்கமத்தில் வந்து இரவை பகலாக அதாவது நரகத்தை சொர்க்கமாக ஆக்குகிறார். சிவராத்திரி என்பதன் அர்த்தம் யாருக்கும் தெரியவில்லை. பகவான் நிராகாரமானவர். மனிதர்களுக்கு பிறவி பிறவியாக சரீரத்தின் பெயர் மாறுகிறது. எனக்கு சரீரத்தின் பெயர் எதுவும் கிடையாது என்று பரமாத்மா கூறு கின்றார். எனது பெயரே சிவன். நான் வயோதிக, வானபிரஸ்த சரீரத்தை ஆதாரமாக எடுத்துக் கொள்கிறேன். இவர் பூஜைக்குரியவராக இருந்தார், இப்போது பூஜாரியாக ஆகி விட்டார். சிவபாபா வந்து சொர்க்கத்தை படைக்கின்றார், நாம் அவரது குழந்தைகள் எனில் அவசியம் நாம் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக வேண்டும் அல்லவா! சிவபாபா உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆவார். பிரம்மா, விஷ்ணு, சங்கருக்கும் அவரவர்களுக்கென்று நாடகத்தில் பாகம் இருக்கிறது. ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அவரவர்களுக்கான சுகம், துக்கத்தின் பாகம் பதிவாகியிருக்கிறது. நாம் சிவபாபாவின் வாரிசாக ஆகியிருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். சிவபாபா சொர்க்கவாசிகளாக ஆக்கியிருந்தார், அதனால் தான் அவரை அனைவரும் நினைவு செய்கின்றனர். ஓ பரம்பிதா! கருணை காட்டுங்கள்! சாதுக்களும் சாதனை செய்கின்றனர், ஏனெனில் இங்கு அதிக துக்கம் இருப்பதால் நிர்வாண் தாமம் (முக்திக்கும்) செல்ல விரும்புகின்றனர். ஆத்மா பரமாத்மாவிடம் ஐக்கியமாகி விடும் அல்லது ஆத்மா தான் பரமாத்மா என்று புரிந்து கொள்வது தவறாகும். ஆத்மாக்களாகிய நாம் பரந்தாமத்தில் வசிக்கக் கூடியவர்கள், பிறகு தேவதா குலத்திற்கு வருவோம், பிறகு 84 பிறவிகள் எடுப்போம் என்று இப்போது நீங்கள் கூறுகிறீர்கள். ஆத்மாக்களாகிய நாம் வர்ணங்களில் வருகிறோம். சிவபாபா பிறப்பு, இறப்பில் வருவது கிடையாது. நாராயணனின் இராஜ்யம் மட்டுமே இருந்தது. எவ்வாறு கிறிஸ்தவ தர்மத்தில் முதலாம் எட்வர்ட், இரண்டாம் எட்வர்ட், மூன்றாம்…. என்று நடை பெற்றதோ அதே போன்று அங்கும் முதலாம் லெட்சுமி நாராயணன், இரண்டாம் லெட்சுமி நாராயணன், மூன்றாம் லெட்சுமி நாராயணன் என்று 8 சாம்ராஜ்யம் நடைபெறும். இப்போது பிராமணர்களாகிய உங்களுக்கு மூன்றாவது கண் திறக்கப்பட்டிருக்கிறது. தந்தை அமர்ந்து ஆத்மாக்களிடத்தில் உரையாடல் செய்கிறார். நீங்கள் இவ்வாறு 84 பிறவிச் சக்கரத்தில் இத்தனை இத்தனை பிறப்புகள் எடுத்து வந்தீர்கள். வர்ணங்களின் சித்திரத்தையும் உருவாக்குகிறீர்கள் லி அதில் தேவதா, சத்ரிய, வைஷ்ய, சூத்ர, பிராமணர்களை உருவாக்குகிறீர்கள். நாம் பிராமணர்கள் குடுமி போன்றவர்கள் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். இந்த நேரத்தில் நாம் நடைமுறையில் ஈஸ்வரிய வம்சத்தினர்களாக இருக்கிறோம். இந்த எளிய இராஜயோகம் மற்றும் ஞானத்தின் மூலம் நமக்கு சுகமான உலகம் கிடைக்கிறது. சிலர் சூரியவம்ச இராஜ்யத்தின் ஆஸ்தி அடை கின்றனர், சிலர் சந்திர வம்சத்தின் ஆஸ்தி அடைகின்றனர். முழு இராஜ்யமும் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் அவரவர்களது முயற்சியின் படி அந்த பதவி அடைவார்கள். நான் படித்துக் கொண்டி ருக்கும் போதே சரீரத்தை விட்டு விட்டால் என்ன பதவி கிடைக்கும்? என்று யாராவது கேட்டால் பாபாவினால் கூறி விட முடியும். நினைவின் மூலம் ஆயுள் அதிகரிக்கும், விகர்மங்கள் விநாசம் ஆகும். தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மை ஆவதற்கு வேறு எந்த உபாயமும் கிடையாது. பதீத பாவன் என்று கூறியதும் பகவானின் நினைவு வருகிறது. ஆனால் பகவான் யார்? என்பதை அறிய வில்லை. நான் பாரதத்தில் தான் வருகிறேன் என்று தந்தை கூறுகின்றார். இது எனது பிறப்பிடமாகும். சோமநாத் கோவில் எவ்வளவு கம்பீரமாக இருக்கிறது! இதை தந்தை அமர்ந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். பிறகு பக்தி மார்க்கத்தில் நினைவுச் சின்னத்தை உருவாக்க ஆரம்பித்து விடுகின்றனர். எப்போது பூஜாரிகளாக ஆகிறீர்களோ அப்போது முதன் முதலில் சோமநாதரின் கோவிலை உருவாக்குகிறீர்கள். பாரதம் சத்யுகம், திரேதாவில் மிகுந்த செல்வமிக்கதாக இருந்தது. கோவில்களிலும் அளவற்ற செல்வம் இருந்தது. பாரதம் வைரத்திற்குச் சமமாக இருந்தது. இப்போது பாரதம் சோழி போன்று ஏழையாக ஆகிவிட்டது. மீண்டும் தந்தை வந்து பாரதத்தை வைரம் போன்று ஆக்குகின்றார். படைப்பவர் யார்? என்று யாரிடத்தில் வேண்டுமென்றாலும் கேளுங்கள். பரமாத்மா என்று கூறுவர். அவர் எங்கு இருக்கிறார்? அவர் சர்வவியாபி என்பார்கள். இந்த முழு மரமும் இற்றுப் போன நிலையில் இருக்கிறது என்று தந்தை கூறுகின்றார்.
