01 April 2022 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
31 March 2022
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! சத்கதிக்குச் செல்ல வேண்டும் என்றால் பாபா நாங்கள் உங்களை மட்டும் நினைவு செய்து கொண்டே இருப்போம் என்று தந்தையிடம் உறுதிமொழி செய்யுங்கள்.
கேள்வி: -
எந்த முயற்சியின் ஆதாரத்தில் சத்யுக பிறவிக்கு உரிமைக்கான பலன் கிடைக்கிறது?
பதில்:-
இப்பொழுது முழுமையாக ஒன்றும் இல்லாதவர் ஆவதற்கான முயற்சி செய்யுங்கள். பழைய உலகத்திலிருந்து பற்றை விடுத்து எப்பொழுது முழுமையாக ஒன்றுமே இல்லாதவர் (பிச்சைக்கார நிலமை) ஆவீர்களோ அப்பொழுது தான் சத்யுகத்தில் பிறப்பதற்கான பலன் கிடைக்கும். இனிமையான குழந்தைகளே! இப்பொழுது டிரஸ்டி (பொறுப்பாளர்) ஆகுங்கள். பழைய குப்பைக்கூளங்கள் என்னவெல்லாம் உள்ளனவோ அவற்றை மாற்றம் (டிரான்ஸ்ஃபர்) செய்யுங்கள், தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள், அப்பொழுது நீங்கள் சொர்க்கத் திற்கு வந்துவிடுவீர்கள். வினாசம் எதிரில் நிற்கிறது. ஆகையால் இப்பொழுது பழைய மூட்டை முடுச்சுகளை கட்டி வைத்துவிடுங்கள்.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
கள்ளம் கபடமற்றவர் தனிப்பட்டவர்.
ஓம்சாந்தி. நீங்கள் அனைவரும் மாணவர்கள். உயர்ந்ததிலும் உயர்ந்த ஞானக்கடல் தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்றால் அவசியம் குறிப்பெடுக்க வேண்டும். ஏனென்றால் பிறகு திருப்பிப் படிக்க வைக்கப்படுகிறது, பிறருக்குப் புரிய வைப்பதற்குக்கூட எளிதாக இருக்கிறது. இல்லையெனில், மாயை அனேக கருத்துகளை (பாயிண்ட்ஸை) மறக்கச் செய்துவிடும். இந்த சமயம் மாயை இராவணனுடன் குழந்தைகளாகிய உங்களுடைய யுத்தம் நடைபெறுகிறது. எந்தளவு நீங்கள் சிவபாபாவை நினைவு செய்வீர்களோ அந்தளவு மாயை மறக்க வைப்பதற் கான முயற்சி செய்யும். ஞானக்கருத்தைக்கூட மறக்க வைப்பதற்கு முயற்சி செய்யும். அவ்வப் போது மிக நல்ல கருத்துகள் நினைவிற்கு வரும். பின்னர் அங்கே கேட்டது அங்கேயே மறைந்து விடும், ஏனெனில் இது புதிய ஞானம் ஆகும். கல்பத்திற்கு முன்பு கூட இந்த ஞானத்தை பிராமணர்களாகிய உங்களுக்குக் கற்றுக் கொடுத்திருந்தேன் என்று தந்தை கூறுகின்றார். பிரம்மாவின் வாய் மூலம் பிராமணர்களை மட்டும் தன்னுடையவர் ஆக்கு கின்றார். இந்த விஷயங்கள் எதுவும் கீதையில் எழுதப்படவில்லை. சாஸ்திரங்களோ பிற்காலத் தில் உருவாகின்றன. எப்பொழுது தர்மத்தை ஸ்தாபனை செய்கின்றனரோ, அந்த சமயத்தில் அனைத்து சாஸ்திரங்களும் உருவாகுவதில்லை. முதன் முதலில் ஞானம் பின்னர், பக்தி என்பது குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. முதலில் சதோபிரதானம் பிறகு சதோ, ரஜோ, தமோ நிலைக்கு வருகின்றனர். மனிதர்கள் எப்பொழுது ரஜோ நிலைக்கு வருகின்றனரோ அப்பொழுது பக்தி ஆரம்பமாகிறது. சதோபிரதான சமயத்தில் பக்தி நடைபெறுவது இல்லை. நாடகத்தில் பக்தி மார்க்கம் கூட பதிவாகி உள்ளது. இந்த சாஸ்திரங்கள் முதலியவை கூட பக்திமார்க்கத்தில் பயன்படுகின்றன. நீங்கள் இந்த ஞானம் மற்றும் யோகத்தின் புத்தகங்கள் என்ன தயாரிக்கிறீர்களோ, அதை மீண்டும் படித்து புத்துணர்ச்சி அடைவதற்காகவே தயாரிக் கிறீர்கள். மற்றபடி ஆசிரியர் இல்லாமல் எவரும் புரிந்துகொள்ள இயலாது. கீதையின் ஆசிரியர் ஸ்ரீமத் பகவான் ஆவார். அவர் உலகத்தின் படைப்பாளர், சொர்க்கத்தின் படைப்பாளர் ஆவார். அவர் அனைவருடைய தந்தை என்பதால் அவசியம் தந்தையிடமிருந்து சொர்க்க இராஜ்யத்தின் ஆஸ்தி கிடைக்க வேண்டும். சத்யுகத்தில் தேவி தேவதைகளின் இராஜ்யம் நடைபெறுகிறது. இப்பொழுது நீங்கள் சங்கமயுக பிராமணர்கள். விஷ்ணுவின் சித்திரத்தில் நான்கு குலங்களை காண்பிக்கின்றனர் அல்லவா. தேவதை, சத்திரியர், வைஷ்யர், சூத்திரர், ஐந்தாவது குலம் பிராமணர்களுடையது ஆகும்; ஆனால், அவர்களுக்கு இது முற்றிலும் தெரியாது. உயர்ந்ததிலும் உயர்ந்தது பிராமண குலம் ஆகும். உயர்ந்ததிலும் உயர்ந்த பரமபிதா பரமாத்மாவையும் கூட மறந்துவிட்டனர். அவர் தான் சிவன். பிரம்மா, விஷ்ணு, சங்கர் மூவரையும் படைத்தவர். திரிமூர்த்தி பிரம்மா எனக் கூறுகின்றனர். ஆனால் அதன் சரியான அர்த்தம் வெளிப் பட வில்லை. ஒருவேளை பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகிய மூவரும் சகோதரர்கள் என்றால் இவர்களுடைய தந்தை ஒருவர் தான் இருக்க வேண்டும். எனவே பிராமணர், தேவி தேவதை மற்றும் சத்திரியர் ஆகிய மூன்று தர்மங்களின் படைப்பாளர் அந்த நிராகார தந்தையே ஆவார். அவரை கீதையின் பகவான் என்று சொல்லப்படுகிறது. தேவதைகளையே பகவான் என்று சொல்ல முடியாது எனில், மனிதர்களை எவ்வாறு சொல்ல முடியும்? உயர்ந்ததிலும் உயர்ந்தவர் சிவபாபா ஆவார். பிறகு சூட்சுமவதன நிவாசிகள் பிரம்மா, விஷ்ணு, சங்கரர், பிறகு இந்த