பாபா, மம்மாவின் இதய சிம்மாசனத்தில் அமருமளவிற்கு நான் தகுதியானவனாக ஆகியிருக் கிறேனா? என்று தன்னைப் பாருங்கள். இது தூய்மையற்ற உலகமாகும். முக்கிய மானது தூய்மை யாகும். இப்போது ஆரோக்கியமும் கிடையாது, செல்வமும் கிடையாது, மகிழ்ச்சியும் கிடையாது. இது கானல் நீர் போன்ற இராஜ்ய மாகும். இதைப் பற்றியும் சாஸ்திரத்தில் துரியோதனனின் கதை எழுதப்பட்டிருக்கிறது. விகாரிகள் தான் துரியோதனன் என்று கூறப்படுகின்றனர். எங்களுக்கு கௌரவம் கொடுங்கள் என்று திரௌபதிகள் கூறு கின்றனர். அனைவரும் திரௌபதிகள் அல்லவா! அனைத்து பெண் குழந்தைகளும் சொர்க்கத் தின் வாயிலாக இருக்கின்றனர். பாபா எவ்வளவு நல்ல முறையில் புரிய வைக்கின்றார்! யாருடைய புத்தியோகம் முழுமையாக ஈடுபட்டிருக்கிறதோ அவர்களுக்கு தாரணையும் ஏற்படும். பிரம்மச்சரிய சமயத்தில் தான் ஞானம் கற்பிக்கப்படுகிறது. இல்லறத்தில் இருந்தாலும் தாமரை மலர் போன்று இருக்க வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். இரண்டு பக்கமும் இருக்க வேண்டும். அவசியம் வாழ்ந்து கொண்டே இறக்கவும் வேண்டும். இறக்கும் தருவாயில் மனிதர்களுக்கு மந்திரம் கொடுப்பர். நீங்கள் அனைவரும் இறக்கக் கூடியவர்கள் என்று தந்தை கூறுகின்றார். நான் காலனுக்கெல்லாம் காலனாக இருக்கிறேன், அனைவரையும் அழைத்துச் செல்பவன். ஆக குஷி ஏற்பட வேண்டும் அல்லவா! பிறகு யார் நன்றாக படிப்பார்களோ அவர்கள் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆவார்கள். படிக்க வில்லையெனில் பிரஜை பதவி அடைவார்கள். இராஜ்ய பதவி அடைவதற்காக நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். இது படிப்பாகும், இதில் குருட்டு நம்பிக்கைக்கான விசயமே கிடையாது. இந்த படிப்பு இராஜ்யத்திற்கானது. வக்கீல் ஆக வேண்டும் என்று படிப்பின் இலட்சியம் வைக்கின்றனர் எனில் கற்பிக்கும் ஆசிரியரிடத்தில் தொடர்பு அவசியம் வைத்துக் கொள்ள வேண்டும். இங்கு பகவான் உங்களுக்கு கற்பிக்கின்றார் எனில் அவரிடத்தில் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். நான் பரந்தாமம், வெகு தொலைவிலிருந்து வருகிறேன் என்று தந்தை கூறுகின்றார். பரந்தாமம் எவ்வளவு தொலைவில் இருக்கிறது! சூட்சுமவதனத்தை விட உயரத்தில் இருக்கிறது, அங்கிருந்து வருவதற்கு எனக்கு ஒரு விநாடி தான் ஆகிறது. அவரை விட வேகமானவர் வேறு யாரும் இருக்க முடியாது. விநாடியில் ஜீவன்முக்தி கொடுக்கின்றார். ஜனகரின் உதாரணம் இருக்கிறது அல்லவா! இப்போது நரகம், பழைய உலகமாகும். புது உலகம் தான் சொர்க்கம் என்று கூறப்படுகிறது. தந்தை நரகத்தை