வதனத்தில் முதன் முதலில் வரக்கூடிய ஸ்ரீ கிருஷ்ணர் ஆவார். முதன் முதலில் சிவஜெயந்தி புகழப்படுகிறது. திரிமூர்த்தி ஜெயந்தி என்று எங்கேயும் காண்பிக்கப்படுவதில்லை. ஏனெனில், மூவருக்கும் பிறப்பு கொடுப்பவர் யார்? என்பது எவருக்கும் தெரியாது. இதை தந்தைதான் வந்து கூறுகின்றார்; உயர்ந்ததிலும் உயர்ந்த அவர் விஷ்வத்தின் எஜமானர், புது உலகத்தின் படைப்பாளர் ஆவார். சொர்க்கத்தில் இலட்சுமி, நாராயணர் இராஜ்யம் செய்கின்றனர். சூட்சும வதனத்தில் இராஜ்யத்தைப் பற்றிய கேள்வியே கிடையாது. இங்கே யார் பூஜைக்குரியவர்களாக ஆகின்றார்களோ அவர்களே பூஜாரி ஆக வேண்டும். தேவதை, சத்திரியர் இப்பொழுது பிறகு பிராமணர் ஆகி உள்ளீர்கள். இந்தக் குலங்கள் பாரதத்தினுடையது மட்டும்தான், வேறு எவரும் இந்தக் குலங்களில் வர இயலாது. இந்த ஐந்து குலங்களில் நீங்கள் மட்டும் சுற்றி வருகிறீர்கள். நீங்கள் 84 பிறவிகளைக்கூட முழுமையாக எடுக்க வேண்டியுள்ளது. தேவி தேவதை தர்மத்தைச் சேர்ந்த பாரதவாசிகளாகிய நாமே 84 பிறவிகள் எடுப்போம் என்பதை நீங்கள் அறிந்திருக் கிறீர்கள். இந்த ஞானம் என்ற மூன்றாவது கண் பிராமணர்களாகிய உங்களுக்கு மட்டும் தான் திறக்கிறது. பிறகு, இந்த ஞானமே மறைந்துவிடுகிறது. பின்னர், கீதை சாஸ்திரம் எங்கிருந்து வந்தது? கிறிஸ்து எப்பொழுது தர்மத்தை ஸ்தாபனை செய்கின்றாரோ அப்பொழுது பைபிளைச் சொல்லவில்லை. அவர் தூய்மையின் சக்தி மூலம் தர்மத்தை ஸ்தாபனை செய்கின்றார். பைபிள் போன்றவை பின்னால் உருவாகின்றன. எப்பொழுது அவரது தர்மம் வளர்ச்சி ஆகிறதோ அப்பொழுது தேவா லயங்களை உருவாக்குகிறார்கள். அவ்வாறே, அரைக்கல்பத்திற்குப் பிறகு பக்தி மார்க்கம் ஆரம்பமாகிறது. முதலில் இருந்தது ஒருவருடைய பக்தி, பிறகு பிரம்மா, விஷ்ணு, சங்கரரை பக்தி செய்தனர். இப்பொழுது பாருங்கள், 5 தத்துவங்களையும் கூட பூஜை செய்து கொண்டிருக்கின்றனர். இதை தமோபிரதான பூஜை என்று சொல்லப்படுகிறது. அதுவும் அவசியம் நடைபெற வேண்டும். பக்திமார்க்கத்தில் சாஸ்திரங்களும் தேவை. தேவி தேவதை தர்மத்தின் சாஸ்திரம் கீதை ஆகும். பிராமண தர்மத்தின் சாஸ்திரம் எதுவும் கிடையாது. இப்பொழுது மகாபாரத யுத்தத்தைப் பற்றிய விவரம் கூட கீதையில் உள்ளது. ருத்ர ஞான யக்ஞத்திலிருந்து வினாச ஜூவாலை வெளிப்பட்டது என்று பாடப்பட்டுள்ளது. எப்பொழுது வினாசம் ஏற்படுமோ அப்பொழுது அவசியம் சத்யுக இராஜ்யம் ஸ்தாபனை ஆகும். எனவே, பகவான் இந்த யக்ஞத்தை படைத்திருக்கின்றார். இதை ருத்ர ஞான யக்ஞம் என்று சொல்லப் படுகிறது. சிவபாபா தான் ஞானம் அளிக்கின்றார். உண்மையில் பாரதத்தின் சாஸ்திரம் ஒன்று தான். எவ்வாறு கிறிஸ்துவின் பைபிள் உள்ளது. அவரது வாழ்க்கைக் கதையை ஞானம் என்று கூறப்படுவதில்லை. நம்முடையதோ ஞானத்தோடு தொடர்புடையது ஆகும். ஞானத்தை அளிப்பவர் கூட ஒருவர் ஆவார். அவரே விஷ்வத்தின் எஜமானர் ஆவார். இதைத்தவிர அவரை பிரம்மாண்டத்திற்கு எஜமானர் என்றும் கூறப்படுகிறது. சிருஷ்டியின் எஜமானராக அவர் ஆவதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் சிருஷ்டியின் எஜமானர் ஆகிறீர்கள். நான் அவசியம் பிரம்மாண்டத்திற்கு எஜமானராக இருக்கின்றேன், குழந்தைகளாகிய உங்களுடன் பிரம்ம லோகத்தில் இருக்கின்றேன் என்று பாபா கூறுகின்றார். எவ்வாறு பாபா அங்கே இருக்கின்றார், நாமும் அங்கே செல்வோம் என்றால் நாமும் எஜமானர் ஆவோம்.
தந்தை கூறுகின்றார்: ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் பிரம்மாண்டத்தில் இருக்கிறீர்கள். எனவே, நானும் மற்றும் நீங்களும் பிரம்மாண்டத்தின் எஜமானர்கள் ஆவோம். ஆனால், உங்களுடைய பதவி என்னுடைய தைவிட உயர்ந்தது ஆகும். நீங்கள் மகாராஜா, மகாராணி ஆகிறீர்கள், நீங்களே பூஜைக்குரிய நிலையிலிருந்து பின்னர் பூஜாரி ஆகிறீர்கள். தூய்மையற்ற வர்களாகிய உங்களை நான் வந்து தூய்மையானவர்களாக ஆக்குகின்றேன். நானோ பிறப்பு, இறப்பு அற்றவர், பிறகு, சாதாரண உடலை ஆதாரமாக எடுத்து சிருஷ்டியின் முதல், இடை, கடை நிலையைப் பற்றிய இரகசியத்தை உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எந்த வித்வான், பண்டிதர் கூட பிரம்மாண்டம், சூட்சும வதனம் மற்றும் சிருஷ்டிச் சக்கரத்தின் இரகசியத்தை அறியவில்லை. ஞானக்கடல், தூய்மையின் கடலானவர் பரமபிதா பரமாத்மா மட்டும் தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் நமக்கு ஞானம் அளிப்பதாலேயே அவருக்கு மகிமை பாடப்படுகிறது. ஒருவேளை ஞானம் கொடுக்கவில்லை என்றால் எவ்வாறு மகிமை பாடப்படும்? அவர் ஒரே ஒரு முறை வந்து குழந்தைகளுக்கு 21 பிறவிகளுக்கு ஆஸ்தி கொடுக்கின்றார். 21 பிறவிகள் என்ற வரம்பு (லிமிட்) உள்ளது, சதா காலத்திற்காகவும் கொடுக்கின்றார் என்பது கிடையாது. 21 தலைமுறை என்றால் 21 பிறவி வயோதிக நிலை வரை என்று பொருள். வயோதிக நிலையையே தலைமுறை என்று கூறப்படுகிறது. 