விநாசம் செய்வித்து சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்குகின்றார். மற்ற அனைத்து ஆத்மாக்களும் சாந்திதாமத்திற்குச் சென்று விடும். ஆத்மா அழிவற்றது. அதற்கு கிடைத்திருக்கும் பாகமும் அழிவற்றது ஆகும். பிறகு ஆத்மா சிறியதாக, பெரியதாக எப்படி ஆக முடியும்? அதாவது எப்படி எரிந்து, இறக்க முடியும்? இருப்பதோ நட்சத்திரம் போன்று! பெரியதாக, சிறியதாக ஆக முடியாது. இப்போது நீங்கள் இறை தந்தையின் மாணவர்கள். இறை தந்தை ஞானம் நிறைந்தவர், ஆனந்தமயமானவர். அவர் உங்களுக்கு கற்பித்துக் கொண்டிருக் கின்றார். இந்த படிப்பின் மூலம் நாம் தேவி தேவதைகளாக ஆவோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் பாரதத்திற்கு சேவை செய்து கொண்டி ருக்கிறீர்கள். முதன் முதலில் தந்தையி னுடையவர்களாக ஆக வேண்டும். மற்ற இடங்களில் குருக்களிடத்தில் செல்கின்றனர், அவர் களுடையவர்களாக ஆகின்றனர் அதாவது அவரை தனது குருவாக ஆக்கிக் கொள்கின்றனர். இங்கு இருப்பது தந்தை. ஆக முதலில் தந்தை யின் குழந்தையாக ஆக வேண்டும். தந்தை குழந்தைகளுக்கு தனது சொத்தை கொடுப்பார். தந்தை கூறுகின்றார் லி குழந்தைகளே! நீங்கள் பண்டமாற்றம் (எக்ஸ்சேஞ்) செய்யுங்கள். உங்களது சோழி போன்றவை அனைத்தும் என்னுடையது, என்னுடைய அனைத்தும் உங்களுடையது. தேக சகிதமாக என்னவெல்லாம் இருக்கிறதோ அவை அனைத்தையும் என்னிடம் கொடுத்து விடுங்கள். நான் உங்களது ஆத்மா மற்றும் சரீரம் இரண்டையும் தூய்மையாக்கி விடுவேன். மேலும் இராஜ்ய பதவியும் கொடுப்பேன். உங்களிடத்தில் என்னவெல்லாம் இருக்கிறதோ நீங்கள் பலியாக்கி விட்டால் ஜீவன்முக்தி கிடைக்கும். பாபா, இவை அனைத்தும் உங்களுடையது. என்னை நீங்கள் வாரிசாக ஆக்குங்கள் என்று தந்தை கூறுகின்றார். நான் உங்களுக்கு 21 பிறவிகளுக்கு வாரிசாக ஆக்குகிறேன். எனது வழிப்படி மட்டுமே நடங்கள். தொழில் போன்றவைகள் செய்யுங்கள். வெளி நாட்டிற்குச் செல்லுங்கள், எது வேண்டுமென்றாலும் செய்யுங்கள். எனது வழிப்படி நடந்தால் போதும். மாயை அடிக்கடி போரில் வீழ்த்தும், எச்சரிக்கையுடன் இருங்கள். எந்த விகர்மமும் செய்யக் கூடாது. ஸ்ரீமத் படி நடந்தால் சிரேஷ்டமாக ஆவீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
இப்போது உங்களுக்கு ஞானத்தின் மூன்றாவது கண் கிடைத்துள்ளது. ஆகவே அனைத்தையும் அறிந்து கொண்டு விட்டீர்கள். முழு சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றி நாம் இப்போது அறிந்துள்ளோம். இவையனைத்தும் பக்தி மார்க்கத்தின் விஷயங்கள். உங்களுக்கு முதலிலேயே தெரிந்திருந்தது, அதாவது, தீயதைக் கேட்காதீர்கள்…….. இந்தச் சித்திரம் ஏன் உருவாக்கப்பட்டுள்ளது? உலகத்தில் யாருமே இதன் அர்த்தத்தை அறிந்திருக்க வில்லை. எப்படி பாபா ஞானம் நிறைந்தவராக இருக்கிறாரோ, அதுபோல் குழந்தைகள் நீங்களும் ஞானம் நிறைந்தவர்களாக நம்பர்வார் புருஷார்த்தத்தின் அனுசாரம் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு சிலருக்கோ அதிக நஷா ஏறுகின்றது. ஆஹா! பாபாவின் குழந்தை ஆகி பிறகு பாபாவிடம் முழு ஆஸ்தி பெறவில்லை என்றால் (இதுவரை) என்ன செய்தீர்கள்? தினம் இரவில் தனது கணக்கைப் பார்க்க வேண்டும். பாபா வியாபாரி அல்லவா? வியாபாரிகளுக்கு தினமும் கணக்கு பார்ப்பது சகஜமாக உள்ளது. அரசாங்க அலுவலருக்கு கணக்கைப் பார்க்க வராது. அவர்கள் வியாபாரியாக இருப்பதும் இல்லை. வியாபாரிகள் நன்றாகப் புரிந்து கொள்வார்கள். நீங்கள் வியாபாரிகள். நீங்கள் தங்களின் இலாப-நஷ்டம் பற்றிப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். தினந்தோறும் கணக்கைப் பாருங்கள். விருப்பத்தை நிறைவேற்றுவதில் விழிப்போடிருங்கள். நஷ்டமா, இலாபமா? வியாபாரி அல்லவா நீங்கள்? பாடல் உள்ளது இல்லையா – பாபா வியாபாரி, இரத்தின வியாபாரி! அழிவில்லா ஞான இரத்தினங்களின் வியாபாரம் தருகிறார். இதையும் நீங்கள் அறிவீர்கள் – நம்பர்வார் புருஷார்த்தத்தின் அனுசாரம். அனைவருமே கூர்மையான புத்தியுள்ளவர் களல்ல. ஒரு காதினால் கேட்கின்றனர், பிறகு மற்றொன்றின் மூலம் வெளியேற்றி விடு கின்றனர். பையில் உள்ள துவாரத்தின் வழியாக வெளிவந்து விடுகின்றது. பை நிரம்பு வதில்லை. பாபா சொல்கிறார், செல்வத்தைக் கொடுப்பதால் செல்வம் குறைவதில்லை. இது அழியாத ஞான இரத்தினங்கள் இல்லையா? பாபா ரூப்-பஸந்தாக உள்ளார். ஆத்மா வுக்குள் ஞானம் நிரப்பப்படுகின்றது. அதற்கு ரூபம் உள்ளது. ஆத்மா சிறியதாக இருக் கலாம். ரூபமோ உள்ளது தானே? அது அறிந்து கொள்ளப்படுகின்றது. சோமநாதருக்கு பக்தி செய்கின்றனர் என்றால் இவ்வளவு சிறிய நட்சத்திரத்திற்கு என்ன பூஜை செய்வார் கள்? பூஜைக்காக எவ்வளவு லிங்கங்களை உருவாக்குகின்றனர்! சிவலிங்கத்தைக் கூரையை தொடும் அளவுக்குப் பெரிது-பெரிதாகவும் தயாரிக்கின்றனர். சிறியதாகத் தான் உள்ளது என்றாலும் பதவியோ உயர்ந்தது இல்லையா?