21 தலைமுறைகள் உங்களுக்கு இராஜ்ய பாக்கியம் கிடைக்கிறது. ஒருவருக்குப் பின்னால் 21 பரம்பரை காப்பாற்றப்படும் என்பது கிடையாது. இந்த இராஜயோகத்தின் மூலம் நீங்கள் இராஜாக்களுக்கெல்லாம் இராஜா ஆகிவிடுகிறீர்கள், பிறகு, அங்கே ஞானத்தின் அவசியம் இருக்காது என்பது புரிய வைக்கப்பட்டிருக்கிறது. அங்கே நீங்கள் சத்கதியில் இருக்கிறீர்கள். யார் துர்கதியில் இருக்கிறார்களோ, அவர்களுக்கு ஞானம் தேவையாக உள்ளது. இப்பொழுது நீங்கள் சத்கதிக்குச் செல்கிறீர்கள், மாயை இராவணன் துர்கதியை அடையச் செய்தான். இப்பொழுது சத்கதிக்குச் செல்ல வேண்டுமெனில் தந்தையினுடையவர் ஆக வேண்டும். பாபா, நாங்கள் உங்களை எப்பொழுதும் நினைவு செய்து கொண்டே இருப்போம். தேக அபிமானத்தை விடுத்து நாங்கள் ஆத்ம உணர்வில் இருப்போம், இல்லறத்தில் இருந்து கொண்டே நாங்கள் தூய்மையாக இருப்போம் என்று உறுதிமொழி செய்ய வேண்டும். இது எவ்வாறு இயலும்? என்று மனிதர்கள் கேட்கிறார்கள், இந்தக் கடைசிப் பிறவியில் தூய்மையாகி என்னுடன் தொடர்பை (யோகம்) வைத்துக்கொண்டீர்கள் என்றால் அவசியம் உங்களது விகர்மங்கள் வினாசம் ஆகும் மற்றும் சக்கரத்தை நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள் சக்கரவர்த்தி ராஜா ஆகிவிடுவீர்கள். தந்தையிடமிருந்து அவசியம் சொர்க்க ஆஸ்தி கிடைக்கும். தெய்வீக உலக சாம்ராஜ்யம் உங்களது பிறப்புரிமை ஆகும். அதை நீங்கள் அடைந்து கொண்டிருக்கிறீர்கள். பின்னர், எந்தளவிற்கு யார் உறுதிமொழி செய்கிறார்களோ மற்றும் தந்தைக்கு உதவியாளராக ஆகிறார் களோ….. வினாசம் எதிரில் நிற்கிறது என்பதையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இயற்கை சீற்றங்கள் கூட வந்தே வந்து விட்டது. ஆகையினால், தன்னுடைய பழைய மூட்டை முடிச்சுகள் அனைத்தையும் டிரான்ஸ்ஃபர் செய்து விடுங்கள், நீங்கள் பொறுப்பாளர் ஆகிவிடுங் கள் என்று பாபா கூறுகின்றார். பாபா நகை வியாபாரியாகவும் இருக்கிறார். வணிகம் செய் கின்றார். மனிதர்கள் இறந்துவிடுகிறார்கள் என்றால் அவர்கள் பயன்படுத்திய அனைத்து பொருட்களை யும் வெட்டியானுக்குக் கொடுத்து விடுகின்றனர் அல்லவா. உங்களுடைய இந்த குப்பைக் கூளங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகப் போகப்போகிறது. ஆகையால், பழைய பொருட்கள் மீதிருந்து பற்றை நீக்கி