பாபா கல்பத்திற்கு முன்பும் கூட சொல்லியிருந்தார், இந்த ஜபம், தபம் முதலியவற்றால் எந்த ஒரு பிராப்தியும் கிடைப்பதில்லை. இவை அனைத்தையும் செய்தாலும் கீழே இறங்கியே செல்கின்றனர். பிறவிகளின் ஏணிப்படியில் கீழே தான் இறங்குகின்றனர். உங்களுக்கோ இப்போது உயரும் கலை. பிராமணர்களாகிய நீங்கள் முதல் நம்பர் ஜின் பூதமாக இருக்கிறீர்கள். கதை உள்ளது இல்லையா – ஜின் பூதம் சொன்னது, எனக்கு வேலை கொடு, இல்லையென்றால் உன்னை விழுங்கிவிடுவேன் என்று. அதற்கு வேலை கொடுக்கப்பட்டது – ஏணிப்படியில் ஏறி, இறங்கிக் கொண்டே இரு என்று. ஆக அதற்கு வேலை கிடைத்துவிட்டது. பாபாவும் சொல்லியிருக்கிறார், இந்த எல்லை யற்ற ஏணிப்படியில் நீங்கள் கீழிறங்குகிறீர்கள், பிறகு ஏறுகிறீர்கள். நீங்கள் தான் முழு ஏணிப்படியிலும் இறங்குகிறீர்கள், பிறகு ஏறுகிறீர்கள். ஜின் நீங்கள் தான். மற்ற யாருமே முழு ஏணிப்படியில் ஏறுவதில்லை. முழு ஏணிப்படியின் ஞானம் கிடைப்பதால் நீங்கள் எவ்வளவு உயர்ந்த பதவி பெறுகிறீர்கள்! பிறகு கீழிறங்குகிறீர்கள். ஏறுகிறீர்கள். பாபா சொல்கிறார் – நான் உங்களுடைய தந்தை. நீங்கள் என்னைப் பதீத-பாவனர் எனச் சொல்கிறீர்கள் இல்லையா? நான் சர்வசக்திவான், ஆல்மைட்டி. ஏனென்றால் நான் ஆத்மா எப்போதுமே 100 சதவிகிதம் பவித்திரமாக இருக்கிறேன். நான் பிந்தி ரூப அத்தாரிட்டி. அனைத்து சாஸ்திரங்களின் இரகசியத்தை அறிவேன். இது எவ்வளவு பெரிய அதிசயம்! இது அனைத்தும் அற்புதமான ஞானம். இது போல் கேட்டிருக்க முடியாது, அதாவது ஆத்மாவுக்குள் 84 பிறவிகளின் அழியாத பாகம் அடங்கியுள்ளது. அது ஒருபோதும் தேய்வதில்லை. நடந்துக் கொண்டே இருக்கிறது. 84 பிறவிகளின் சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. இவ்வளவு சிறிய ஆத்மாவுக்குள் எவ்வளவு ஞானம் உள்ளது. பாபாவிடமும் உள்ளது என்றால் குழந்தைகள் உங்களிடமும் உள்ளது. எத்தனை பார்ட் (பாகம்) நடிக்கிறீர்கள்! இந்தப் பார்ட் ஒருபோதும் அழியாது. ஆத்மாவை இந்தக் கண்களால் பார்க்க இயலாது. அது பிந்தியாக உள்ளது. பாபாவும் சொல்கிறார், நான் அது போல் பிந்தியாக இருக்கிறேன். இதையும் குழந்தைகள் நீங்கள் இப்போது புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எல்லையற்ற தியாகி மற்றும் இராஜரிஷி. எவ்வளவு நஷா ஏற வேண்டும்! இராஜரிஷி முற்றிலும் பவித்திரமாக இருப்பார்கள். இராஜரிஷி எனப்படுபவர்கள் சூரியவம்சி, சந்திரவம்சி-அவர்கள் இங்கே இராஜ்யத்தை அடை கிறார்கள். எப்படி நீங்கள் இப்போது அடைந்து கொண்டிருக்கிறீர்களோ, அதுபோல். இதையோ குழந்தைகள் அறிவார்கள், அதாவது நாம் இப்போது சென்றுக் கொண்டே இருக்கிறோம். படகோட்டியின் கப்பலில் அமர்ந்துள்ளோம். மேலும் இதையும் அறிந்துள் ளோம். இதையும் அறிவீர்கள், இது புருஷோத்தம சங்கமயுகம். நிச்சயமாகச் செல்லவும் வேண்டும். பழைய உலகிலிருந்து புது உலகத்திற்கு, சாந்திதாம் வழியாக. இது சதா குழந்தைகளின் புத்தியில் இருக்க வேண்டும். நாம் சத்யுகத்தில் இருந்தபோது வேறு எந்த ஒரு கண்டமும் கிடையாது. நம்முடைய இராஜ்யம் மட்டுமே இருந்தது. இப்போது மீண்டும் யோகபலத்தினால் தங்களின் இராஜ்யத்தை அடைந்து கொண்டிருக்கிறீர்கள். ஏனென்றால் யோக பலத்தின் மூலம் தான் உலக இராஜ பதவியை அடைய முடியும் எனப் புரிய வைக்கப்பட்டுள்ளது. புஜ பலத்தினால் யாருமே அடைய முடியாது. இது எல்லையற்ற டிராமா. விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டைப் பற்றிய புரிதலை பாபா தான் தருகிறார். ஆரம்பத்திலிருந்து முழு உலகத்தின் சரித்திர- பூகோளத்தைச் சொல்கிறார். நீங்கள் சூட்சுமவதனம், மூலவதனத்தின் இரகசியத்தையும் நல்லபடியாக அறிவீர்கள். ஸ்தூலவதனத்தில் இவர்களின் இராஜ்யம் இருந்தது. நீங்கள் எப்படி ஏணிப்படியில் இறங்கி வருகிறீர்கள் என்பதும் நினைவு வந்துவிட்டது. ஏணிப் படியில் ஏறுவது மற்றும் இறங்குவது என்ற விளையாட்டு குழந்தைகளின் புத்தியில் பதிந்துள்ளது. எப்படி இந்த உலகத்தின் சரித்திர-பூகோளம் திரும்ப திரும்ப நடக்கிறது, இதில் நமது ஹீரோ-ஹீரோயின் பார்ட் இப்போது புத்தியில் உள்ளது. நாம் தான் தோல்வி யடைகிறோம், பிறகு நாம் தான் வெற்றி பெறுகிறோம். அதனால் ஹீரோ-ஹீரோயின் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்!
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1) ஆத்மா மற்றும் சரீரம் இரண்டையும் தூய்மையாக்குவதற்காக தேக சகிதமாக என்ன வெல்லாம் இருக்கிறதோ அதை தந்தையிடம் அர்ப்பணித்து அவரது ஸ்ரீமத் படி நடக்க வேண்டும்.
2) தாய், தந்தையின் இதய சிம்மாசனத்தில் அமர்வதற்கு தன்னை தகுதியானவராக ஆக்கிக் கொள்ள வேண்டும். தகுதியானவராக ஆவதற்கு முக்கியமாக தூய்மையை தாரணை செய்ய வேண்டும்.
வரதானம்:-
ஏதாவதொரு பொருள் சாகாரத்தில் பார்க்கப்படும் பொழுது அது சீக்கிரமாக ஏற்றுக் கொள்ள முடியும். எனவே நிமித்தமாக ஆகி இருக்கும் சிரேஷ்ட (சிறந்த) ஆத்மாக்களின் சேவை, தியாகம், சிநேகம், அனைவரின் ஒத்துழைப்பு தன்மையின் (பிராக்டிகல்) நடைமுறை செயலை பார்த்து என்ன பிரேரணை (உந்துதல்) கிடைக்கிறதோ அதுவே வரதானம் ஆகி விடுகிறது. நிமித்தமாக ஆகி இருக்கும் ஆத்மாக்கள் கர்மம் செய்கையில் அவர்களிடம் இந்த குணங்களின் தாரணையை நீங்கள் பார்க்கும் பொழுது எளிதாக கர்மயோகி ஆவது ஒரு வரதானம் போல கிடைத்து விடுகிறது. யார் இப்பேர்ப்பட்ட வரதானங்களை பெற்றுக் கொண்டே இருக்கிறார்களோ அவர்கள் சுயம் தாங்களும் மாஸ்டர் வரதாதா ஆகி விடுகிறார்கள்.
சுலோகன்:-
மாதேஷ்வரியின் விலை மதிப்பிட முடியாத மகா வாக்கியம்.
உண்மையான தலைவனான பரமாத்மாவிடம் உண்மையானவர் ஆகி இருங்கள்.