விடுங்கள், முற்றிலும் பிச்சைக்காரர் போன்ற நிலை ஆகுங்கள். ஒன்றும் இல்லாத நிலையிலிருந்து இளவரசன் நிலையை (பதவி) அடைகிறீர்கள். தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள் பிறப்புரிமையாக சொர்க்கத்தின் எஜமானர் ஆகிவிடுவீர்கள். யார் வந்தாலும் விஷ்வத்தின் படைப்பாளர் யார்? என்று அவர் களிடம் கேளுங்கள். இறை தந்தையே ஆவார் அல்லவா! சொர்க்கம் புதிய படைப்பு ஆகும். தந்தை சொர்க்கத்தைப் படைக்கின்றார் எனில், பின் நரகத்தில் ஏன் இருக்க வேண்டும்? சொர்க்கத்தின் எஜமானராக ஏன் ஆவதில்லை? உங்களை மாயை இராவணன் நரகத்தின் சக்கரவர்த்தியாக ஆக்கிவிட்டான். தந்தையோ சொர்க்கத்தின் சக்கரவர்த்தியாக உருவாக்கக் கூடியவர் ஆவார். இராவணன் துக்கம் நிறைந்தவர்களாக்கி விட்டான். எனவே, இராவணனால் தொல்லை அடைந்து அவனை எரிப்பதற்கான முயற்சி செய்கின்றனர், ஆனால், இராவணன் எரிந்து போவதே இல்லை. இராவணன் என்றால் என்ன என்பதை மனிதர்கள் புரிந்து கொள்வ தில்லை. கிறிஸ்து பிறப்பதற்கு 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கீதை சொல்லப்பட்டது என்று கூறுகின்றனர். ஆனால், அந்த சமயத்தில் எந்த தேசியம் (ய்ஹற்ண்ர்ய்ஹப்ண்ற்ஹ்) இருந்தது என்பதை புரிய வைக்க வேண்டும் அல்லவா. மாயை முற்றிலும் தூய்மையில்லாத வர்களாக ஆக்கிவிட்டது. சொர்க்கத்தின் படைப்பாளர் யார்? என்பது எவருக்கும் தெரியாது. நடிகராக இருந்தபோதிலும் நாடகத்தின் படைப்பாளர், இயக்குநரை அறியவில்லை எனில் என்ன சொல்வது! பெரியதிலும் பெரிய யுத்தம் – வினாசத்திற்கான இந்த மகாபாரத யுத்தம் ஆகும். பிரம்மா மூலம் படைத்தல் என்று பாடப்பட்டுள்ளது. கிருஷ்ணர் மூலம் படைத்தல் என்று பாடப்படவில்லை. ருத்ர ஞான யக்ஞம் புகழ் வாய்ந்தது ஆகும். இதிலிருந்து வினாச ஜூவாலை வெளிப்பட்டிருக்கிறது. நான் இந்த ஞான யக்ஞத்தைப் படைத்திருக்கின்றேன் என்று தந்தை சுயம் கூறுகின்றார். நீங்கள் உண்மையான பிராமணர்கள், ஆன்மிக வழகாட்டிகள் ஆவீர்கள். நீங்கள் இப்பொழுது தந்தையிடம் செல்ல வேண்டும். அங்கிருந்து பிறகு இந்த தூய்மை இல்லாத உலகிற்கு வர வேண்டும் இவை (சென்டர்கள்) உண்மையிலும் உண்மையான தீர்த்த ஸ்தலங்கள் ஆகும். சத்தியகண்டத்திற்கு அழைத்துச் செல்லக் கூடியவை ஆகும். அந்த தீர்த்த ஸ்தலங்கள் பொய்யான கண்டத்திற்கானவை. அது உலகாய தேக அபிமானத்தின் யாத்திரை ஆகும். இது ஆத்ம அபிமானியின் யாத்திரை ஆகும்.