இதே நேரத்தில் தான் நமக்கு நிரந்தரமாக என்னுடைய நினைவில் இருங்கள் என்ற கட்டளை பரமாத்மா மூலமாக கிடைத்துள்ளது. யோகம் என்பதன் பொருள் ஈசுவரிய நினைவில் இருப்பது. யோகம் என்பதற்கு தியானத்தில் அமர்வது (தவம்) என்ற அர்த்தம் கிடையாது. நம்முடையது இது சகஜயோகம் ஆகும். நடந்தாலும் சென்றாலும் காரியம் செய்யும் பொழுதும் அவரது நினைவில் இருப்பது – இதற்கு தான் துண்டிக்கப்படாத, இடையறாத (அகண்ட) யோகம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதில் நிரந்தரமாக இருப்பதற்கான அப்பியாசத்தின் அவசியம் உள்ளது. அவருடைய கட்டளைப்படி கீழ்படித லுள்ளவராக இல்லை. ஏதாவது கட்டளையை மீறுபவராக ஆனீர்கள் என்றால் அவசியம் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும். அவருடைய கட்டளையாவது லி எப்படி நான் கர்மம் செய்கிறோனோ என்னை பார்த்து நீங்களும் அடி (ஃபுட் ஸ்டெப்) எடுத்து வையுங்கள். இல்லையென்றால் மாயையிடம் அடி வாங்குவீர்கள். உண்மையான (பாதுˆô) தலைவனிடம் உண்மையாக ஆகி இருங்கள். எந்தவொரு மாயையின் தடை துன்புறுத் தினாலும் தைரியமாக முன்னால் அடி எடுத்து வைக்க வேண்டும். அப்பொழுது அவரது (தந்தையின்) உதவியின் மூலமாக மாயை அகன்று விடும். பாதை தெளிவாகி விடும். பிறகோ எங்கு அமர்த்தினாலும், எப்படி நடத்தினாலும் – பாதை தெளிவாக ஆகி விடும். இது போல துணை அளிப்பதற்கு மிகவும் தைரியம் வேண்டும். அப்பேர்ப்பட்ட மகான் சௌபாக்கியசாலி முற்றிலும் குறைவாகத் தான் வெளிப்படு வார்கள். அவர்கள் வெற்றி மாலையில் செல்வார்கள். மற்றவர்கள் பாக்கியசாலி ஆவார்கள். அவர்கள் கொஞ்ச நஞ்சம் (கிடைத்தை) எடுத்துக் கொண்டு போய் பிரஜைகளாக ஆவார்கள். எனவே கொஞ்சம் கிடைப்பதில் குஷி ஆகி விடாதீர்கள். தங்களது விருப்பமோ சம்பூர்ணம் ஆக வேண்டும் என்பதாக இருக்க வேண்டும். துணிவு கொள்ளுங்கள். முன்னேறி செல்ல வேண்டும். மாயை தடை ஏற்படுத்தும். ஆனால் அதன் மீது வெற்றி பெற வேண்டும். இதில் தவறு செய்தீர்கள் என்றால் அது நம்பிக்கையில் குறைவு என்பதாகும். சிறிது தங்களது தாரணையில் குறைவு ஆகும். இதுவோ தங்களது குற்றமாகும். இதில் சமூக அந்தஸ்து, குலத்தின் மரியாதைகளை ஆகியவற்றை துண்டிக்க வேண்டி வருகிறது. இவற்றை துண்டித்து விடும் பொழுது தான் உண்மையான பரலௌகீகி தெய்வீக மரியாதையை பெறுவீர்கள். இந்த விகாரி உலகமோ போகப் போகிறது. பாருங்கள் மீரா கூட உலக அந்தஸ்தை இழந்தார். அப்பொழுது தான் கிரிதரனை அடைந்தார். அந்த உலக அந்தஸ்தை வைத்துக் கொண்டீர்கள் என்றால் இந்த தெய்வீக உலகத்தினை சேர்ந்தவர்களாக ஆக முடியாமல் இருப்பீர்கள். இப்பொழுது நன்மையின் பொருட்டு ஈசுவரிய ஆலோசனையோ கொடுக்கப்படுகிறது. இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? எது சரியானது? என்று தங்களது புத்தியின் மூலமாக தீர்மானிக்க வேண்டும்.
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!