புது உலகத்தில் வந்து தங்கத்தாலான மாளிகையை உருவாக்குவோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். கடலிலிருந்து மாளிகை வெளிப்படும் என்பது கிடையாது. உங்களுக்கு மிகுந்த குஷி இருக்க வேண்டும். எவ்வாறு படிக்கும்பொழுது நான் வக்கீல் ஆகப்போகிறேன், இதைச் செய்வேன் போன்ற எண்ணம் வருகிறது அல்லவா! உங்களுக்கும் கூட சொர்க்கத்தில் இத்தகைய மாளிகை கட்டுவேன் என்பது வர வேண்டும். சீதையை அல்லாமல் இலட்சுமியை அவசியம் மணப்பேன் என்று நாம் உறுதிமொழி செய்கிறோம். இதற்கு மிக நன்றாக முயற்சி செய்ய வேண்டும். தந்தை இப்பொழுது உண்மையான ஞானம் அளிக்கின்றார். அதை தாரணை செய்வதன் மூலம் நாம் தேவதை ஆகிக்கொண்டு இருக்கிறோம். ஸ்ரீகிருஷ்ணர் முதல் எண்ணில் வருகிறார். மெட்ரிக் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களின் பட்டியல் செய்தித்தாளில் வெளி வருகிறது அல்லவா. உங்களுடைய (இறை) பள்ளியின் பட்டியல் பற்றியும் கூட பாடப் பட்டுள்ளது. 8 நபர்கள் முழுமையாகத் தேர்ச்சி பெறுகின்றனர். புகழ்வாய்ந்தவர்கள் 8 இரத்தினங் கள் ஆவார்கள். அவர்களே காரியத்திற்குப் பயன்படுகின்றனர். 108 மணி மாலையை அதிகமாக உருட்டுகின்றனர். சிலரோ 16 ஆயிரத்தின் மாலையைக் கூட தயாரிக்கின்றனர். நீங்கள் உழைத்து பாரதத்திற்கு சேவை செய்து இருக்கிறீர்கள், எனவே, அனைவரும் பூஜிக்கின்றனர். ஒன்று பக்த மாலை ஆகும், மற்றொன்று ருத்ர மாலை ஆகும்.
ஸ்ரீமத் பகவத் கீதையே தாய் ஆகும் மற்றும் சிவன் தந்தை ஆவார் என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். தெய்வீக சாம்ராஜ்யத்தில் முதன்முதலில் ஸ்ரீகிருஷ்ணர் பிறப்பெடுக் கின்றார். அவசியம் இராதையும் பிறப்பு எடுத்திருப்பார். வேறு சிலரும் தேர்ச்சி பெற்றிருப்பார் கள். பரமபிதா பரமாத்மாவிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொண்ட (மறந்து விட்ட) காரணத்தால் முழு உலகமும் நாசம் அடைந்துவிட்டது. தங்களுக்குள் அனைவரும் சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்றனர். தந்தையினுடையவர், செல்வந்தர் எவருமே இல்லை. இப்பொழுது நீங்கள் அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிமையான வெகு காலத்திற்குப் பிறகு தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிக குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1. தேக அபிமானத்தை விடுத்து ஆத்ம அபிமானி ஆகி நினைவு யாத்திரையில் நிலைத்து இருக்க வேண்டும். இந்த இறுதிப்பிறவியில் தூய்மை ஆகி தந்தைக்கு முழுமையிலும் முழுமையான உதவியாளர் ஆக வேண்டும்.
2. பழைய பொருட்கள் என்னவெல்லாம் உள்ளனவோ அவற்றிலிருந்து பற்றை நீக்கி டிரஸ்டி ஆகி தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்து, உலகத்தின் எஜமானர் ஆக வேண்டும்.
வரதானம்:-
சத்தியத்தின் அடையாளம் பண்பாடு என்பதை சதா நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் சத்தியத்தின் சக்தி இருக்கிறது எனில் ஒருபோதும் பண்பாட்டுடன் இருப்பதை விட்டு விடாதீர்கள். சத்தியத்தை நிரூபனம் செய்யுங்கள், ஆனால் பண்பாட்டுடன் நிரூபியுங்கள். பண்பாட்டின் அடையாளம் பணிவு. பண்பாடில்லாமல் இருப்பதன் அடையாளம் பிடிவாதம். எனவே பண்பாட்டான பேச்சு மற்றும் நடத்தை இருக்கும் போது தான் வெற்றி கிடைக்கும். இதுவே முன்னேறுவதற்கான சாதனமாகும். சத்தியம் இருந்து பண்பாடு இல்லையெனில் வெற்றி பெற முடியாது.
சுலோகன்:-
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!